(Reading time: 24 - 48 minutes)

ஆனால் அவனை பார்த்து விதி கைக்கொட்டி சிரித்துக் கொண்டிருந்தது..

அவனது அசைவில் முழித்தவள் அவனை பார்க்க அவன் அவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவள் அப்பொழுது தான் தன் நிலைமையை  உணர்ந்தாள்.

அவள் முழிதத்தும் அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து அவளை விட்டு நகர்ந்து குளியலறை நோக்கி சென்றான் அவன்.

திரும்பி வந்தவன் அவளை கிளம்பி கீழே வர சொல்லிவிட்டு செல்ல அவளும் கீழே கிளம்பி வந்தாள்.

அவள் வரும் பொழுது அனைவரும் காலை உணவு உண்டுக்கொண்டிருந்தனர்.

அவள் வரவும் அவளையும் உணவு உண்ண அழைத்த ஜானகி அவளுக்கு காலை உணவை எடுத்து வைக்க அதை அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.

தனது மகளையே பார்த்துக் கொண்டிருந்தார் மலர்கண்ணன்.தனது மனைவியின் பண்புகளையும் தனது கோபத்தையும் கொண்டு பிறந்துள்ள அவளை பார்க்க பார்க்க அவருக்கு திகட்டவில்லை

அதுவும் நேற்று தனது மகளை தனது ஆசை  மருமகனுடன் பார்த்தவருக்கு அவர்களது ஜோடி பொருத்தத்தை பார்த்து பெருத்த நிறைவு...

சாப்பிட்டு கொண்டிருந்தவளுக்கு போறேற அதில் பதறிபோனவர் அவளிடம் ஓடி சென்று அவள் தலையை தட்டி தண்ணீர் எடுத்துக் கொடுக்க

தண்ணீரை வாங்கியவள் தந்தவரின் முகத்தைப் பார்க்க அது தனது தந்தை என தெரிந்தவுடன் அதை குடிக்காமல் எழுந்து சென்றுவிட..

அங்கு இருந்த அனைவருக்கும் மீண்டும் கவலை வந்துக் குடிக் கொள்ள ஆரம்பித்தது..

அவள் அவ்வாறு சென்றதும் மலர்கண்ணன் தனது அறைக்கு சென்று விட அஸ்வின் தனது கோபத்தை அவளிடம் ஏங்கே காட்டி விடுவோமோ என்று வெளியில் சென்று விட..

சமயலறைக்கு சென்று நீர் அருந்தி விட்டு வந்தவளும் தனது அறைக்கு செல்ல அந்த இடமே அமைதியாக இருந்தது..

அனைவரின் மனதிலும் இந்த பிரச்சனை எப்பொழுது முடியும் என்பதுதான் எதிர் பார்ப்பாக இருந்த்தது...

அனைவரும் அமைதியாக தங்கள் வேலையை பார்க்க சென்றுவிட,நாராயணன் தாத்தாவும்,

ஜனார்த்தனன் தாத்தாவும் தோட்டத்தை பார்த்தவாறு ஒய்வு எடுப்பது போல அமர்ந்து இருந்தனர்.

சதீஷ்,நித்தில்லா,விஷ்வா,காவ்யா,கவிஸ்ரீ,சஞ்சீவ் என  ஆறு பேரும் தங்களது கூட்டத்தை தோட்டத்தில் போட்டனர்.

“அப்படி என்ன தான் நடந்திருக்கும்...”என்று சதீஷ்  கூற

“அது தெரிஞ்சதான் நாம மாமாவையும் கவியையும் எப்படியாவது சேர்த்து வைக்க முடியும்..” என்று விஷ்வா கூற

“ஆமாம் விஷ்வா..,அப்பா ஒவ்வொரு நாளும் அக்கா எப்ப பேசுவாங்கனு காத்திடிருக்காங்க..,

ஆனா அக்கா பேசவே மாட்டாங்குறாங்க..,அக்காகிட்ட கோபப்பட்டாளும் அவ கிட்ட கோப படாதீங்க அப்படினு சொல்லுறாரு..,அவளோட நிலையில இருந்து யோசிங்கனு சொல்லுறாங்க....”என்று சொல்லி கவிஸ்ரீ வேதனைபட

“விடுடா கவி..,அப்பா சொல்லுற மாதிரி எதாவது காரணம் இருக்கும் அதுதான் நாம என்னான்னு கண்டுபுடிக்கணும்...”என்று சஞ்சீவ் கூற

“ஆமாம் சஞ்சீவ் நீ சொல்லுறது சரி..,இதுக்கு எல்லாம் பதில நாம தாத்தாங்கக்கிட்ட  கேட்டாதான் பதில் கிடைக்கும் நாம போய் அவங்க கிட்ட கேட்போம்..”என்று விஷ்வா கூற

அனைவரும் அதை ஒத்துக் கொண்டு அவர்களது தாத்தாக்களை பார்க்க சென்றனர்.

ஜனார்த்தனனும்,நாராயணனும் ஹாலில் அமர்ந்திருக்க அங்கே சென்றனர்

ஆறு பேரும் அவர்களது அருகில் அமர்ந்துக் கொள்ள,”என்னப்பா..,ஒரே கூட்டணியா வந்திருகீங்க..”என்று ஜனார்த்தனன் தாத்தா கேட்க

“ஒன்னும் இல்ல தாத்தா எங்களுக்கு தெரியாதா விஷயத்த தெரிஞ்சிக்கிட்டு போகலாம்னு வந்தோம்..அதுக்கான பதில் உங்களுக்கு தான் தெரியும்...”என்று சஞ்சீவ் கூற

“அப்படி என்னப்பா எங்களுக்கு தெரிஞ்சது..,சொல்லு தாத்தா பதில் சொல்லுறேன்..”,என்று நாராயணன் தாத்தா கூற

“அது வந்து தாத்தா..,கவியரசி அத்தைய பத்தி சொல்லுங்க...”என்று காவ்யா கூற

இருவரும் அமைதிக் காத்தனர்.

“தாத்தா நீங்க அவங்களுக்கும்..,சித்தப்பாவுக்கும் இடையே என்ன நடந்துதுனு சொல்லுங்க..., எங்களுக்கு  என்ன நடந்துதுன்னு தெரிஞ்சாதான்..,சித்தப்பாவையும்,கவிமலரையையும் சேர்த்து வைக்க எங்களால என்ன பண்ண முடியுமோ அத நாங்க பண்ணவோம் தாத்தா..”என்று சதீஷ் கூற

இருவரும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டு பின்பு நாராயணன் சொல்ல ஆரம்பித்தார்.கவி அம்மா கவியரசியின் கதையை...

நாராயணனின் அண்ணன் இராமலிங்கம்-பத்மினியின் மகள் தான் கவியரசி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.