Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (7 Votes)
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 02 - சசிரேகா - 5.0 out of 5 based on 7 votes
Pin It

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 02 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

ன்று 1997

ஊட்டி 

"வள் என் பொண்டாட்டி” என கூறிய சித்தார்த்தை பார்த்து அவனது தாத்தா, பாட்டி இருவருக்கும் சிரிப்பு வந்து சிரித்துவிட்டனர்.

அவர்களின் சிரிப்பை பற்றி கவலைப்படாமல் பார்வதியின் குழந்தையை அங்கிருந்த சோபாவில் நன்றாக அமர வைத்தான். அவளும் சரியாக அமர்ந்து கொண்டாள் சுற்றிலும் வேடிக்கை பார்த்தாள்.

அதற்குள் சித்தார்த் அவளை விட்டுவிட்டு நேராக தன் வீட்டு ப்ரிட்ஜ்க்கு சென்று ஒரு சின்ன கப்பில் ஐஸ்கிரீம் கொண்டுவந்து அவள் கையில் தந்தான்.

அதை பார்த்தவளுக்கு அதை எப்படி திறந்து சாப்பிடுவது என தெரியாமல் விழித்தாள்.

அவள் விழிப்பதை பார்த்தவன் அவளிடம்

”இந்தா சாப்பிடு உனக்குதான் இது, எனக்கு பிடிச்ச ப்ளேவர் ஐஸ்க்ரீம் இது நீ சாப்பிடு நல்லாயிருக்கும்” என்றான் சித்தார்த்

”மாத்தேன்” என கூறிவிட்டு சோபாவிலிருந்து இறங்கலானாள்.

அவளை மறுபடியும் தூக்கி சரியாக சோபாவில் அமரவைத்தவன் அவள் முன்பு ஒரு சிறிய ஸ்டூல் கொண்டு வந்து வைத்து அதில் அமர்ந்து ஐஸ்கிரீமை அவள் முன்பாக பிரித்து ஸ்பூன் மூலம் ஊட்டிவிட்டான்.

ஐஸ்கிரீம் அவளுக்கு மிகவும் பிடித்துப்போக சிரித்துக்கொண்டே உண்ண ஆரம்பித்தாள்.

அவளின் மகிழ்ச்சியை கண்டவன் கொஞ்சம் கொஞ்சமாக அவள் வாயில் ஐஸ்கிரீமை ஊட்டிவிட ஆரம்பித்தான்.

அதை பார்த்த தாத்தாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு அவனிடம் மறுமுறை

”யார்டா இந்த குழந்தை எங்கிருந்து தூக்கிட்டு வந்த” என தாத்தா வேதநாயகம் கேட்கவும் அதற்கு சித்தார்த் அவரிடம் பதில் சொல்லாமல் தன் பாட்டி சரோஜாவிடம் மட்டும் பதில் சொன்னான்.

”பக்கத்து வீட்டுக்கு புதுசா வந்திருக்கற அக்கா கிட்டயிருந்து இவளை தூக்கிட்டு வந்தேன் பாட்டி” என்றான் அதைக்கேட்ட பாட்டி ஏதோ நினைவுக்கு வந்தது போல் தன் கணவரிடம்,

”ஓ புதுக்குடித்தனமா ஆமாங்க நேத்து கூட அந்த வீட்டை சுத்தம் செஞ்சிட்டு இருந்தாங்க நானும் கேட்டேன் யாரோ போஸ்ட் மேன் குடும்பம் வருதுன்னு சொன்னாங்க சொன்னபடி வந்துட்டாங்க போல இருங்க நான் போய் அவங்ககிட்ட பேசி இங்க கூட்டிட்டு வர்றேன்” என கூறிவிட்டு பாட்டி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

பாட்டி சென்றதும் தாத்தாவிற்கு திலோவை பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது. அவளின் அழகான முகத்தை கண்டவர் அவளிடம் விளையாட ஆசை கொண்டார்.

அவருக்கும் சரி அவரின் மகன் சக்கரவர்த்திக்கும் சரி பெண் குழந்தைகளே இல்லை.

அதனால் அவருக்கு அந்த பெண் குழந்தையை பார்த்ததும் மிகவும் பிடித்து போகவே மெல்ல அவளிடம் வந்தவர் அவளை தூக்க முயற்சி செய்ய அதை தடுத்தான் சித்தார்த்.

”என்ன செய்றீங்க தாத்தா” என கோபமாக கத்த அதற்கு தாத்தா பொறுமையாக அவனிடம்

”இருடா நான் அவளை கொஞ்சம் தூக்கிக்கறேன் எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு நானும் அவளோட விளையாடிக்கிறேன்” என கூறவும் அதற்கு சித்தார்த் அவரை தடுத்து

”முடியாது தாத்தா அவள் என் பொண்டாட்டி நீங்க தள்ளி நில்லுங்க” என கோபப்பட அதற்கு தாத்தாவும் கோபத்தில் அவனிடம்

”டேய் என்னடா என் மேலயே கோபப்படறியா” என கத்த

”ஷ் கத்தாதீங்க தாத்தா அவள் சாப்பிடறா பார்த்தீங்கள்ல” என சொல்லவும் அவரும் அவள் சாப்பிடும் அழகை கண்டு ரசித்தவர் சித்தார்த்திடம்

”டேய் இப்படி வேகமா ஊட்டக் கூடாது கொஞ்சம் கொஞ்சமா ஊட்டனும் அதுவும் பொறுமையா ஊட்டனும் பாரு அவள் ட்ரஸ்லாம் ஐஸ்கிரீம் பட்டிருக்கு பாரு அதை முதல்ல துடைச்சிவிடு” என்றார்.

அதை கேட்டதும் அவனும் தன் கர்ச்சீப்பால் அவளது ட்ரஸ்ஸை க்ளீன் செய்ய அதை பார்த்தவள் ஆசையாக முதன் முதலாக தன் கையால் சித்துவின் கன்னத்தை பிடித்து விளையாட்டாக இழுத்தாள். அதனால் சிறிது வலிக்கவும் அவன் அவளைப்பார்த்து

”ஏய் விடு எதுக்கு என் கன்னத்தை பிடிச்சி இழுக்கற” என கத்தவும் தாத்தாவிற்கு சிரிப்பு வந்தது

”டேய் கத்தாதடா அவள் உன்கிட்ட விளையாடறா”

”ஓ அப்படியா சரி சரி இந்தா பிடிச்சிக்க” என கூறவும் அவளும் மேலும் அவன் தலைமுடியை பிடித்து இழுத்து அவன் கன்னத்தில் அறைந்தாள்.

”ஆ எதுக்குடி என்னை அடிக்கற” என கத்தவும் அதற்கு தாத்தா சித்துவை சமாதானப்படுத்தினார்

”டேய் கத்தாதடா அவள் உன்கிட்ட விளையாடறா”

”இது என்ன விளையாட்டு என்னை அவள் அடிக்கறா பாருங்க என் தலைமுடியை எப்படி கலைச்சிட்டாள்னு பாருங்க” என கோபப்படவும்

”சின்ன பாப்பாதானே அப்படிதான் நீ அவளுக்கு சொல்லிக்கொடு இது தப்புன்னு சொன்னா அவள் கேட்டுக்குவா”

”ஓ நீங்க பாட்டிகிட்ட சொல்லிக் கொடுப்பீங்களே அந்த மாதிரியா”

”ஆமாம் சின்ன பாப்பாவுக்கு புரியறமாதிரி பொறுமையா நிதானமா எடுத்து சொல்லனும் இப்படி கத்தக்கூடாது திட்டக்கூடாது கோபமே படக்கூடாது நான் என்னிக்காவது உன் பாட்டிக்கிட்ட கத்தி திட்டி நீ பார்த்திருக்கியா” என கூறவும் அவனும் ஒருவாறாக ஏதோ புரிந்தது போல் தலையாட்டிக் கொண்டே மீண்டும் திலோவை பார்த்தவன் சிரித்துவிட்டு

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 02 - சசிரேகாmahinagaraj 2018-04-13 10:44
achooo super.... :clap: :clap:
semaiya irukku kutti sidharth..dal....super.... ;-)
:thnkx: for ths update mam...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 02 - சசிரேகாsasi 2018-04-15 06:26
Quoting mahinagaraj:
achooo super.... :clap: :clap:
semaiya irukku kutti sidharth..dal....super.... ;-)
:thnkx: for ths update mam...

:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 02 - சசிரேகாmadhumathi9 2018-04-13 05:31
:Q: thilovirkku niraiya sothanaigal irukku. sidharthkku thilovai paarthavudan adaiyaalam theriyuma. :grin: egarly waiting to read more. (y) :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 02 - சசிரேகாsasi 2018-04-15 06:26
Quoting madhumathi9:
:Q: thilovirkku niraiya sothanaigal irukku. sidharthkku thilovai paarthavudan adaiyaalam theriyuma. :grin: egarly waiting to read more. (y) :thnkx: 4 this epi.

:Q: :cool: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 02 - சசிரேகாராஜேந்திரன் 2018-04-12 23:41
குட்டி சித்தார்த் டாலை பார்த்துக்கொள்ளும் விதம் அருமை :clap: :grin: தன் தாத்தாவிடம் சண்டை போடுவது அழகு wow இன்றில் இன்டர்வியுக்கு செல்லும் திலோவிற்கு வேலையும் சித்தார்த்தும் கிடைக்க வாழ்த்துக்கள் :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 02 - சசிரேகாsasi 2018-04-15 06:26
Quoting ராஜேந்திரன்:
குட்டி சித்தார்த் டாலை பார்த்துக்கொள்ளும் விதம் அருமை :clap: :grin: தன் தாத்தாவிடம் சண்டை போடுவது அழகு wow இன்றில் இன்டர்வியுக்கு செல்லும் திலோவிற்கு வேலையும் சித்தார்த்தும் கிடைக்க வாழ்த்துக்கள் :GL:

:clap: :hatsoff:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 02 - சசிரேகாvijayalakshmi 2018-04-12 23:38
அன்று கதை நல்லாயிருந்தது :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 02 - சசிரேகாsasi 2018-04-15 06:27
Quoting vijayalakshmi:
அன்று கதை நல்லாயிருந்தது :cool:

:clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 02 - சசிரேகாராணி 2018-04-12 23:34
:clap: :dance: அன்று கதை நல்லாயிருந்தது. இன்று சித்தார்த் பாவம் facepalm
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 02 - சசிரேகாsasi 2018-04-15 06:27
Quoting ராணி:
:clap: :dance: அன்று கதை நல்லாயிருந்தது. இன்று சித்தார்த் பாவம் facepalm

:grin: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 02 - சசிரேகாAdharvJo 2018-04-12 20:39
Lovely and cute update Sasi ma'am :clap: :clap: maligaikula vida ha :D nice to visualize your script but andha cute sid indha big siddkula irundhu disappear agitara :eek: is it because of his doll?? so indha richeeeee avanga doll kandupidipangala?? ninga sonnadha partha it is hard for sid to find her however his love and care was very innocent and feel good. Look forward to know what happens next. Thank you!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 02 - சசிரேகாsasi 2018-04-15 06:27
Quoting AdharvJo:
Lovely and cute update Sasi ma'am :clap: :clap: maligaikula vida ha :D nice to visualize your script but andha cute sid indha big siddkula irundhu disappear agitara :eek: is it because of his doll?? so indha richeeeee avanga doll kandupidipangala?? ninga sonnadha partha it is hard for sid to find her however his love and care was very innocent and feel good. Look forward to know what happens next. Thank you!

:thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top