(Reading time: 11 - 22 minutes)

"ம்க்க்ம்..என்ன மேகா.. எங்கே கவனம்..", என்று அழைத்த குரலில் சுதாரித்தவள், முதலில் லேசாய் திரு திரு என்று விழித்துவிட்டு..முகம் நாணத்தில் செம்மையுற, தலை குனிந்தவள்,

"இல்லை சார்.. ஜஸ்ட் ஏதோ யோசனை..", என்று இழுத்தாள்..

"அப்போ யோசிச்சுட்டு பிறகு கிளாசுக்கு வர்றதுதானே மேகா.. அட் லீஸ்ட் உன் டைம் மற்றும் என் டைமும் சேவாகும் இல்லை", என்று கொட்டு வைத்தான்.

"சாரி சார்.. இல்லை.. அதுவந்து.. ஏதோ சாதிக்கணும்னு சொன்னேனே அது எப்படின்னு யோசிச்சுகிட்டு இருந்தேன் ", என்று பாதி உண்மையும் பாதி பொய்யுமாய் உரைத்தாள்..

அவள் வரைக்கும் அவன் இதயத்தில் இடம் பெறுவதே சாதனை என்று நினைத்துக் கொண்டு..

‘ஹிஹி..’ என்று தலையாட்டி அசடுவழியச் சிரித்துவைத்தாள்..

ஒருகணம் யோசனையாய் அவள் முகத்தைப் பார்த்தவனுக்குத் தெள்ளத்தெளிவாக தெரிந்துதான் போனது அவள் எண்ணம் போன விதம்.. அதைப் பெரிது படுத்த விரும்பாமல் இயல்பாய்..

"ஓஹ்.. நிறைய விதங்கள் இருக்கே மேகா.. உதாரணத்துக்கு உன் சப்ஜெக்டுக்கு ஏத்த விதமா ஏதாவது விவசாய சம்பத்தப்பட்ட கருவிகள் மெஷின்கள் கண்டு பிடிக்கலாம்.. இல்லை ஏதாவது இர்ரிகேஷன் சம்மந்தமா செய்யலாம்.. அதுவும் இல்லையா இயற்கை முறையில் ரசாயனப் பூச்சிமருந்து இல்லாமல் எப்படிப் பயிர் செய்வது என்பதற்கு ஏதாவது செய்யலாம்.. என்ன புரிகிறதா இல்லை.. சும்மா மண்டையை மண்டையை ஆட்டுகிறாயா?.." என்று கேலியாய் அவளைப் பார்த்தான்..

இல்லை சார் பணம் எதுவும் என்னால் அதிகமாகச் செலவு செய்ய முடியாது.. என் லெவல் கொஞ்சம் வேற மாதிரி.. அதான் யோசிக்கிறேன்.. அதிலும் எங்கம்மா இந்தமாதிரி கண்டுபிடிப்புகள் ஏன்.. நான் வேலைக்குப் போறேன்னு சொன்னாக் கூட விடமாட்டாங்க.. அவங்களுக்கு நான் கழுத்து நிறைய நகை போட்டுகிட்டு கைநிறைய பணத்தோடு பெரிய பிசினெஸ்மேனுடைய பெண்டாட்டியா வலம் வந்தாத்தான் பிடிக்கும்..", என்று வருத்தத்துடன் தன் நிலையை எடுத்துச் சொன்னாள்..

அவள் நிலை அவன் மனதை லேசாய் அசைக்கத்தான் செய்தது.. ‘பாவம் இவள் ஒரு கூண்டுக்கிளி.. வீடு பரந்து இருப்பதுபோல் வீட்டுக்காரம்மாளின் மனம் இல்லை.. அது சிமெண்ட் தரை போல் கடிமனாக இருக்கு..’ என்று நினைத்தவன்,

"ஹேய் இதெல்லாம் ஒரு மேட்டரா?.. லீவ் இட்.. மனம் இருந்தால் மார்க்கமுண்டு நீ கேள்விப்படலையா.. எல்லோரும் காந்தியாக முடியுமா இல்லை விஞ்ஞானி ஆக முடியுமா?.. சோ உன்னால் எதில் ஈசியாக கான்சன்ட்ரேட் செய்ய முடியும் என்று தீர்மானி.. ஏன்.. பணக்காரனின் மனைவியாய் கூட உன் சாதனைகளை நீ செய்யலாமே.. சாதனைத்தான் செய்யணும்னு ஏன் நினைக்கிறாய்.. சில சர்வீஸஸ் கூடச் செய்யலாமே.. உதாரணத்துக்கு.. ம்ம்.. உங்க சித்தி வீட்டைப் பார்..

எவ்வளவு செடி கொடிகளுடன் பசுமையாய் இருக்கு.. அதேபோல உங்க வீட்டிலும் கூட நீ செய்யலாமே.. உங்க சித்தி தன் வீட்டுக்கு வேண்டிய காய்கறிகளை தானே பயிரிட்டுக்கறாங்க.. ரொம்ப கொஞ்சம் போலத்தான் வெளியே வாங்குறதுன்னு சொன்னாங்க.. நீ கூட அந்த மாதிரி ஏதாவது செய்யலாமே..", என்று ஊக்கினான்.

கண்கள் பளிச்சிட நிமிர்ந்தவள், "சார்.. நீங்க சொல்லறது கரெக்ட் தான்.. ஆனா எங்கம்மா ஒரு இஞ்ச் இடம் விடாம சிமெண்டு போட்டிருக்காங்க.. இதிலே நான் என்னத்தை பயிரிட?..", என்று அலுத்துக்கொண்டாள்..

அவளைப்பார்த்து லேசாக சிரித்தான் சிங்கார வேலன்.

"ஏன் உன் வீட்டு மொட்டை மாடி இல்லையா?.. அங்கே செய்வதுதானே.. அழகாய் ரூஃப் கார்டன் செய்.. இப்போ கொஞ்ச நாளாக நிறைய அதானே ஃபேஷன்.. ஏதோ சினிமாவில் கூட ஹீரோயின் செஞ்சாங்கன்னு பெருசா பேச்சு வந்துதே.."

"ஆமாம் சார் முப்பத்தியாறு வயதிலே ஒரு படம்.. அதில் தான் அப்படி வந்துச்சு.. நல்ல விஷயத்தை எதுலேர்ந்து வேணா கத்துக்கலாம்தான்.. ஆனாலும் கூட பாருங்க.. இதை நான் சொன்னாலே போதும் எங்கம்மா.. எகிறி குதிச்சு தாண்டவம் ஆடிடுவாங்க..", என்று வருத்தப்பட்டாள்.

நிச்சயம் ரேணுகாவைத் தெரிந்தவர்கள் இந்த யோசனையைச் சொல்ல மாட்டார்கள் தான்.. ஒரு இஞ்ச் இடம் இருந்தால் கூட அதை எப்படிக் காசாக்குவது என்று பார்ப்பாள்.. தன் கணவரின் முறைப்புக்குப் பயந்து மொட்டை மாடியின் பக்கம் கை வைக்காமல் இருந்தாள் இது நாள் வரை.. ஆனால்.. இப்போது இது தெரிந்தால் அங்கேயும் விடாமல் பெரிய டெண்ட் அடித்து ஏதாவது கோசிங்க் கிளாசுக்கு விட்டுவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பாள் என்பது சிங்கார வேலன் அறியாதது.

"என்ன அப்படியே அப்பப்போ ஆஃபாயிடுறே?.. உங்கண்ணனும் உங்கப்பாவும் அப்படித்தானா?.. அவர் கிட்ட சப்போர்ட் கேக்குறதுதானே..?", என்று மெல்ல அவளுக்கு ஏத்திவிட்டான்.

அண்ணன் என்ற சொல்லைக் கேட்டதுமே பரிதாபம் தான் மேலோங்கியது மணிமேகலைக்கு.

"அய்யோ சார் உங்களுக்கு விவரம் தெரியாது போலே.. எங்கண்ணன் ஒரு அலாதிப் பிறவி.. யார் வம்புக்கும் போக மாட்டான்.. பாவம் வாயில்லாப் பூச்சி.. மூணு வருஷம் முன்னாடி இப்படித்தான் திடீர்னு எங்கம்மா அவனுக்கு ஒரு பெரிய பணக்கார இடத்தில் நிச்சயம் செஞ்சாங்க.. பாவம் எங்கண்ணி ஹனிமூன் போனபோது செல்ஃபி எடுக்கப்போயி ஒரு பள்ளத்தாக்கில் விழுந்துட்டாங்க.. பேப்பர்ல கூட வந்துச்சு நியூஸ்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.