(Reading time: 18 - 35 minutes)

“யாருடா, என்னோட டார்லிங்கை கலாய்கிறது? என்று அவன் குரல் கேட்டது மட்டுமல்லாது, அவன் கையும் அவளது தோள் சுற்றி அணைத்தது, உணர்ந்து உயிர் வரை சிலீர் என்றது பூஜாவிற்கு..........

“அதானே பார்த்தேன், இன்னும் என்னடா,அண்ணனோட என்ட்ரி காணோமேன்னு, அண்ணிக்கு கை கொடுக்க மட்டும் தான் அண்ணா வருவார் போலிருக்கு.” என்று இம்முறை இந்தரை வாரினான் அபி........

“என் பூஜா டார்லிங் இருக்கும் இடம் தான் எனக்கு மாலே” என கூறி புன்னகைத்தான்  இந்தர்.......... ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி என்பது போல்..........

“அக்காவை காப்பத்த எங்கிருந்தாலும் டக்குன்னு, நேரத்திற்கு வந்துடறிங்க இந்தர்” என்று குழலியும் அந்த பேச்சில் கலந்து கொண்டாள்.

“யாரு பூஜாவை காப்பதவா? உங்களை தான் அவளிடமிருந்து காப்பாற்ற வந்தேன். அவள் ஒற்றை ஆளாகவே எல்லோருக்கும் பதில் கொடுப்பாள், அப்படித்தானே பூஜா டார்லிங்” என கூறி  அவள் இதழ்களில் தன் பார்வையை பத்திதான் இந்தர்.

பூஜாவிற்கு தான் வெட்கமாக இருந்தது. அவன் பிடியிலிருந்து நழுவி, தனது அம்மாவிடம் விடை பெறுவது போல் நகர்ந்து பீஷ்மரின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

இந்தரும் அவளை தொடர்ந்து, பீஷ்மரின் அருகில் வந்து, அவருடன் பேச ஆரம்பித்தான். பீஷ்மரும் தனது மகளை பற்றி பெருமையாக பேசி, அவளை விட்டு செல்வதில் அதிக வருத்தம் இருப்பதாக காட்டிக் கொண்டார்.

“சென்னையில் இருந்து நேரடி விமானம் தான், நீங்க எப்போ நினைத்தாலும் வந்து போகலாம் மாமா “ என்று அவருக்கு ஆறுதல் கூறினான் இந்தர்.

சரோஜினி தான் அவருக்கு நேர் மாறாக “அவர் ஏதாவது சொல்லுவார் மாப்பிள்ளை, நீங்க தான் கொஞ்சம் பூஜாவை அடக்கி வைக்கணும். நீங்க கொஞ்சம் விட்டா தலை மேல் ஏறி கொள்வாள். காலையில் லேட்டா தான் எழுந்துப்பா”, என்று பூஜாவை பற்றி குற்ற பத்திரிக்கை வாசிகக ஆரம்பித்தார்.

“மீ” என்று அலறினாள் பூஜா..........

“பாருங்க மாப்பிள்ளை, அம்மா ன்னு அழகா கூப்பிடலாம்ல, அதை விட்டு மம்மின்னு கூப்பிட ஆரம்பித்தாள், இப்போ அதுவும் சுருங்கி மீ ஆகிடுச்சு” என்று அதற்கும் குறை சொன்னார் சஜோஜினி. இதை கேட்டு இந்தரும் புன்னகைத்து கொண்டு இருந்தான்.

“எங்க பூஜாமாவை யார் குறை சொல்றது” என்று கேட்ட படி அங்கு வந்தார் சம்யுக்தா.........

“பாருங்க அத்தை இந்த மம்மியை, என்னை பற்றி பெரிய லிஸ்டே இந்தர் கிட்ட வாசிகறாங்க” என்று சம்யுக்தாவின் தோள் சாய்ந்தாள் பூஜா......

அதை பார்த்த பீஷ்மருக்கும், சரோஜினிக்கும், பெருமையாக இருந்தது. மகள் இப்படி அவளது மாமியாருடன் பாசமாக இருப்பதை பார்த்து. என்ன தான் குறை சொன்னாலும், மகள் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்பதே சரோஜினியின் விருப்பமாக இருந்தது. அது தான் ஒரு தாயின் பாசம். பூஜாவிர்க்கும் அது புரிந்ததால் அவளும் சரோஜினியை அணைத்து கொண்டாள்.

ஒரு வழியாக அனைவரும் பிரிய விடை பெற்று ஊருக்கு கிளம்பியதும், வழியனுப்ப வந்தவர்கள் மட்டும் திரும்பினர். இந்தர் ரேசார்டிற்கு கிளம்புவதாக சொல்ல, பூஜாவையும் அழைத்து செல் என்று சம்யுக்தா கூறினார், இந்தரிடம்.

“மா, நான் வேலை பார்க்க போறேன், இவள் அங்கு எதற்கு?

“பூஜாவும் உன்னுடைய ரெசார்டில் வேலை பார்த்தவள் தானே, அதானால் அவளுக்கு அங்கு நன்றாக தான் இருக்கும், அதனால் அவளை அழைத்து செல். நீயும் திருமணம் முடிந்து, எங்கும் அவளை வெளியே அழைத்து செல்லவில்லை.” என கூறினார்.

இந்தரின் முகத்தை பார்த்து, பூஜாவும் மறுத்து பேச ஆரம்பிக்கும் முன், சம்யுவே, “பூஜா, நான் மாமாவோட, கொஞ்சம் வெளியே போக வேண்டி இருக்கு, நீ இந்தரோட போயிட்டு வா” என கூறி அந்த சூழ்நிலைக்கு முற்று புள்ளி வைத்தார்.........

இந்தரும், பூஜாவும் ரெசார்ட் செல்லும் விரைவு படகில் ஏறினர். சென்ற பதினைத்து நிமிட பயணத்தில் பூஜா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இத்தனைக்கும் அந்த படகில்  குளிர் சாதனம் பொருத்த பட்டு இருந்ததால், சத்தம் கூட உள்ளே அதிகம் வரவில்லை. இருந்தும் இருவரும் மௌனமே சாதித்தனர்.

ரெசார்ட் போய் சேர்ந்ததும், தனது அலுவலக அறைக்கு பூஜாவை அழைத்து சென்ற இந்தர், அங்கிருந்த அவனது பிலிப்பினோ உதவியாளரை அழைத்து, “ப்ளசிகா, இவங்களுக்கு ரெசார்டை சுற்றி காட்டு” என கூறி விட்டு பூஜாவிடம், “ரெசார்டை பார்க்கும் பொழுது எங்காவது, ஏதாவது மாற்றம் தேவை படும் என எண்ணினால் குறித்து கொள், நாம் பின்பு அதை பற்றி விவாதிக்கலாம், என கூறி அவளை அனுப்பி வைத்தான்.

எப்பொழுதும் பிசினஸ் தான், என நொடித்துக் கொண்டு, ப்ளசிகாவுடன் கிளம்பிய பூஜா, அந்த ரேசார்டின் அழகில் மயங்கி தான் போனாள். மிகவும் நேர்த்தியாக, கடல் ஓரம் முழுவதும் தனித் தனி அறைகளாகவும், நடுவில், மிகப் பெரிய வரவேற்ப்பு அறையும், அதிலிருந்து சென்றால் பியானோ அறையும், போகும் வழியெங்கும் சிறு நீர் ஓடைகளாகவும் , அதனோடு நடந்தால், சாப்பாட்டு ஹாலும், அதற்கு பின் புறம், மிகவும் தூய்மையாய் இருந்த சமையல் அறையும், அனைத்தையும் கண்டு முடித்து, பார் ஏரியாவை நெருங்கும் பொழுது இருட்டி விட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.