(Reading time: 17 - 33 minutes)

என்னதான் எழில் சிரித்துக்கொண்டே கூறினாலும் மயாவை தயக்கமாக ஏறிட்ட விக்கி அவளது கேள்வியான பார்வையைக் கண்டு,”அது வந்து மயா.. அன்னைக்கு அந்த மேப் காணமல் போச்சே.. அது கெடச்சுதா..??”

“இத கேட்கறதுக்கு ஏன் இவ்ளோ தயக்கம்..”,என்ற மயா,”நான் அதை எல்லா இடத்திலேயும் தேடிட்டேன் விக்கி.. பட் எங்க போச்சுன்னே தெரியல..”,என்றாள்..

“ஓ.. எனெக்கென்னெவோ அதை யாராவது எடுத்திருப்பாங்களோன்னு டவுட்..”,என்றான் விக்கி..

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட மயாவும் எழிலும்,”நாங்களும் அதான் நினைக்கிறோம் விக்கி.. பட் யாரையும் சந்தேகப்பட முடியலை..”,என்றாள் மயா..

“நம்ம ஏன் இதைப் பற்றி வ்ருதுஷ் கிட்ட பேசக் கூடாது..”,என்ற விக்கி ஸ்.. ஸ்.. என்ற வண்ணம் சொல்லக் கூடாததை சொல்லிவிட்டது போல் தனது நாவைக் கடித்துக் கொண்டு குழந்தை போல் திரு திருவென முழிக்கத் துவங்கினான்..

அதை பார்த்து சிரித்த மற்ற இருவரும்,”வ்ருதுஷ் டிடெக்டிவ்ன்னு எங்களுக்கும் தெரியும்..”,என்ற எழில்,”இதை பற்றி நாங்க வ்ருதுஷ் கிட்ட சொல்லிருக்கோம் விக்கி.. அவர் கண்டுபிடிக்கறேன்னு சொல்லியிருக்கார்..”,என்றான்..

பேசிக் கொண்டபடியே மலையடிவாரத்தின் கிழக்குப் பகுதியை அடைந்தவர்களின் கண்களுக்கு நூற்றாண்டுகளுக்கு முன் கருங்கல்லால் கட்டப்பட்டிருந்த மலைக் காட்டு வீடுகள் கலை இழந்தாலும் கம்பீரமாய் காட்சியளித்தது..

“ஹேய் இது அந்த பாட்டி சொன்ன கிராமமா இடமாயிருக்குமோ..??”,ஆர்வமாகக் கேட்டாள் மயா..

“ஆமா மயா..அப்படித் தான் நினைக்கிறேன்..”,என்ற எழில் ஒரு வீட்டை நெருங்கி அதன்  திண்ணையில் அப்பாடா என்றமர்ந்தான்..

“என்னடா இப்படி தொப்புன்னு உக்கார்ந்துட்ட.. சுற்றிப் பார்க்க வேண்டாமா..??”

“ஒன் மினிட் மயா..”,என்றவன் தான் கொண்டுவந்திருந்த பையிலிருந்து தனது ஹேண்டி கேமை எடுத்து அந்த இடத்தை வீடியோ எடுக்கத் துவங்கினான்..

“எழில் இந்த வீடுகளெல்லாம் சுமார் நூறு நூற்றி ஐம்பது வருடங்கள் பழமை வாய்ந்ததா இருக்கறமாதிரி இருக்கு.. ஆனால் எப்படி இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கு..”,என்று கேட்டான் விக்கி..

“இது நம்ம தாத்தா காலத்து கட்டிட முறை விக்கி.. நம்ம இப்போ வீடு கட்டும்போது சிமெண்ட் கூட ஆற்று மணல் மட்டும் தான் சேர்த்து கலக்கி கார பூசுவோம்.. ஆனால் அப்போ மணல் கருப்பட்டி சுண்ணாம்புன்னு நெறைய கலந்து தான் காரை போடுவாங்க..”

“கருப்பட்டி சுண்ணாம்பா..??”,வியந்து கேட்டான் விக்கி..

“ஆமா விக்கி.. சுண்ணாம்பும் கருப்பட்டியும் தமிழர் கட்டிடக்கலையில் முக்கியமான ஒரு ப்ராடக்ட்னே சொல்லலாம்.. கருப்பட்டி கட்டிடத்தின் வலிமைக்காகவும் சுண்ணாம்பு கட்டிடத்தின் சூழ்நிலைகேற்ப வெப்பநிலையை மாற்றிக்கொள்ளும் தன்மைக்காகவும் சேர்க்கப் படுகிறது..”,என்றான் எழில்..

புரியலை என்பது போல் பார்த்த விக்கியிடம்,“அதாவது சுண்ணாம்பிற்கு வெயில் காலத்தில் வீட்டை குளுமையாகவும் பனி காலத்தில் சூடாகவும் வைத்துக்கொள்ளும் தன்மை உண்டு..”,என்றாள் மயா..

“வாவ்.. ரியலி இந்த நியூஸ் ரொம்ப புதுசா இருக்கு....”,என்று வியந்தான் விக்கி..

“ஹ்ம்..”,என்று தலையசைத்த மயா எழிலிடம் திரும்பி,” நாம ஏன் இந்த வீடுகளில் தங்கக்கூடாது..??”,என்று கேட்டாள்..

“கூரை மேஞ்சா தங்கலாம் மயா.. ஆனால் இப்போ கூரை போடுவதெல்லாம் ரொம்ப கஷ்டம்..”

“ஏன்..??”

“ஆல்ரெடி சொத சொதன்னு மழை பேஞ்சுட்டு இருக்கு.. இந்நேரத்துல எப்படி கூர மேயறது..?? அதுவும் இல்லாம இப்போ எல்லாம் கூர பின்ன யார் இருக்கா..”

“அட நான் அதை யோசிக்கவேயில்லை..”,என்ற மயா எழிலின் கேலிப் பார்வையை அசட்டை செய்தவாறு மற்றவர்கள் இருக்கும் திசை நோக்கி நடக்கத் துவங்கினாள்..

வானின் மன்னவன் வருனன் தூறல் பொழிவை நிறுத்தாமல் அன்று மதியம் தாண்டியும் பொழிந்து கொண்டிருந்தான்..

பச்சை பசேலென மலை கொடிகளுக்கும் மலர்களுக்கும் நடுவில் அமைந்திருந்த ஒரு பெரிய கூடாரத்தில் அமர்ந்தவாரு வருணனின் சேட்டைகளை இரசித்துக் கொண்டிருந்தனர் அனைவரும்..

“மயா அந்த பாட்டி சொன்னமாதிரி ஏதாவது கோயிலைப் பார்த்தீங்களா..??”,என்று கேட்டாள் தியா..

“இல்லை தியா..பழைய கிராமத்தை மட்டும் தான் பார்த்தோம்.. அதுவும் அந்த கிராமம் கொஞ்ச..ம்..ம்.. கொஞ்சம் என்ன ரொம்பவே டேமேஜ் ஆகியிருக்கு..”

“அங்க தங்கற மாதிரி ஏதாவது வசதி இருக்கான்னு பார்த்தீங்களா..??”

“பார்த்தோம் தியா.. அந்த வீடுகளெல்லாம் இப்பொவோ அப்போன்னு விழுகற நிலமையில இருக்கு.. கூர மேயுற நிலைமியில கூட இல்லை..”,என்றான் எழில்..

“இங்க இரண்டு கூடாரம் தான் போட டைம் இருந்தது எழில்.. அதுக்குள்ள மழை வலுக்க ஆரம்பிச்சிருச்சு..”,என்றாள் க்ரியா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.