(Reading time: 7 - 13 minutes)

வளைகுடா நாடுகளில் பரவலாக நடக்கும் இத்தொழிலுக்கு பெரும்பாலும் ஆண்கள் தான் விண்ணப்பிப்பார்கள். ஆனால் தற்போது பெண்களும் அவர்களுக்கு நிகராக செல்கிறார்கள். இதற்கு வறுமையைக் காரணம் சொல்வது, அல்லது சாகசம் செய்யவேண்டும் என்று நினைப்பதா என்றெல்லாம் நிறைய கேள்விகளோடுதான் இந்த ஒப்பந்தத்தில் அவள் கையெழுத்து இட்டதே. ஆனால் அம்மாவிற்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் இதில் விருப்பமே இல்லை, உயிரைப் பயணம் வைத்து இப்படி ஒரு தொழில் தேவையா ? என்று அழவே தொடங்கிவிட்டார்கள். 

இது ஒன்றும் நிரந்தர தொழில் இல்லை, காண்டிராக்ட் பேசிஸ்தான் இரண்டோ அல்லது மூன்று வருடங்களோ கையில் கணிசமான ஒரு தொகையிருக்கும். நம்முடைய பிரச்சனைகளை தீர்த்து விடலாம். இப்போதெல்லாம் ஒரு டிகிரிக்கு எங்கே மதிப்பிருக்கிறது. அதிலும் கம்ப்யூட்டர் வந்துவிட்ட பிறகு தினமும் விதவிதமான அப்டேஷன்கள் எல்லாம் போய் கொண்டு இருக்க, வேறு வழி எங்கே இருக்கிறது. தொழில் முறை படிப்புகள் படிக்க தனக்கு முதலில் வசதி வேண்டுமே இப்படி எண்ணற்ற சிந்தனையோடு தீர்க்கமான முடிவோடும்தான் உத்ரா இன்னும் ஒருவாரத்தில் அந்த வேலைக்கு செல்லப்போகிறாள். 

முதலில் பயிற்சி வகுப்புகள், அவளின் ஆரோக்கியம் பற்றிய சோதனைகள், அதன்பிறகுதான் நேரடியாக கடல் பயணம் எனவே அதற்கென தன்னைத் தயார் செய்து கொள்ள ஆரம்பித்தாள். தான் வரும் வரையில் வீட்டைப் பார்த்துக்கொள்வதாய் நிதிலனும் பொறுப்பேற்றாகிவிட்டது. அவர்களின் குடும்பமும் நல்ல மாதிரி என்பதால் அதில் தடையேதும் வரப்போவதில்லை, அன்னையின் பொறுப்பை அக்கா ஏற்றுக்கொண்டு விட்டிருக்கிறாள். இனி வேலையைப் பற்றியும் அதற்கு சேரும் நேரத்தைப் பற்றி மட்டும்தான் கருத்தில் கொள்ளவேண்டும் என்று நினைப்புடன் தான் உடல் பரிசோதனைக்காக அந்த மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்திருக்கிறாள். 

தொடரும்...

Episode # 02

Episode # 04

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.