(Reading time: 13 - 25 minutes)

“ம்ம் ரொம்ப பெரிய ஆளு தான்…ஆமா ரெண்டு நாளும் இங்கேயே இருந்து என்ன பண்றதாம் ரொம்ப போர்..”என அவள் சிரிப்பை அடக்கியவாறு கூற,

ம்ம் அது என் பொறுப்பு எப்படி போர் அடிக்காம இருக்கணும்னு நா சொல்றேன் என எழுந்தவனை கட்டிலில் தள்ளியவள் குளியலறைக்குள் சென்று ஒளிந்து கொண்டாள்..

பத்து நிமிடத்தில் குளித்து வெளியே வந்தவள் ரகுவைத் தேட வெளியே திறந்த பகுதியில் இரு இருக்கைகள் போடப்பட்டிருக்க அதில் அமர்ந்து நிலவை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்..

“யாரோ போரடிக்காம பாத்துக்குறேன்னு சொன்னதா நியாபகம்??”, என வேண்டுமென்றே அவனை அவள் சீண்ட,புன்னகைத்தவாறே அவளை கைநீட்டி அழைத்தான்..

கையைப் பிடித்தவள் எதிர் இருக்கையில் அமரப் போக மெதுவாய் அவளை இழுத்தவன் தன் மடியில் அமர வைத்தான்..

“ஹணி நா உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..”

என்ன நந்தா சொல்லுங்க என்றவாறு காற்றில் கலைந்த அவன் முன் தலை முடியை கைகளால் அளந்தவாறு அவள் அவனைப் பார்த்தாள்..

“ஹணி…ஊருக்குப் போய்ட்டு மாமாட்ட பேசலாம்னு இருக்கேன்..”

நந்தா!!! அப்படி ஒரு மின்னல் அவளிடத்தில்..

ம்ம் நிஜமாதான் ஹணி..நீ என்கிட்ட காட்ற ஒவ்வொரு சொட்டு அன்பும் எனக்கு என் தவறை உணர்த்திட்டே தான் இருந்தது..பட் அதையும் தாண்டி நான் வாங்கின அடி என்னை அவர்கிட்ட நெருங்க விடாம பண்ணிடுச்சு…ஆனா என்னை எனக்காக நானாகவே இருக்கணுமேங்கிற உன் எண்ணம் ரொம்பவே உயர்ந்தது..நீ நினைச்சிருந்தா எப்படி வேணா பேசி என்னை மாத்திருக்கலாம் ஆனா ஒரு தடவை கூட நீ அதை செய்யல..செய்ய நினைச்சதுகூட இல்ல..

உன் இடத்துல நா இருந்தா இப்படி இருப்பேனானு கூட தெரில.நிஜமா உன்னோட இந்த தூய்மையான காதலுக்கு நா முழுசா தகுதியானவனா இருக்கனும் ஹணி…உனக்காக உனக்காக மட்டும் நா என் மனசுல இருந்த அந்த காயத்தை அடியோட தூக்கி போடுறேன் இந்த செகண்ட் ஐ அம் ப்ராமிஸ் யூ..நிச்சயமா ஹர்ஷா மாதிரி நானும் ஒரு பையனா இருக்க ட்ரை பண்றேன்..

நீ நம்ம வீட்டு மருமகளா இல்லாம மகளா இருக்கணும்னு தான எல்லாரும் நினைப்பாங்க..அப்போ நானும் அதே மாதிரி நல்ல பையனா நடக்கனும் தான…நேத்து அவரு பேசினப்பவே என் கோபம் பாதி குறைஞ்சு போச்சு தான்..ஆனா நீ ஒரு பேச்சுக்கு கூட அதைபத்தி கேக்காதது தான் நா இந்த முடிவுக்கு வந்த முக்கிய காரணம்…நா உன்னை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன் ஹணி..ரியலி சாரி..

நந்தா என்னப்பா இதெல்லாம்..நீங்க யோசிக்குற அளவு ஒண்ணும் இல்ல..எங்கப்பா பண்ணிணது தப்பு அதனால தான் என்னால உங்ககிட்ட எதுவும் பேச முடில..அவர்பக்கம் நியாயம் இருந்திருந்தா கண்டிப்பா அவருக்காக வாதாடிருப்பேனோ என்னவோ தெரில…

பட் இப்போ அவரு நிச்சயமா நிறையவே மாறிருக்காரு…உங்களையும் உங்களுக்கு என் மீதான காதலையும் நிறையவே புரிஞ்சுருக்காருனு எனக்குத் தெரியும்..அதே மாதிரி அவரு பண்ணிணதும் எந்த இன்டென்ஷனும் இல்லாம நடந்ததுதான்னு உங்களுக்கு புரிஞ்சா நீங்களே மாறிடுவீங்கனு நம்பினேன் இப்போ அதான் நடந்துருக்கு..ரொம்பவே சந்தோஷமா இருக்கு நந்தா..

ரியலி யூ ஆர் அமேசிங் ஹணி..ஒவ்வொரு நாளும் எனக்கு புதுசா தான் தெரியுற..லவ்வே பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு இப்போ இவ்ளோ அழகா லவ் பண்றியே ஹணி என தன்னோடு இன்னுமாய் சேர்த்தான்..

ஹா ஹா அப்படி இல்ல நந்தா..லவ்,மேரேஜ்னு யோசிக்குற வயசு வந்தப்பறம் எப்பவுமே எனக்கு வரப் போறவர பத்தி பெருசா எதிர்பார்ப்பு இருந்ததில்ல..மேபி அப்பா தான் அதுக்கு ரீசனா இருக்கலாம்..நா எப்படிபட்ட மனைவியா இருக்கணும்னு தான் நிறைய நினைச்சுருக்கேன்..

ஏன்னா ஒரு வேளை நா ரொம்பவே கற்பனைய வளர்த்து அப்பறம் வர்றவர் எங்கப்பா மாதிரியே இருந்துட்டா லைப் புல்லா ஒரு ஏமாற்றம் இருந்துட்டே இருக்கும்..அதனால தான் நா என்னால குடுக்க முடியுற காதலை கொடுத்துட்டே இருக்கேன்..உங்க கிட்ட இருந்து கிடைக்க வேண்டிய காதல் பல மடங்கா கிடைச்சுட்டே இருக்கு….கரெக்ட் தான??

ஹணி ஐ அம் மேட் ஆன் யூ ஆல்வேஸ்..இப்போ இன்னும் முத்திருச்சு..சாரி மை டியர் என்று பேசும்போதே அவள் இடைப்பிடித்து தூக்கி தன் கைகளில் ஏந்தியவன் அறைக்குள் செல்ல,அத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்த நாக்கு மேவாயோடு ஒட்டிக் கொண்டதைப் போல் ஹரிணி ஒன்றுமே பேசாமல் முகம் சிவக்க தன்னவனை கழுத்தோடு பற்றியபடி தலை குனிந்து கொண்டாள்..

அதன் பிறகான அன்றைய பொழுதில் அவள் மீதான தன் காதல் பைத்தியத்தை அவளிடம் கொட்டித் தீர்த்தான்..அதில் பெண்ணவளும் திளைத்து நெகிழ்ந்து தான் போனாள்..பின் இரவுகளில் கண்ணயர அப்போதும் அவன் அணைப்பின் இறுக்கம் மட்டும் தளரவேயில்லை…இதழ் ஒட்டிய புன்னகையோடே தன்னவன் மார்பில் தஞ்சம் அடைந்தவள் கண் விழித்த நேரம் அவளவன் அருகில் இல்லை..சற்றே கண்ணை கசக்கி சுற்றும் முற்றும் பார்த்தவள் திரைசீலையை தாண்டிய வெயிலை கண்டு பதறிப் போனாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.