(Reading time: 18 - 36 minutes)

சௌம்யாவை தாங்கிபிடித்து ஸோஃபாவில் உட்கார வைத்து, தண்ணீரை பருக கொடுக்க...அவளும் அதை பருகிக்கொண்டிருக்கையில்...

அவர்களை நெருங்கிய ஜெய், “சௌமிக்கு என்னாச்சுடா? உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்று படபடக்க...

“ரிலாக்ஸ் ஜெய்! அவளுக்கு ஒன்னுமில்லை...” என்றவன் சிறிதாக மேடிட்டிருந்த மனைவியின் வயிற்றை சுட்டி, “இங்கிருக்க பேபிக்குதா கொஞ்சம் பயமா போச்சு” என்று சொல்லவும் ஜெய்யும் சரயூவும் ஒரே சமயத்தில் அதை கவனித்தனர்.

“சாரிடா! சாரி சௌமி! ரொம்ப நாள் கழிச்சு பார்க்கவும், சரூ உன்னை சரியா கவனிச்சிருக்க மாட்டா”

“சாரி சௌமி!” என்று சற்று தள்ளி நின்றே மன்னிப்பை வேண்டினாள் சரயூ.

வாடிபோன தோழியின் முகத்தை கண்டு கணவனை முறைத்தவள், “நீயென்ன தெரிஞ்சா செஞ்ச? விடு சரயூ! பாரு, எனக்கு ஒன்னுமில்ல! ரூபின்தா ஓவரா சீன் போட்டுட்டா” என்று புன்னகைத்தாலும், இவள் ஒதுங்கியே நின்றிருக்க....

“நீ அங்க உட்காரு ரூபின்!” என்று கணவனை எதிர்புற ஸோஃபாவிற்கு போக சொல்லிவிட்டு, “இங்க வா சரயூ! நாம பேச வேண்டியது நிறைய இருக்கு.  இவன் பக்கத்திலிருந்தா நமக்கு வசதியா இருக்காது.  வா வா” என்று தயங்கி நின்றவளை தன்னருகில் அமர்த்தி கொண்டாள் சௌம்யா.

ரூபினும் ஜெய்யும் அவர்கள் எதிரில் அமர்ந்துவிட...

“கங்க்ராட்ஸ் ஜெய்! எப்போ கல்யாணமாச்சு? நேத்து கூட கேட்கலாம்னு நினைச்ச... அப்றம், சரி வீட்ல பேசிக்கலாம்னு சும்மா இருந்துட்ட”

“தேங்க்ஸ்டா மச்சா! மூனு மாசத்துக்கு முன்னாடிதா எங்க கல்யாணம் நடந்துச்சு.  சாரிடா அப்ப கூட உங்களையெல்லாம் கூப்பிடனும்னு எனக்கு தோனவேயில்லை”

“சரயூவை பார்த்தா உலகமே மறந்திரும் உனக்கு.  அதை தாண்டி என்னோட நினைப்பு எங்க வர போகுது?” என்றவனின் கேலியில் ஜெய்யின் கண்கள் தானாக மனைவியை தழுவியது.

சௌம்யாவின் மேடிட்ட வயிற்றின் மீது ஆவலாக கையை வைத்து எதையோ சொல்லவும்... தன்னவளும் இதே கோலத்தில், தாய்மையின் பூரிப்போடு அவனருகே உட்கார்ந்திருப்பதாக கற்பனையில் கண்ட ஜெய்யின் விழிகளில் ஏக்கம் குடிகொண்டது. 

நண்பனை கவனித்த ரூபினுக்கு ஏதோ புரிய, அவனை அழைத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றான்.

“சொல்லு சஞ்சய்! உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி ஒன்னு சேர்ந்துட்டீங்கனு முழுசா சந்தோஷபட முடியாம, உன்னோட பார்வையிருக்கே... காலேஜுல பார்த்த அதே சஞ்சயைதா இன்னைக்கும் பார்த்த... சரயூ உன்னோட மனைவிங்குற உரிமைக்கு பதிலா உன்னோட கண்ணுல இன்னமும் ஏக்கம்தா தெரியுது.  அவளும் முன்ன மாதிரி தெரியல! பழைய சரயூவா இருந்திருந்த இந்நேரத்துக்கு என்னை அடிக்காம அவளால இருந்திருக்க முடியாது.  சரி! நாலு வருஷ இடைவெளினால அதை செய்யலனாலும் ஒரு வார்த்தை எங்கிட்ட பேசலையே... எங்கிட்டதா பேசலை.... உங்கிட்டயாவது பேசிருக்கலாமே! அதுவும் இல்லையே! சொல்லுடா மச்சா! சரயூக்கு என்னாச்சு?”

காவல்துறையின் ஆராயும் பார்வையை வெளியிட்ட நண்பனின் பேச்சை மெச்சியவன், கூர்கில் தொடங்கி தன்னை சரயூ கொல்ல வந்தது வரை எல்லாவற்றியும் சொல்லி முடிக்கவும்...

“சாரிடா மச்சா! இதுவரைக்கும் நடந்த பிரச்சனையில உனக்கு துணையா இல்லாம போயிருக்கலாம்...ஆனா இனிமேல் நான் இருக்கேன்டா உனக்கு!” என்றவனிடத்தில் உணர்ச்சி மிகுதியால் குரல் தழுதழுத்தது. 

ன்று ஜெய் கோயிலுக்கு வந்திருந்தான்!

ரூபினிடம் பிரச்சனையை ஒப்படைத்து இரு மாதங்கள் கடந்த போதும் எந்த முன்னேற்றமும் இன்றி ஆரம்பித்த இடத்திலேயே நின்றிருந்தனர்.  சரயூவின் மாற்றங்கள் அனைத்துமே அந்த கூர்க் பயணத்துக்கு பிறகானது.  அதனால் கூர்கில் வைத்து தான் ஏதோ நடந்திருக்க வேண்டுமென முடிவுக்கு வந்திருந்தனர்.  ரூபினும் அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட் சிசிடிவி ஃபூடெஜை வாங்கி பார்த்துவிட்டான்.  இரவு ஏழு மணியளவில் சரயூ ரிசார்ட்டிலிருந்து தனியாக வெளியேறுவதை காண முடிந்ததே தவிர அதற்கடுத்து எதையுமே அறிய முடியவில்லை.  

தன் அன்பினால் சரயூவிடத்தில் சில மாற்றங்களை கொண்டு வர முடிந்த ஜெய்யினால், அவள் ஒளிந்திருக்கும் கூட்டை உடைத்து, அவளை முழுதாக வெளி கொண்டு வர முடியாததால் சரயூவிடமிருந்தும் எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை.

இறைவனை தனக்கு வழிகாட்டும் படி வேண்டி கோயிலுக்கு வந்திருந்தான் ஜெய்.

இப்போதெல்லாம் சரயூவோடு அவன் அடிக்கடி இங்கு வருவதுண்டு.  இன்று ஏனோ மனம் தனிமையை நாட அவன் மட்டும் வந்திருந்தான்.

வழிபாட்டை முடித்தவன் கோயிலை பிரகாரத்தை சுற்றுகையில்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.