(Reading time: 26 - 51 minutes)

“நல்ல ஆள் கிட்ட போய் நியாயம் கேட்கிற!!!!!! நான் ஏன் இவ்வளவு உயரமா இருக்கேன்னு நினைச்சே? உங்க சித்தி என் தலையில் கொட்டி, கொட்டி தான், ஒவ்வொரு முறை கொட்டும் பொழுதும் கொஞ்சம் வீங்கும் என் தலை” என்று சுஜியை வாரினார் கதிர். அங்கு ஒரு பெரிய சிரிப்பலையே எழுந்தது.

இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டில் இருந்து விருந்தோம்பல் முடித்து அனைவரும் சேர்ந்து எங்காவது செல்லலாம் என தீர்மானித்தனர். எங்கு செல்வது என யோசித்துக் கொண்டிருந்த பொழுது, ஆளாளுக்கு ஒரு இடத்தை கூறிக் கொண்டிருந்தனர்.

“அண்ணா, பாரிஸ் போய் வரலாம், ஜுரிச்லிருந்து பாரிஸுக்கு புல்லெட் டிரைனில் செல்லலாம்.  காரில் சென்றால் ஆறரை மணி நேரம் ஆகும். ஆனால் இந்த புல்லட் டிரைனின் சென்றால் நான்கு மணி நேரம் தான். வழியெங்கும் இயக்கை காட்சிகளும் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும்.” என கூறிய பொழுது அனைவரும் ஒத்துக் கொண்டனர். மறு நாள் மதிய டிரைனில் கிளம்ப, எல்லா ஏற்பாடுகளையும் அபியே கவனித்துக் கொண்டான்.

அன்று இரவு படுக்கையில் பூஜாவை தனது கையணைப்பில் வைத்தபடி பேசிக் கொண்டிருந்தான் இந்தர்.நடுவே அபியை பற்றிய பேச்சும் வந்தது.

“இந்த குழலியிடம் பேச வேண்டும். அபியை கொஞ்ச நாள் தொந்தரவு செய்யாதே என்று. அவனும் நல்ல படியாக பிசினசை கவனிக்க வேண்டும் தானே” என இந்தர் கூறிய பொழுது........... களுக்கென்று சிரித்தாள் பூஜா.

“என்னடா சிரிக்கற? என பரிதாபமாக கேட்டான் இந்தர்.

“ஜித்துமா, இப்படி குழந்தையா இருக்கிங்களே, குழலி ஒன்னும் அபியை தொந்தரவு செய்யலை. உங்க அபி தான், அவளை படிக்க விடாம போன் செய்து கடலை போட்டுட்டு இருக்கார்.” என கூறினாள் பூஜா.

“நீ எதை வச்சு அப்படி சொல்கிறாய்” என இந்தர் கேட்டதற்க்கு .......

“நேற்று தான் குழலியுடன் சாட் செய்தேன், அப்போ சொன்னாள், எதோ ப்ரோஜக்ட் சம்பந்தமா பாரிஸ் வரப் போவதாக. இன்று அபி அழகாக, பாரிஸ் போக திட்டம் போட்டு, உங்க எல்லோரையும் ஒத்துக் கொள்ள வைத்து விட்டார்.” என பூஜா விளக்கிக் கூறினாள்.

“நேற்றே என்னிடம் சொன்னான்டா. அவன் சொல்லும் பொழுது மறுத்து சொல்லாமல் இருக்கும்படி. இருந்தாலும் குழலி எதுக்கு அவனிடம் சொல்ல வேண்டும், பாரிஸ் வருவதை. “ என அபியை தாங்கி பேசினான் இந்தர்.

“நீங்க பசங்களுக்கு தானே ஆதரவா பேசுவீங்க “ என பூஜா பெண்களுக்கு கொடி பிடித்தாள்.

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லைடா. குழலியும் எனக்கு அத்தை பெண் தானே. அப்படி இருக்கும் பொழுது நான் ஒரு பக்கம் பேசுவேன் என்று நினைகிறியா?

“நான் எதுவும் நினைக்கவில்லை. குட் நைட்”  என்று கூறி திரும்பி படுத்துக் கொண்டாள் பூஜா........

“ஹேய், அவங்க விஷயமா நாம் ஏன் சண்டை போடனும். நீ யார் பக்கம் நியாயம் என்று சொல்றியோ அது தான் சரி” என்று கூறி அவளை தாஜா செய்து சிறிது நேரத்திற்கு அவளது தூக்கத்தை இனிதாக கெடுத்தான் இந்தர்.

று நாள் காலை அனைவரும் காரில் கிளம்பி ஜூரிட்ச் ரயில் நிலையத்தை அடைந்தனர். ஓட்டுனரை காரை பாரிஸுக்கு எடுத்து வரும் படி கூறி புல்லட் டிரைனில் ஏறினர். மாடி ரயிலாகவும் இருந்தது. எல்லா பெட்டிகளிலும் டிவி இணைக்கப்பட்டு இருந்தது. ரயில் எவ்வளவு வேகத்தில் ஓடுகிறது, அடுத்து என்ன நிலையம் வரும் என்ற தகவல்களுடன் நடு நடுவே சில நகைச்சுவை காட்சிகளும் இடம் பெற்றன. சுவிசிலிருந்து , பிரான்ஸ் செல்லும் பாதை முழுவதும் இயற்கை காட்சி காண்போர் கண்களுக்கு விருந்து படைத்தது. 650 கிமீ தூரத்தை நான்கே மணி நேரத்தில் கடந்து பாரிஸை அடைந்தது.

ரயில் நிலையத்தில் இவர்களை இறங்கிய பொழுது அவர்களை வரவேற்க குழலி அவர்களுக்காக காத்திருந்தாள். மாமா என்று அழைத்தபடி அர்ஜுனை அனைத்துக் கொண்டாள். அர்ஜுனுக்கும் ஆச்சரியமாக இருந்தது.

“நீ இங்க என்னடா செய்யற” என்று குழலியை கேட்டார் அர்ஜுன்.

“ஒரு ப்ராஜக்ட் சம்பந்தமா இங்கு மூன்று வாரம் படிக்க வந்திருக்கேன் மாமா” என பதில் அளித்தாள் குழலி.

“உனக்கு எப்படி நாங்கள் இந்த ரயிலில் வருவது தெரியும்” என அர்ஜுன் கேட்ட பொழுது சம்யுக்தா அபியை பார்த்தார். அர்ஜுனுக்கு தன் தங்கை மகளை அங்கு பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

“இந்தர் சொன்னாங்க மாமா. எனக்கும் வகுப்பு முடிந்து விட்டது. அதனால் தான் இங்கேயே உங்கள் எல்லோரையும் பார்க்க வந்தேன்.” என குழலி கூறிய பொழுது இம்முறை பூஜா இந்தரை நோக்கினாள்.

இந்தரும் கண்ணால் இப்போ ஒன்றும் சொல்லி விடாதே என்று பூஜாவிடம் கெஞ்சினான். பூஜாவும் மைன்ட் வாய்ஸில் “உங்களுக்கு இன்று பால்கணியில் தான் படுக்கைடா மவனே” என்று கூறிக் கொண்டாள்.

அனைவரும் ஹோட்டலில் செக் இன் செய்து அவரவர் அறைக்கு சென்றதும் “இங்க என்ன நடக்குது இந்தர்? நீங்களா சொன்னீங்க குழலியிடம்? என பூஜா கேட்க.........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.