(Reading time: 13 - 25 minutes)

மணி என்னாச்சு இப்படியா தூங்கிருக்கேன்..கடவுளே எல்லாம் இவரால தான் என்றவாறு எழுந்து பின் சாய்ந்து அமர்ந்து தன்னை சரிபடுத்தியவள் தலையை கோதிவிட கதவு திறக்கும் ஓசையில் சற்றே பதட்டமாய் வெளியே பார்க்க,

“குட்மார்னிங் ஹணி டியர்..”

“நந்தா!!இப்படியா விட்டு போவீங்க..எழுப்பிருக்கலாம்ல..”

“ஹணி உனக்காக தான் டிபன் எடுத்துட்டு வர போனேன் லாக் பண்ணிட்டு தான்டா போனேன்..கீ என் கிட்ட தான் இருந்தது..”

“ம்ம்” என்றவள் தன் நீள கூந்தலை கொண்டை போட்டு கீழே காலைப் போட்டு அமர்ந்தாள்..

“என்ன ஹணி டியர் செம தூக்கம் போலயே??”,என்றவன் நக்கலாய் சிரிக்க,

“ம்ம் கொழுப்பா ஒழுங்கா இன்னைக்கு எங்கேயாவது ஔட்டிங் போலாம்..”

“ஆல்ரெடி ஔட்டிங் எப்பவோ ஸ்டார்ட் ஆயாச்சு ஹணி..நீ தான் லேட்..”

“என்ன சொல்றீங்கப்பா??”

“ம்ம் போட் ஆல்ரெடி நாம இருந்த இடத்தை விட்டு வந்து ரொம்ப நேரம் ஆச்சுனு சொல்றேன்..”

“என்னது????”, என வேகமாய் எழுந்து சென்று வெளியே எட்டிப்பார்க்க கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் நீர்பரப்பு மட்டுமே தெரிந்தது..

“சரியான ப்ராட் நந்தா நீங்க??”

“ஹா ஹா நா என்ன ஹணி பண்ணேண்.ஒரே இடத்துல நிக்குறதுக்கு எதுக்கு போட் ரிசார்ட்டே போதுமே..”என்றவனின் பார்வையின் அர்த்தம் மாற அதை உணர்ந்தவளோ,

“செம அடி வாங்குவீங்க எனக்கு பசிக்குது நா போய் குளிச்சுட்டு வரேன் சாப்டலாம்..

அதன் பிறகான இரண்டு நாட்களுமே வாழ்வின் வசந்த காலத்தை அவர்களுக்கு கொடுத்தது..ஹரிணியோ மொத்தமாய் தன் நந்தாவின் அன்பில் உருகிப் போயிருந்தாள்..தன்னை ஆட் கொள்ளும் நேரத்தில் அவனின் முரட்டுத்தனமும்,மற்ற நேரங்களில் அவனின் அரவணைப்பும் அன்பும் பல நேரங்களில் குழந்தையாய் தன்னை சுற்றித் திரிபவனை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை..

ரகுவின் நிலைமையோ அதை விடவும் மோசம் தன்னவளை விட்டு அங்கு இங்கு நகரகூட முடியவில்லை அவனால்..அவளின் பொறுமையும் அன்பும் அவனை முழுவதுமாய் அவளிடத்தில் சாய்த்திருந்தது..அதை விட அவளின் மென்மையை,அவனுக்காக அவள் கன்னம் செம்மையுருவதை பார்க்க வேறு எதுவும் வேண்டாம் வாழ்வில் என தோன்றியது..என்னவள் என்ற கர்வம் ஒன்றே போதுமானதாய் இருந்தது அவனுக்கு..

தேனிலவு இனிமையாய் முடிய அவர்களின் காதலும் அடுத்த நிலையை அடைந்திருந்தது..கணவன் மனைவியாய் இருவரின் புரிதலும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் அவர்களை ஈருடல் ஓருயிராய் மாற்றியிருந்தது..சென்னையை அடைந்த அடுத்த மூன்று மணி நேரத்தில் இருவருமாய் சென்றது ஹரிணியின் வீட்டிற்குதான்..

காலையிலேயே மகளையும் மருமகனையும் கண்டவர்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை..

“ஹரிணிம்மா ஒரு வார்த்தை வரோம்னு சொல்லிருக்க கூடாதா??தடபுடலா சமையல் ஏற்பாடு பண்ணிருப்போம்ல..” மதுரா குறைப்பட்டுக் கொண்டார்..

“ம்மா அதெல்லாம் வேண்டாம்னு தான சொல்லாம வந்துருக்கோம் சரி நீ வா என அவரை சமையலறைக்கு அழைத்துச் செல்ல,ஹர்ஷா இன்னும் கீழே வராமல் இருக்க கிருஷ்ணணோடு ஹாலில் அமர்ந்தவன் சற்றும் தாமதிக்காது,

“எப்படியிருக்கீங்க மாமா??”

“ஆங்ங் நல்லா..நா நல்லாயிருக்கேன் மாப்ள..உங்களுக்கு ப்ரயாணம் எல்லாம் எப்படி இருந்தது??”என்றவருக்கு மனமோ ஆனந்த களிப்பில் இருந்தது.

“ம்ம் ரொம்ப நல்லாயிருந்தது..அப்பறம்..வந்து..ஐ அம் சாரி அன்னைக்கு நீங்க பேசினப்போ ஒழுங்கா பதில் சொல்லாம போனதுக்கு..”

“ஐயோ மாப்ள அதெல்லாம் நா ஒண்ணுமே நினைக்கல எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு..அப்படி பாத்தா நா தான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும்..கோபத்தால உங்கள கைநீட்டி..”

“இல்ல அதெல்லாம் நா மறந்துட்டேன்..எதுக்கு திரும்ப பழசையெல்லாம் பேசிகிட்டு…இனி நானும் ஹர்ஷா மாதிரி உங்களுக்கு ஒரு பையன்தான்..இதெல்லாத்துக்கும் காரணம் நிச்சயமா ஹணி தான்..உங்க கோபத்துலயும் ஒரு நல்லது இருக்கு அதனால தான எனக்கு இப்படி ஒரு வைஃப் கிடைச்சுருக்கா….தேங்க்ஸ் பார் தட்..”,என அவன் சிரிக்க ஹர்ஷா நடந்ததை கேட்டவாறே அவர்கள் அருகில் அமர்ந்தான்.

அதன்பின் அனைவரோடும் இனிமையாய் பொழுது நகர மதிய உணவிற்கு பின் இருவருமாய் கிளம்பிச் சென்றனர்..அங்கு லஷ்மியோடும் கண்ணணோடும் சிறிது நேரம் பேசிவிட்டு தங்களறைக்கு வந்தவனை இழுத்தணைத்து அவனது கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்திருந்தாள்..

“ஹே ஹணி டியர்..”

“லவ் யூ நந்தா..”

“அப்படியா!!இப்போதானா???”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.