(Reading time: 10 - 19 minutes)

உன்னை விட்டுப் போக மாட்டேன். இந்தக் குழந்தை பிறக்கிற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இரு, அதுக்குபிறகு அவ உன்கூட கொஞ்சநேரம் கூட இருக்கமாட்டா ? இது பிராமிஸ்

சரி நான் நீங்க சொல்றதை கடைசியா நம்பறேன் இனிமே அவளை ,,, எப்படி நான் பார்ப்பேன்

நமக்கு காரியம் ஆகணும் கல்பனா குழந்தை பிறக்கிற வரையில் கொஞ்சம் அமைதியா இரு, ப்ளீஸ் இதுக்காக நாம படாத அசிங்கம் இல்லை, வேதனையில்லை, ஏழாவது மாதம் இன்னும் மூணுமாசத்திற்குள்ளே நம்ம கையில் நம்ம பிள்ளை அதுக்குப் பிறகு இவளை நான் சீந்தமாட்டேன். அவளே அவளோட தரத்தை உணர்ந்து போயிடுவா....

கேவலம் உடம்பை விக்கறவதானே அவளுக்கு என்ன பாசம் வந்திடப்போகுது. பிள்ளையைப் பிடுங்கிப்போட்டுட்டு பழைய வாழ்க்கைக்கு போயிடுவா நீவேணா பாரு... மனைவியை ஆறுதல் படுத்திய அதே நேரம் சுப்ரியா தன் வயிற்றில் தன் பிள்ளையின் முதல் அதிர்வை உணர்ந்தாள். மேடிட்ட வயிற்றில் சின்னசின்ன அசைவையும் மீறி ஒருவேளை உள்ளே விளையாடுறீயோ... நான் உன்னை விட்டுப்போயிடுவேன்னு பயப்படாதேடா கண்ணா.

ரவியும், கல்பனாவும் என்னை தாங்குறாங்க ?! நீ வந்ததுக்குப் பிறகு நான் இதே வீட்டுலே கல்பனாவோட தயவில ஒரு வேலைக்காரியா இருந்திடறேன் அப்படி நான் இருப்பது அவளுக்கு கஷ்டமா இருந்தாலும் கொஞ்ச தூரத்தில் இருந்தாவது உன்னோட வளர்ச்சியைப் பார்ப்பேன் கண்ணா, ஏன்னா இந்த நிறைஞ்ச வாழ்க்கை அது கொஞ்ச காலமேனாலும் எனக்கு தந்தவளுக்கு நான் தெரியாமல் கூட எந்த தீங்கும் செய்யக்கூடாது அவ மனசுக்கு நீ அவள் மடியில் தவழ்றதை நான் பார்க்கணும் என்று குழந்தையிடம் பேசிக்கொண்டாள். 

ங்கே பாருங்க சுப்ரியா குழந்தையோட வளர்ச்சி நல்லாத்தான் இருக்கு. ஆனா உங்க கர்ப்பபை எந்தஅளவுக்கு பிரசவ நேரத்தில் விரிவு கொடுக்குமின்னு தெரியலை ஒருவேளை ஏதாவது..

என்ன டாக்டர் எனக்கு ஏதாவது ஆயிடுன்னு சொல்றீங்களா அப்படியே ஆனாலும் நான் வாழ்ந்து என்னாகப்போகுது டாக்டர். நடமாடும் தெய்வங்க கல்பனாவும் ரவி இந்தக் குழந்தையை அவங்க கையிலே கொடுத்தாலே போதும் ! இந்த காம்ப்ளிகேட்டா விஷயத்தை அவங்ககிட்டே சொல்லவேண்டாம் எனக்காக

தப்பும்மா அது தொழில் தர்மம் இல்லை.

கல்பனா உங்க தோழி அவங்க மேல எனக்கு இருக்கிறே அக்கறை கூட உங்களுக்கு இல்லயே டாக்டர். இந்தக் குழந்தை எனக்கு வரம்மின்னா கல்பனாவிற்கு உயிர் அவளோட உயிரை என் உயிரைக் கொடுத்தாவது பெத்து தருவேன்னு அதனால பிரசவம் வரையில் இந்த சிக்கலை அவங்ககிட்டே சொல்லமாட்டேன்னு எனக்கு சத்தியம் செய்து கொடுங்க என்று டாக்டரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டது சுப்ரியாவிற்கு நினைவு வந்தது. நான் என் நாட்களை எண்ணிக்கொண்டாலும் அது உன்னோட பிஞ்சு கைகளில் தான் கண்மணி என் ஆறுதலாய் வயிற்றைத் தடவிக்கொண்டாள் சுப்ரியா.

மாயா வருவாள்

Epsiode # 12

Epsiode # 14

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.