(Reading time: 17 - 33 minutes)

“அப்போ இன்னைக்கு நைட் இங்க தங்கறது கஷ்டம் தான் போல..”,என்றான் விக்கி சற்று கவலையாக..

“ஆமாம் நானும் அப்படித் தான் நினைக்கறேன்..”,என்றான் எழில்..

அவன் கூறி முடித்த நேரம் காரில் அவ்வளவு நேரம் காரில் அமர்ந்து கொண்டிருந்த ஆச்சார்யா அங்கு வந்து சேர்ந்தார்..

அவரை முதலில் கண்ட விக்கி,”பெரியப்பா மழை நிக்கற மாதிரி தெரியலை.. எழில் ஊருக்குக் கிளம்புவோம்மா..??”,என்று கேட்டான்..

“இன்னும் ஒரு இரண்டு மூணு மணி நேரம் பார்க்கலாம் விக்கி..”,என்றவர் பொதுவாக அனைவரையும் பார்த்து,”அப்புறமும் மழை நிக்கலைன்னா கிளம்பிரலாம்.. இங்க வெச்சிட்டு போற திங்க்ஸ் எல்லாம் நனையாத மாதிரி பேக் பண்ணி வைங்க..”,என்றவர் தங்களது உதவிக்காக வந்தவர்கள் அமர்ந்திருந்த கூடாரம் நோக்கிச் சென்றார்..

நேரம் கடக்கக் கடக்க மழை அதிகமானதேயொழிய குறையவில்லை.. முன்பே திட்டமிட்டதுபோல் அனைவரும் கிளம்பத் துவங்கினர்..

காற்று பலமாக வீசியதால் அவர்கள் அமைத்திருந்த கூடாரங்களில் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றோடு பறக்கத் துவங்கியது.. அந்த கூடாரத்தில் இருந்த பொருட்களையெல்லாம் மற்றொன்றில் மாற்றி விட்டுக் கிளம்பும் பொழுது நேரம் ஆறு மணியைக் கடந்துவிட்டது..

ஆச்சார்யாவின் கார் முதலில் செல்ல அதனைத் தொடர்ந்து வேலை செய்ய அழைத்து வந்தவர்களின் டெம்போவும் நகரத்துவங்கியது..

பத்து நிமிட இடைவேளையில் அனைத்தும் செரியாக எடுத்து வைத்துவிட்டார்களா என பார்த்துவிட்டு கிளம்பத் தயாரானது இளவட்டம்..

அனைவரும் அந்த ஜீப்பில் அமர எழில் மழையில் யாரும் நனையாதவாறு ஜீப்பில் ஸ்க்ரீன் போன்றிருந்த ஒன்றை இழுத்துவிட்டு விட்டு ட்ரைவர் சீட்டில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்ய அமர்ந்த நேரம் வான் மழை மிக அதிகமாய் கொட்டத்துவங்கியது ஆலங்கட்டியாக..

“எழில் இந்த மழையில வண்டி ஓட்ட வேண்டாம்..கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்..”,என்றான் எழிலின் அருகில் அமர்ந்திருந்த ரிக்கி..

“நானும் அதுதான் நினைத்தேன் ரிக்கி..ஆனால் இப்போ கிளம்புன்னா தான் கொஞ்சம் சிரமம் இல்லாம போக முடியும் ரிக்கி..கொஞ்சம் நேரம் டிலே பன்னால்லே இந்த காட்டுப் பகுதியில வண்டி ஓட்டறது ரொம்பக் கஷ்டம்..அதான் பார்க்கறேன்..”,என்றான் எழில் யோசனையாக..

“எழில் ரிக்கி சொல்றது தான் கரெக்ட்.. பாரு ஆலங்கட்டி மழை வேற பெய்யுது.. இந்நேரத்துல எப்படி போறது..நடு வழியில் மாட்டிக்கிட்டோம்னா ரொம்ப சிரமம்..”,என்றாள் தியா..

“இப்போ என்ன பன்றது..?? அந்தப் பாட்டி வேற இங்க நெறைய மிருகம் இருக்குன்னு சொன்னாங்களே..”,என்று புலம்பினான் மயா..

சட சடவென பெய்து கொண்டிருந்த ஆலங்கட்டி மழையின் சத்தத்திலூடே கூடுதலாக ஒரு பெருஞ்சத்தமும் கேட்கத் துவங்கியது..

“என்னதிது இப்படி சத்தம் கேட்குது..??”,என்றபடி ஒரு குடையை எடுத்துக்கொண்டு ஜீப்பை விட்டு கீழே இறங்கிய தியாவின் கண்களுக்கு ஒரு நூறு அடிக்கு அப்பால் ஒரு மரம் இடிவிழுந்து கருகுவது கண்ணில் தென்பட்டது..

தானாக அவள் இதழ்கள் ஓ மை காட் என்றசைந்தது..

வேகமாக எழிலிடம் விரைந்தவள் அவன் எரிந்து கொண்டிருந்த மரத்தையே திகைப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு அவனை ஒரு குலுக்குக் குலிக்கி,“ஹே மேன்.. பராக்கு பார்க்காம வெட்ட வெளியில வண்டியை ஓட்டிட்டு போய் நிறுத்து..”,என்று விரைந்து ஜீப்பின் பின் ஏறிக்கொண்டாள்..

தியாவின் உலுக்கலில் தன் திகைப்பிலிருந்து மீண்ட எழில் அவள் ஜீப்பில் அமர்ந்ததும் அவசரவசரமாக அதனை கூடாரத்தை விட்டு சற்றுத் தள்ளியிருந்த வெட்ட வெளியில் நிறுத்தினான்..

பின்னமர்ந்திருந்த விக்கி அனைவரிடமும் பொதுவாக,”யாரும் வெளியில இறங்கிராதீங்க.. கண்டிப்பா இடி சமீபத்தில் விழவும் வாய்ப்பிருக்கு..”,என்று சொல்லிக் கொண்டிருக்கையில் இடிவிழும் சத்தமும் அதைத் தொடர்ந்து எதுவோ பற்றி எரியும் வாசனையும் அடிக்கத் துவங்கியது..

லேசாக ஜீப்பை மூடியிருந்த ஸ்க்ரீனை விலக்கிய வ்ருதுஷ்,”ஹேய் கய்ஸ் கூடாரம் மேல இடி விழுந்திருச்சு..”,என்றான் அதிர்ச்சியோடு..

வாட் என்றபடி அவனைத் தொடர்ந்து ஸ்க்ரீனை விலக்கியவர்களும் அக்காட்சியைக் கண்டு பெரிதும் அதிர்ந்து போயினர்..

“நம்ம உள்ள இருக்கற திங்க்ஸ் முடிந்த அளவிற்கு கூடாரம் எரிந்து முடிப்பதற்குள் எடுத்திடலாமா..??”,என்று வினவினாள் மயா..

“வேண்டாம் மயா..இந்த இடி எப்போ எது மேல விழும்னு சொல்ல முடியாது.. நம்ம ஜீப்புக்குள்ள இருக்கற வரைக்கும் தான் நமக்கு சேப்..”,என்றான் ரிக்கி..

“எழில் உன்னால இந்த மழையில வண்டி ஓட்ட முடியுமா..??”,யோசனையாகக் கேட்டாள் தியா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.