(Reading time: 11 - 22 minutes)

மாயாவின் அறையையே நான் தங்குவதற்கு எடுத்துக்கொண்ட காரணம் அவர்களின் அறையில் கேஸிக்கு சம்பந்தமாக ஏதாவது தகவல் கிடைக்கும் என்றுதான் ஆனால் அவர்களின் பர்சனல் டிராயர் சாவி தொலைந்து போனதாக வினிதா ஒரு முறை சொன்னாள். ஆனால் அவளறியாமல் அதை நான் ஆராய்ந்தது அவளுக்கு தெரியாது. வேண்டுமென்றே என்னை பர்வதம்மாள் அனுமதிக்கபட்டு இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள் அங்கே விஜயா என்னும் பெண்ணை என் கண்களில் பட செய்து, அவளுக்கு ஏதோ பொறி தட்டியதைப் போல உணரவைத்து டிரைவர் மணியின் மனைவியாக நடித்தவள் என்று அழகாக காட்சியை டிரைவர் மணியின் மேல் திருப்பினாள். 

எதற்காக...

இறந்து போன பெண் மாயாதான் என்று உணர்த்திட அவளுக்கு அந்த அவகாசம் தேவைப்பட்டது. மாயா எழுதியதைப் போல கிடைத்த கடிதம் டிரைவர் மணியின் வீட்டுக்குப் போய் வந்தபின்தான் எனக்கு கிடைத்தது. அதுவும் காணாமல் போன அந்த டிராயர் சாவியை கொண்டு வந்து நல்லபிள்ளை போல வினிதா என்னிடம் தந்து அந்த டிராயரைத் திறக்க சொல்லி அந்தக் கடிதத்தை என் கண்களில் பட வைத்தது அவளின் சாமர்த்தியம். டிரைவர் மணியை மாயாவிடம் பொய்சொல்லச் சொல்லி வேலைக்குச் சேர்த்ததே வினிதாதான், சந்துருவின் மேலும், பர்வதம்மாளின் மேலும் அவளுக்கு இருந்த கோபத்தை தீர்த்துக் கொள்ளத்தான் அவர்களைப் பற்றி நம்மிடம் பற்ற வைத்தது. சந்துருவின் பெண்பித்தை அவள் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள் இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொண்டு மாயாவின் சொத்தை அடைய திட்டம் போட்டனர். சந்துருவின் அம்மா பர்வதத்திற்கும் இது தெரியும் மாயாவிற்கு சிறுக சிறுக பித்து பிடிக்கும் மருந்தை செலுத்தி அவளை பைத்தியமாக்கிட வேண்டும் என்பது இவர்களின் திட்டம். இதற்கு உடந்தையாக இருந்தது டிரைவர் மணி அவனின் தம்பியின் பொறுப்பை நாங்கள் ஏற்றதும் அவன் எல்லாவற்ையும் கக்கிவிட்டான்.

இத்தனை நடந்திருக்கிறது என்னிடம் ஏன் சொல்லவில்லை,

மன்னிக்கவேண்டும் அசோக் என்னதான் நீங்க கமலின் உண்மையான நண்பனாக இருந்தாலும், எனக்கு அப்போது யாரையும் நம்பத் தோன்றவில்லை, அழகாய் காய் நகர்த்திய வினிதாவிற்க கமல் மாயாவின் காதல் எதிர்பாராத சறுக்கல் இந்த திருப்பத்தை இவர்கள் எதிர்பார்க்கவில்லை, பெங்களூருக்கு ஒரு நாட்டிய நிகழ்ச்சி சம்பந்தமாக வந்த வினிதாவின் கண்களில் பட்டதுதான் மாயாவைப் போலவே தோற்றம் கொண்ட சுப்ரியா. 

கடைசியில் வில்லன் இல்லையா வில்லி தானா ?!

இரண்டு பேருமே உண்டு. முழுமையாக விவரம் அறிய நாம் ஸ்டேஷன் செல்லலாம் அங்கே நமக்கு மிகப்பெரிய உண்மை காத்திருக்கிறது?!

டாக்டர் நீங்க சொல்லுங்க என் மாயா சீக்கிரம் கண் திறந்திடுவாங்களா ? 

ம்...மாயாவிற்கு இடைப்பட்ட நாளில் ஏதோ கொஞ்சம் மன நெருடல்கள் இருந்திருக்கிறது. அதனால் தான் அவங்க மூளை இயங்க மறுத்து இருக்கிறது. இது கோமாவில் ஒரு வகைதான், மனதளவில் நீங்க அவங்களை நெருங்கியிருக்கீங்க உங்களோட உடல் ஸ்பரிசத்தால் அவங்க மனதரா உணர்ந்திருக்காங்க, அதனால் அவங்க உடல்நிலையிலே நல்ல முன்னேற்றம் இருக்கு, கவலைப்பட வேண்டாம் இன்னும் கொஞ்ச நாளில் ஏன் கொஞ்ச நேரத்தில் வட அவங்க கண் விழிக்கலாம் 

ரொம்ப நன்றி டாக்டர் கமலின் கண்களில் நீர் அருவியாகக் கொட்டியது. வினிதா பரபரவென்று உள்ளே நுழைந்தாள். டாக்டரைப் பார்த்ததும் துணுக்குற்றாள். வினிதா மாயா கண்விழிச்சிட்டா...........கமலின் குரல் ஆர்ப்பரித்தது. 

மாயா வருவாள்

Episode # 19

Episode # 21

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.