(Reading time: 26 - 51 minutes)

முதல் இடமாக, அந்த இடத்தைப் பற்றி விளக்கும் படியாக ஒரு அருங்காட்சியகம் இருந்தது. அதில் அங்கு எப்படி, முதல் முதல் வந்தனர், எவ்வாறு அங்கு இந்த கட்டிடத்தை கட்டினர் என்று பொம்மைகளாகவும், போட்டோக்கலாகவும், காணொளி காட்சியாகவும் இருந்தது.

அடுத்து பனிச் சிற்பங்கள் அழகாக காட்சியளித்தது. அந்த இடம் முழுவதும் பனி குகையாக இருந்தது. பனியில் சிற்பங்கள் செய்து அழகாக அடுக்கி வைத்திருந்தனர். அங்கிருந்த சீதோசன நிலைக்கு அவைகள் உருகாமல், வைரத்தால் செய்த சிலை போல் காட்சி அளித்தது.

ஒரு இடத்தில் பனியில் நாம் சறுக்கி விளையாட ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் மற்ற பனி விளையாட்டு உபகரணங்கள் வாடகைக்கும் கிடைத்தது. இம்முறை இந்தர் பணியுடன் விளையாடாமல் எல்லா ஆட்டத்தையும் பூஜாவிடம் மட்டுமே வைத்துக் கொண்டான்.

அங்கிருந்த மேல் தளத்திற்கு லிப்டில் சென்ற பொழுது டாப் ஆப் யுரோப் என்ற பலகையின் முன் நின்று அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொன்றிருந்தனர். அங்கு ஓர் இடத்தில் வெளி இடமாக, நமது மொட்டை மாடி போல் இருந்தது. அங்கிருந்து பார்த்தால் எங்கும் பணியாகவே காட்சி அளித்து. குளிர் கண்ணாடி இல்லாமல் பார்க்கவே முடியவில்லை. கண் அவ்வளவு கூசியது.

அதற்கு கீழ் தளத்தில் சுவிஸ் சாக்லேட்கள் எவ்வாறு தாயாரிக்கிறார்கள் என்று செய்முறை விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த கடையில் சாக்லேட்கள் விற்கவும் செய்தனர். பல வகையான சாக்லேட்கள் இருந்தன. அவற்றில் சிலவற்றை வாங்கி முடித்து அங்கிருந்த உணவகத்தில் சாப்பிட்டனர்.

எல்லாம் முடிந்து மறுபடி இரயிலில் ஏறி கீழே வந்து காரை எடுத்து கிளம்பிய பொழுது பூஜா சிறிது சோகமாக இருந்தாள்.

“என்னடா  சோர்வா இருக்கா “ என்று இந்தர் கேட்க.........

“எனக்கு நம்ம சொந்தகாரங்க யாரையாவது பார்க்கணும் போல இருக்கு ஜித்து” என பூஜா சிணுங்கலாக கூற

“ஏண்டா, அதுக்குள்ள உனக்கு நான் போர் அடிச்சுடேனா? என சோக முகமாக இந்தர் கேட்க.......

“நீங்க எப்பவும் எனக்கு போர் அடிக்க மாட்டிங்க ஜித்துமா. இனிப்பாக சாப்பிடும் பொழுது எதோ காரம் சாப்பிட பிடிப்பது போல்” என கூறியபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் பூஜா.......

ஒரு கையால் கார் ஒட்டியபடி, மற்ற கையில் போனை எடுத்த இந்தர் எண்ணை அமுக்கி மறுமுனையில் குரல் கேட்டவுடன் “சித்தி” என்றான். சிறிது நேரம் பேசி முடித்து, பூஜாவிடம் திரும்பி “நாளைக்கு சித்தி வீட்டுக்கு போலாம்டா” என்று கூறினான். அவர்கள் இங்கு வந்தும் இரண்டு வாரங்கள் முடிய போகிறது என்பதால்.

காலையில் கிளம்பி நண்பனது சூப்பர் மார்க்கட்டில் அவனது விருந்தினர் மாளிகையின் சாவியை கொடுத்துவிட்டு, இரண்டு மணி நேர பயணத்தில் இருந்த சித்தியின் வீட்டை அடைந்தனர்.

அவர்கள் உள்ளே நுழைந்த பொழுது அவர்கள் வீட்டு ஹாலில் அர்ஜுன், கதிர், அபி அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் சத்தம் கேட்டு வெளியே வந்த சுஜி, சம்யுக்தாவை பார்த்தவுடன் பூஜாவிற்கு ஆனந்தமாகி விட்டது. அத்தம்மா என்று அழைத்தபடி ஓடிச் சென்று சம்யுக்தாவை அனைத்துக் கொண்டாள் பூஜா........

அதைப் பார்த்த சுஜி,” என்ன இந்தர், பூஜாவை ரொம்ப கொடுமை படுத்திட்ட போல இருக்கே. இப்படி மாமியாரையே வந்து அணைச்சுகறா? என்று இந்தரை வாரினார் அவரது பாணியில்.

“சித்தி, நான் எந்த அளவுக்கு அவளை நல்லா வச்சு இருந்தா, இப்படி மாமியாரையே வந்து அணைசுப்பா? என்று எதிர் கேள்வி கேட்டு சித்தியை மடக்கினான் இந்தர்.

“நான் சொன்னதை வைத்தே, என்னை மடக்கிடுவியே படவா” என்று பெருமையுடன் கூறிக் கொண்டார் சுஜி.

“என்ன சித்தப்பா அபி எப்படி பிசினசை பார்த்துக் கொள்கிறான்” என்று கதிரிடம் கேட்டான் இந்தர்.

“உன் அளவுக்கு தொழிலில் மூழ்கி எல்லாம் பார்ப்பது இல்லை. எப்பொழுதும், போனில் தான் மூழ்கி இருக்கான். நீ தான் அவனுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார் கதிர்.

பக்கத்தில் இருந்த அபியிடம் திரும்பி “என்னடா” என்றான் இந்தர்.

“நான் போன் செய்ய மாட்டேன் அண்ணா, குழலி தான்......... நான் என்ன செய்யட்டும்.” என்று நீட்டி முழங்கினான் அபி, இந்தருக்கு மட்டும் கேட்கும் குரலில். ஆனால் அது இந்தருக்கு அடுத்து இருந்த பூஜாவின் காதுகளிலும் விழுந்தது.

“ரொம்ப சிம்பிள்டா, பெருசா ஒரு சண்டை போடு, கொஞ்ச நாளைக்கு ஒரு தொந்தரவும் இருக்காது. பின்பு ஒரு சாரி கேட்டு முடித்து கொள்ளலாம்” என கூறிக் கொண்டிருக்கும் பொழுதே யாருக்கும் தெரியாமல் பூஜா அவனது கைகளில் கிள்ளினாள்.

“ஐயோ சித்தி, இங்க பாருங்க பூஜா என்னை கிள்ளறா, நான் எதோ அவளை கொடுமை படுத்தறேன்னு சொன்னிங்க? என கேட்டு சுஜியிடம் பிராது வைத்தான் இந்தர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.