(Reading time: 10 - 19 minutes)

துரோகியா....? அந்த பெயர் உனக்கும் தானே பொருந்தும், இன்றைக்கு மாயாவுக்கு மிகவும் இணக்கமானவள் என்று நீ அவனிடம் அள்ளிவிட்டுக் கொண்டு இருக்கிறாயே? அது மட்டும் என்ன தியாகமா? நீ பேசியதை நான் சொல்லட்டுமா.....

நீரஜா விஷயமாக நடந்த எல்லாவற்றையும் நான் கமலிடம் தெரிவித்தாகிவிட்டது. சந்துரு பொய் என்றைக்குமே நிலைக்காது அதனால், நீயும் கொஞ்சமாவது மாற முயற்சி செய் சந்துரு. 

ஓ வினிதா நான் சொல்றதைக் கேளு, இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போயிடலை, நீ மனசு வைச்சா வந்திருப்பவனை மாயாவுக்கு கணவன் இல்லைன்னு நீருபிக்க முடியும். அதுக்குப்பிறகு இந்தச் சொத்தை நாமளே ஆளலாம். உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன். ஒரேயொரு பொய் கமல் மாயாவின் கணவன் இல்லை மாயா விரும்பியது சந்துருவைத்தான் இந்த கமல் தான் அவளை மிரட்டி கல்யாணத்திற்கு சரியென்று சொல்ல வைத்தான் ஒருவகையில் பார்த்தாள் மாயாவின் இறப்பிற்கு இவன்தான் காரணம் என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்லிடு, அவனை கைது செய்து விடுவார்கள். அதற்கு தகுந்த ஆதாரங்களை நான் தயாரிக்கிறேன். என்ன சொல்றே ? 

வினிதா ஒரு முடிவிற்கு வந்தவளாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இதுவே பழையவளா இருந்தால் பணத்திற்காகவோ, இல்லை உன் மேல் வைத்த அன்பிற்காகவோ நீ சொன்ன வேலையை நிச்சயம் செய்திருப்பேன். ஆனா நான் மாயாவிற்கு செய்த தவறுக்கு பிராயசித்தமாகத்தான், இந்த உதவியை கமலுக்குச் செய்கிறேன். இதில் நீ தலையிடாதே, பணம் பணம் என்று அலையாமல் நீயே சுயமாக சம்பாதிக்கப் பாரு, அவளின் பேச்சில் கோபமடைந்த சந்துரு, உன்னை,,,, என்று அடிக்க தாவினான். அதற்குள் அருகில் இருந்த பிளவர்வாஷை எடுத்து அவன் தலையில் அடித்தாள் வனிதா. தலையில் இரத்தம் வழிந்தது, போயிடு இல்லைன்னா எதைப்பத்தியும் யோசிக்கமாக கொன்னுடுவேன். என்று கர்ஜித்தாள். 

உன்னை கவனிச்சிக்கிறேன்டி என்று கருவியபடியே வெளியேறினான். சந்துரு, 

அதே நேரத்தில் வீராவுடனும், அசோக்குடனும் போனில் கான்பிரன்ஸில் பேசினான் கமல், அப்போ நம்மோட எதிரி சந்துரு இல்லாம இன்னொருத்தனும் இருக்கிறான் இல்லையா ? 

ஆமாம் ஸார் அப்படி யார் என்னை தாக்கியிருக்க முடியும் ? மாயாவின் வீட்டிற்கு நான் சென்றிருந்தால் வேறு யாருக்கு கோபம் வந்திருக்கும், 

ஏன் ஸார் ஒருவேளை நம்மை திசை திருப்பிட சந்துரு செய்த செயலாகக் கூட இருக்கலாம் இல்லையா? 

உண்மைதான் கமல் அசோக் சொல்றமாதிரி சந்துருவை அத்தனை இளப்பமாய் நாம நினைக்க முடியாது, அதனால நீங்க இன்னமும் கொஞ்சம் பொறுமையா அங்கேயே இருங்க, கட்டாயம் நமக்கு ஏதாவது சின்ன துருப்புச்சீட்டு கிடைக்கும் நான் எதுக்கும் லாயரைப் பார்த்துப் பேசிட்டு வர்றேன். எதிலும் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் பண்ணிக்கொண்டான் கமல். 

ன்ன பண்றே கல்பனா ? நீ பண்றது தப்புன்னு உனக்கே தெரியலையா ? கையிலே ரத்தம் ஏதாவது வந்திடப்போகுது. மனைவியின் கையில் இருந்த உடைந்த வளையல்களை தட்டிவிட்டான். 

விடுங்க ரவி என்னாலே எதையும் கன்ட்ரோல் பண்ண முடியலை இன்னும் எத்தனை நாளைக்கு நான் இந்த நரகத்தை அனுபவிக்கணும் எனக்கு பயமா இருக்கு உள்ளே ஒண்ணு வைச்சி வெளியே பேச முடியலை ?! இதே நிலைமை நீடிச்சா...

அமைதியா இரு கல்பனா ஏன் இத்தனை கோபப்படறே ?

கோபப்படாமே ? கடவுள் என் வயித்தை கட்டிப்போட்டுட்டான். ஆனா, இப்போ இவகிட்டே உங்களைப் பறிகொடுத்திடுவேனோன்னு எனக்கு பயமா இருக்கு ?! 

என்மேல நம்பிக்கை உனக்கு அவ்வளவுதானா ? 

அவ்வளவுதான்...ஊரிலே எத்தனையோ பொண்ணுங்க வாடகைத்தாயா பணத்தை தூக்கி எறிஞ்சா தயாரா இருக்காங்க ஆனா நீங்க சுப்ரியாத்தான் வேணுமின்னு அடம் பிடிச்சீங்க, 

அதுக்குண்டான காரணத்தைதான் நான் உனக்கு சொன்னேன் இல்லை, இந்த மாதிரி வாடகைத்தாயா வர்றவங்க எப்பவும் ஏதாவது சிக்கலை உண்டுபண்ணுவாங்க. நாம பராம்பரியமா பணக்காரங்க கல்பனா நம்ம கிட்டே பணம் பறிக்க எத்தனையோ முயற்சியை அவங்க மேற்கொள்ளலாம், இந்த மாதிரி பிரச்சனையெல்லாம் வரக்கூடாதுன்னுதானே நான் இவளை செலக்ட் பண்ணேன். இவளுக்கு நாம நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருக்கோம்.

குழந்தை பிறந்தததுக்குப் பிறகு, கூட பிரச்சனையில்லாம வெளியே போயிடுவா ? அப்படி அவ குழந்தை பிறந்ததுக்கு பிறகு வெளியே போனாலும் திரும்பி வந்து பிரச்சனை பண்ணமாட்டா ? அப்படியே பண்ணினாலும் அவளை அப்புறப்படுத்துவது ரொம்ப சுலபம். 

ம்.. இப்படி பேசித்தானே என்னை ஏமாத்தினீங்க ? அவளோட உங்க காமத்தை தொடரத்தானே 

கல்பனா... ப்ளீஸ் வாழ்க்கையோட ஒரு கட்டத்திலே சில அபத்தமான விஷயங்கள் தோணும். நானும் சுப்ரியாவை முதலில் பார்த்தப்போ என்னோட சுயமுன்னேற்ற கொள்கைகள் அவளைக் கல்யாணம் பண்ணிக்கத் தோணுச்சி ! ஆனா அதன்பிறகு கல்யாணம் குடும்பம் கெளரவம் வாழ்க்கைன்னு எல்லாம் சேர்ந்து, என்னோட போக்கு தப்புன்னு தோணுச்சி ?! ஆனா என்னைக்கு உன்னை கல்யாணம் செய்துக்கிட்டோனோ அப்பவே எனக்கு நீதான் எல்லாம் என்னோட வாழ்க்கை இறப்பு பிறப்பு எல்லாமே !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.