(Reading time: 24 - 48 minutes)

நாராயணின் அனைத்துமாய் இருந்தவர்கள் தான் அவர்கள்...அவர்களுக்கு பல ஆண்டுகள் குழந்தையில்லாமல் இருந்து அதன் பிறகு பிறந்தவள் தான் கவியரசி.

அவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கு  முன்பே நாராயணனுக்கும் அவரது மனைவி லட்சுமிதேவிக்கும் நடராஜன் பிறந்துவிட நடராஜன் பெரியம்மா-பெரியப்பாவின் செல்ல பிள்ளையாகி போய்விட்டான்.

அவனை தனது சொந்த குழந்தை போல் அவர்கள் பார்த்துக் கொள்ள அதற்கு அடுத்ததாக பிறந்தவன் தான் நாகராஜன்.அதற்கு  பிறகு தான் பத்மினிக்கு கவியரசி பிறந்தாள்.

நடராஜன் கவி பிறப்பதற்கு முன்பே அவனுக்கு பாப்பா வந்து  விட்டது  என்று சொல்லி அவ்வளவு சந்தோஷபட்டான்.

அதுவும் அவள் பிறந்த பொழுது அவளது கொழுகொழு கன்னங்களை பார்த்தவனுக்கு அவள் அவனது பொம்மையாகி போனாள்.

இராமலிங்கதிற்கும்-பத்மினிக்கும் பல் வருடங்கள் கழித்து குழந்தை பிறந்ததால் அவர்கள் நடராஜனிடம் அவர்களுக்கு எதாவது ஆனாலும் அவன் தான் அவன் தங்கையை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவனிடம் கூறி வளத்தார்கள்`

அவனுக்கு கவியரசி எப்படியோ,அதுபோல நாகராஜனுக்கு மாலதி ஆனால் அவர்கள் நால்வரும் ஒற்றுமையாக தான் இருந்தனர்.

இடையில் இராமலிங்கம்  நோய்வாய்ப்பட்டு இறந்து விட தனது கணவரை தொடர்ந்து பத்மினியும் இறந்துவிட  அது கவியரசிக்கு மட்டும் இல்லை நாராயணனுக்கும்,லட்சுமிதேவிக்கும் கூட பெரிய இழப்பாக இருந்தது.

நாராயணனும்,ஜனார்தனனும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள்.

தொழிலும் இணைத்து செய்ய அவர்களது நட்பு நன்கு பலம் அடைந்திருந்தது.

லட்சுமிதேவிக்கு தனது மூன்று பிள்ளைகளை விட நன்றாகவே கவியரசியின் மீது பாசம் வைத்து வளர்த்திருந்தார்.

வருடங்கள் ஓட நடராஜன்,நாகராஜன் அனைவருக்கும் திருமணம் நடக்க குடும்பம் சந்தோசமாக தான் இருந்தது.

அடுத்து கவியரசியின் திருமண பேச்சு நடக்க நளினி  தனது அண்ணன் மகாதேவனுக்கு கவியை கட்டிவைக்க கூற

பெரியவர்கள்  அனைவரும் ஒத்துக் கொண்டு திருமணம் நடக்க முடிவு செய்யப்பட்டது.

அதுபோல ஜனார்த்தனனும்,நாராயணனும் தங்களது உறவை பல படுத்த விரும்பி மாலதிக்கும்-மலர்கண்ணனுக்கும் திருமணம் பேசி முடித்து ஒரே மேடையில் திருமணம் என்று முடிவு எடுத்தனர்.

ஆனால் திருமணநாளிற்கு முதல் நாள் கவியரசியும்-மலர்கண்ணனும் ஓடி போய் திருமணம் செய்துக் கொள்ள அது மூன்று குடும்பங்களுக்கும் இடையே பெரிய பிரச்சனையாய் வெடித்து அதன் பிறகு  மகாதேவனுக்கும் மாலதிக்கும் திருமணம் நடைபெற  நண்பர்கள் இருவரும் தங்களது உறவை முறித்துக் கொண்டனர்.

அந்த பிரச்சனையில் மிகவும் மனமொடிந்த லட்சுமிதேவி படுக்கையில் விழுந்த லட்சுமிதேவியும் இறந்து விட மொத்த குடும்பமும் அதிர்ந்துதான் போனது.

அதன் பிறகு இரண்டு குடும்பமும் அவார்களை தேடவில்லை.

கவியரசி இறப்பதற்கு முன்பு தனது அண்ணனுக்கு லெட்டர் போடா அதன் பிறகுதான் நடராஜனும்,நாராயணனும் சேர்ந்து சென்றபோது கவியரசி இறந்துவிட,கவிமலரை அழைத்து வந்தனர்.அதன் பிறகு நடந்தது தான் உங்களுக்கு தெரியுமே என்று கதையை முடித்தார் நாராயணன்.

“ஓகே தாத்தா..,ஆனா அக்கா அப்பா மேல இவ்வளவு கோபமா எதுக்கு இருக்காங்க...,அதுக்கான காரணம் இதுவா மட்டும் இருக்கும்னு தோணலை...”என்று கவிஸ்ரீ கூற

“எங்களுக்கு தெரிஞ்சதான் அவ்வளவு தான்மா..,அவங்களுக்குள்ள என்ன நடந்தது என்பதுக்கு உங்க அப்பா தான்மா பதில் சொல்லவேண்டும்..”என்றார் ஜனார்த்தனன்.

அவர்களிடம் கதையெல்லாம் கேட்டு வந்த அனைவருக்கும் ஒன்று புரிந்தது இந்த காரணம் மட்டும் இல்லாமல் வேறு எதுவோ இருக்கிறது என்று அவர்களுக்கு புரிந்தது.

அந்தஅ கேள்விக்கு பதில் அவர்களுக்கு தெரிந்து இருவரிடமே உள்ளது ஒன்று மலர்கண்ணன், இன்னொன்று கவிமலர்.அவர்கள் பிரச்சனையை கூறினால் தான் அவர்களது இந்த பிரச்சனையை முடிக்க முடியும்.

 இவர்கள் இப்படி யோசிக்க மீண்டும் வீட்டிற்கு வந்தான் அஸ்வின்.வந்தவன் தனது அறைக்கு செல்ல அங்கே அழோகியவமாய் அவனது மனைவி எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது பின் சென்றவன் அவளை பின்னிருந்து அணைத்தான்.”என்ன கவிம்மா என்ன யோசிக்குற..”என்று அவன் கேட்க

“அஷு மாமா  நான் ஒண்ணு கேட்டா பதில் சொல்லுவிங்கள...”என்று கவி கேட்க

“என்ன கேள்விடி என் பொண்டாட்டி..”என்று அஸ்வின் கேட்க

“என்ன உங்களுக்கு புடிக்குமா மாமா..”என்று அவள் கேட்க

“என்னடி நேத்துதான் வாழ்கையையே ஸ்டார்ட் பண்ணோம்..,அதுக்குள்ள புடிக்குமானு கேக்குற..,லூசு உன்ன ரொம்ப புடிக்கும்...புரிதா..,மனச போட்டு குழப்பிக்காமா கொஞ்ச நேரம் தூங்கு..”என்று கூறியவன் அவளை தூங்க வைத்து விட்டு அறையை விட்டு வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.