(Reading time: 26 - 51 minutes)

ரமேஷ் கொஞ்சதூரம் போகும்போதே சற்று இடைவெளியில் அவனது பைக்கை ஒரு மினிலாரி தொடர்வதுபோல் உணர்ந்தான் இருந்தாலும் தனது மனப்பிரமை என நினைத்து சாலையில் கவனத்தை செலுத்தியவன் கடைகள் நிறைந்த சாலையைவிட்டு மெயின் ரோட்டுக்கு வந்தபின்பு தனது பைக்கின் உள்ள கண்ணாடியில் வேகமாக் பின்னல் நான்குசக்கர மினிலாரி அசுரவேகத்தில் வருவதை பார்த்து வேகமாக ஒதுங்கப்பார்த்தான் இருந்தும் லேசாக வண்டியை அந்த லாரி தட்டியதும் போய்கொண்டிருந்த ஸ்பீடில் இடித்ததினால் ஒருசைடாக கால்போட்டு உட்கார்ந்திருந்த அழகுநிலா துண்டாக தூக்கி எறியப்பட்டாள்.

பைக்குடன் கீழே சரிந்த ரமேஷ் கைகால்களில் பயங்கர சிராய்ப்புடன் எழுந்துகொள்ள சிரமப்பட்ட நேரம் பின்னால் காலேஜ் ஸ்டூடன்ட் ஒரு ஐந்து பைக்கில் வந்தவர்கள் வேகமாக அவனின் அருகில் இறங்கி அவன் எந்திரிக்க உதவி செய்தனர்

மற்ற இரண்டுபேர் சற்று தளி விழுந்திருந்த அழ்குநிலாவின் அருகில் சென்றனர் தலையில் இருந்து ரத்தம் வழிய மயக்கத்திற்கு சென்றுகொண்டிருந்த அழ்குநிலாவை பார்த்ததும் தூக்குவதற்குப் பயந்து ஆம்புலன்சிற்கு போன்செய்தனர்.

கஷ்ட்டப்பட்டு எழுந்து ரமேஷ் அழ்குநிலாவிற்கு என்ன ஆச்சோ என்று பதறி அவளின் அருகில் சிராய்புக்காயம் ஏற்படுத்திய வலியையும் பொருட்படுத்தாமல் வந்து அவளின் தலையை தன மடியில் தாங்கியநேரம் அவனின் சட்டைப்பையில் இருந்த போன் சத்தம் எழுப்பியது

அதை எடுத்து காதில் வைத்ததும் அந்தப்பக்கமிருந்து ஓர் குரல் பேசாம அங்கு வருகிற ஆம்புலன்சில் அவளைமட்டும் ஏற்றிவிட்டு நீபாட்டுக்கு உன்வழிய பார்த்துக்கிட்டு போய்கிட்டேயிரு இல்லையென்றால் நீயும் குளோஸ் ஆகிடுவ, என்று மிரட்டிவிட்டு போனை வைத்துவிட்டான். உறைந்துபோய் அவன் அடுத்து என்னசெய்ய என்று யோசிக்க முடியாமல் இருந்த சமயம் .

அடிபட்டு மயக்கத்திற்கு போய்கொண்டிருந்த அழகுநிலா தன கையில் அவளின் பேக்கை சுற்றி வைத்திருந்ததால் அந்த பேக்கும் அவளின் கையிலேதான் மாட்டி இருந்தது .

ரமேசின் கையில் தட்டி ரமேஷ்.... என்று கஷ்ட்டப்பட்டு கூப்பிட்டவள் தன கையில் இருந்த பேக்கை பார்த்து போன் மத்தவங்க கைக்கு போய்விடக் கூடாது என்று சொல்லியபடி மயங்கினாள்....

----தொடரும்----

Episode 07

Episode 09

{kunena_discuss:1144}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.