(Reading time: 17 - 33 minutes)

“மழை லேசா குறைந்த மாதிரி இருக்கு..ஓட்ட முடியும்னு தான் நினைக்கிறேன்..”,என்றான்..

“கொஞ்ச தூரம் ஓட்டிப் பாரு எழில்.. சப்போஸ் இந்த மழையில உன்னால மேனேஜ் பண்ண முடிஞ்சா வீ கேன் மூவ் பார்வேர்ட்.. அப்படி இல்லைன்னா வீ வில் ஸ்டாப் தேர்..”,என்றாள் தியா..

ஓ கே தியா என்ற எழில் ஜீப்பை திருப்பி தனது ஊருக்கு செல்லும் பாதையில் ஜீப்பை விடத் துவங்கினான்..

சில அடிகள் கூட ஜீப் நகர்ந்திருக்காது.. அதற்குள் ஜீப்பின் முன் வேருடன் ஒரு பழைய பெரிய ஆலமரம் சாயத் துவங்கியது..

“டேக் தி ஜீப் பேக் எழில்..”,என அதைக் கண்டதும் கத்தினான் அருகில் அமர்ந்திருந்த விக்கி..

ஒரு நாழிகை எழிலின் கையில் தடுமாறிய ஜீப் சர்ரென பின்னால் மீண்டும் அந்த வெட்ட வெளியை அடைந்தது..

அந்நிகழ்விலிருந்து வெளிவர அனைவருக்கும் சில பல நிமிடங்கள் பிடித்தாலும் முதலில் அதிர்விலிருந்து வெளிவந்த தியா பெருமூச்சொன்றை வெளியிட்டு தனது பேக்கில் எதையோ அவசர அவசரமாக தேடத்துவங்கினாள்..

”என்ன தேடற தியா..??”,என்று கேட்டாள் க்ரியா..

“என் மொபைல் க்ரியா.. எழில் அப்பாவுக்கு இன்பார்ம் பண்ணலாம்..”

“பெரியப்பாவிற்கு கூப்பிடுவதை விட்டுட்டு ஏன் எழில் அப்பாவைக் கூப்படறீங்க..??”,என்று புரியாமல் கேட்டான் ரிக்கி..

“சார் போன்ல சார்ஜ் அப்போவே தீர்ந்து போயிருச்சு.. அதான் அவருக்குக் கூப்பிடல + எழில் அப்பாவுக்கு இந்த ஏரியா பற்றித் தெரிஞ்சவங்களை தெரிஞ்சிருக்கலாம்.. அதான்..”,என்றபடி தனது மொபைலை மீண்டும் தேடத் துவங்கினாள்..

அதற்குள் தனது பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்த வ்ருதுஷ்,”இப்போ நீங்க மொபைல் எடுத்தாலும் நோ யூஸ்.. சுத்தமா சிக்னல் இல்லை தியா..”,என்றான்..

“அப்போ நாம் மழை நின்னு விழுந்த இந்த மரத்தை அப்புறப்படுத்தும் வரைக்கும் இங்க தான் இருக்கனுமா..”,சலித்தபடியே சொன்னாள் மயா..

“வேற வழி இல்லை மயா..நமக்கு அநேகமா நைட் ஸ்டே இங்க தான்னு நினைக்கிறேன்..”,என்ற வ்ருதுஷ் சீட்டில் சாய்ந்து அமர்ந்தான்..

ரண்டு மணி நேரம் கடந்த வேளையில் எனக்கு பசிக்குது என்றாள் க்ரியா..

“என் பேக்ல பிஸ்கட் பெக்கட் இருக்கும்.. அதை எடுத்து சாப்பிடுங்க..”,என்ற எழில் விக்கியிடம் திரும்பி,”மழை நிக்கற ஸ்டேஜ்ல இருக்கு.. விக்கி வர்றீங்களா கூடாரத்தில் ஏதாவது எறியாம இருந்துச்சுன்னா எடுத்துட்டு வரலாம்..” என்றான்..

சரி என்ற விக்கியும் எழிலுடன் எரிந்து கிடந்த கூடாரத்தின் அருகில் சென்றனர்..

அருகிலிருந்த கம்பொன்றை கையில் எடுத்த எழில் கருகியிருந்த பொருட்களையெல்லாம் அப்புறப்படுத்தத் துவங்கினான்..

“எழில்.. எனக்கென்னமோ இங்க இருக்கறதுல சில பொருட்கள் கருகாம இருந்தாலும் நனைந்து போயிருக்கும்னு நினைக்கிறேன்..”

“நானும் அதான் நினைக்கறேன் விக்கி.. பட் பார்க்கலாம்.. ஏதாவது ஒரு சின்ன பொருள் நனையாம இருந்தாலும் இப்போ நமக்கு யூஸ் தான்..”

“ஹ்ம்..ஹே எழில் அங்க பாருங்க அந்தப் பெட்டி மட்டும் நனையல..”,என்றபடி கருகாமல் இருந்த அந்த குட்டி இரும்பு பெட்டியை எடுத்துத் திறந்தான்..

அந்த பெட்டிக்குள் இருந்த தீப்பெட்டி கத்தி என தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்தவர்கள் ஜீப்பை அடைந்தனர்..

எழிலைக் கண்டதும் தியா,“எழில் உன் ஹேண்டி கேமை ஒரு நிமிஷம் கொடு..”,என்று வாங்கியவள் காலையில் அவன் எடுத்த வீடியோவை பார்க்கத் துவங்கினாள்..

“என்ன தியா பார்க்கற..??”,என்ற விக்கியின் கேள்விக்கு ஒரு நிமிடம் என்று சைகை காட்டியவள் சிறிது நேரம் கழித்து,”இங்க பாருங்களேன் இந்த வீடியோல இருக்கும் வீடுகளில் திண்ணையைப் பாருங்களேன்..”,என்று கூவினாள்..

என்னவென்பது பார்த்தவர்களிடம்,”திண்ணைல ஏரியால மட்டும் கல்லுல மேஞ்சிருக்காங்க.. நைட் புல்லா கண்டிப்பா நம்மால இந்த ஜீப்புக்குள்ளேயே டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது.. இப்போவே ரொம்ப சங்கட்டமா இருக்கு இப்படி உட்கார்ந்திருக்க.. ஏன் நாம அங்க போகக் கூடாது..”

அவள் சொல்வது சரி என்பதால் அவளது யோசனையை ஏற்றுக் கொண்டவர்கள் அந்த கிராமத்தை நோக்கிச் செல்லத் துவங்கினர்..

“எழில் விக்கி நீங்க இரண்டு பேரும் முன்னால் நடங்க நானும் வ்ருதுஷும் பின்னால் நடக்கறோம்.. லெட் தி கேர்ள்ஸ் கம் இன் தி மிடில்..”,என்றான் ரிக்கி..

“ரெண்டு டார்ச் லைட்டை தவிர மத்ததையெல்லாம் யூஸ் பண்ணவேண்டாம் கய்ஸ்..எல்லாவற்றிலும் பேட்டரி கமியாத்தான் இருக்கும்..”,என்ற தியா மயாவுடனும் க்ரியாவுடனும் பாய்ஸின் நடுவில் நடக்க ஆரம்பித்தாள்..

“ரொம்ப தூரம் உள்ள போகனுமா எழில்..??”,என்று கேட்டான் வ்ருதுஷ்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.