(Reading time: 19 - 37 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 03 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

தீரன் நேற்று அமைச்சர் ரங்கராஜனை ஏர்போர்டில் சந்தித்து வெளிவருகையில் ரங்கராஜனின் அரசியல் விளம்பர மோகத்தில் அவர் வரவழைத்த பிரஸ் ரிப்போர்டர்களை வாசலில் சந்தித்த தீரன் தேவையற்ற பிரஸ் தொல்லையால் எரிச்சலுற்றான் இருந்தபோதிலும் அமைச்சரை பகைத்துகொள்வது, தான் ஏற்று வந்த பணிக்கு ஏற்புடையதில்லை என்பதனை உணர்ந்தவன் வரவளைத்துக்கொண்ட புன்னகையுடன்

மிஸ்டர் ரங்கராஜன், ஸ்டில் ஐ அம் நாட் ரெடி டூ ஆன்சர் பிரஸ். பஸ்ட் ஆப் ஆல், லெட் மீ டாக் அபௌட் தெ ப்ராஜெக்ட் டீடைல்ஸ். ஐ ஆம் திங்கிங் ஆப் மீட்டிங் தெ ரிபோர்டர்ஸ், ஆப்டர் த டெசிசன் அபௌட் இட். என்று கூறியதும் ரங்கராஜனின் பாதுகாவலர்கள் இருவரும் நாசூக்காக தீரனின் இருபுறமும் நின்றபடி ரங்கராஜனை விலகினர்.

பிரஸ் முன் கெத்தை விட்டுக்கொடுக்காமல் மெயின்டெயின் செய்வதற்காக ரங்கராஜன் தீரனிடம் ஓகே மிஸ்டர் தீரமிகுந்தன்,வென் வி டால்க். என்று கூறிய மறுநிமிடம். தீரனும் புன்னகையோடு “ஓகே” பை மிஸ்டர் ரங்கராஜன், ஐ வில் கால் யூ அட் மொபைல் டுடே நைட் .வீ வில் மீட் சூன் .என்றவன் தனது பாதுகாவலர்களுடன் காருக்கு விரைந்தான்.

ரங்கராஜன் வரவழைத்த பத்திரிகை நிருபர்களில் த டைம்ஸ் ஆப் இன்டியா நிருபர் ஒருவர் தனி விமானத்தில் அமெரிக்காவில் இருந்து வரும் அந்த தொழில்துறை பிரமுகர் யார் என்பதை ரங்கராஜனின் தரப்பில் தெளிவாக குறிப்பிடாததால் அதை தெரிந்து கொள்ளவென்று வந்தவன் தீரமிகுந்தனை பார்த்ததும் ஆச்சரியமடைந்தான். தான் பார்ப்பது உலகளவில் பிரசித்திப்பெற்ற தொழிலதிபரான பிராங்கின் பேக்போன் மேனான தீரமிகுந்தனை அவன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை .

அமெரிக்க பிஸ்னஸ் மேகசீனில் கூட தீரமிகுந்தனின் பெயர் மட்டுமே பிரசித்தி இதுவரை தீரன் தனது புகைப்படத்தையோ பேட்டியையோ வெளியிட்டதில்லை அப்படிப்பட்ட தீரமிகுந்தனின் பேட்டி அவனது புகைப்படத்துடன் தான் வெளியிடும் வாய்ப்பு அருகில் இருப்பதை பார்த்தவன் பரபரப்பானான்.

தீரன் தன்னுடைய முகத்தை வெளிக்காட்ட விரும்பியதில்லை. பிராங்கும் தீரனை முன்னிறுத்த முயன்றதில்லை காரணம் தீரனின் தோற்றமும் அதில் உள்ள ஆழுமையும் பிராங்கின் பொறாமையை மனதினுள் சிறுவயதிலேயே தூண்டிவிட்டிருந்தது .

எனவே படிக்கும் காலத்தில், பிராங்க் தீரனுடன் கம்பெனி ஸ்டடி செய்தால் தன்னால் அவனின் கைடன்ஸ் மூலம் நல்ல மதிப்பெண்களை பெறமுடியும் என்றகாரணத்தாலும் ,அவனுடன் செலவழிக்கும் நேரம் திரில் மற்றும் சுவாரஸ்யத்துடன் அமையும் என்ற காரணத்தாலும் அவன் தன்னருகில் இருந்தால் தனது பணக்கார சொசைட்டி நண்பர்களின் முன் அவனுடன் சேர்ந்து செய்யும் அளப்பரைகளால் தன்னுடைய பாரம்பரிய அமெரிக்க பணக்காரத்தனத்தாலும் தான் தனியாக பார்க்கப்படுவதால் அவன் தீரனின் நடப்பை விட்டு தனித்திருக்க என்றும் நினைத்ததில்லை.

அவன் அருகில் இருந்தால் மட்டுமே அவனின் மூலம் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை புரிந்ததால் அவனுடனான நட்புக்காக தான் அனுபவிக்கும் சுகபோக வாழ்க்கையை தீரனுக்கும் கொடுக்க நிறைய பணம் செலவழித்து அவனின் நடப்பை தக்கவைத்துக் கொண்டிருந்தான். தீரன் மட்டும் சாதாரணமான திறமைகொண்ட ஒருவனாக இருந்திருந்தால் பிராங் அவனின் நடப்பை பெரிதாக நினைத்திருப்பானா! என்பது கேள்விக்குறியே.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தீரனை அங்கு பார்த்த அந்த நிருபர் அது தீரமிகுந்தன் தான் என்று கண்பார்ம் செய்ய தனது பேக்கினுள் இருந்த சில இம்பார்டன்ட் போட்டோஸ் கிளிப்பில் இருந்த தீரனின் போட்டவை வேகமாக எடுத்து அத்துடன் அவனை ஒப்பிட்டுப்பார்த்தவன் தீரமிகுந்தன் என்று உறுதிப்படித்தியதும் பரபரப்பானான்.

உடனே அவனை நோக்கி மற்ற நிருபர்களை தள்ளிக்கொண்டு முன்னேறியவன். ப்ளீஸ் டூ நாட் கோ மிஸ்டர் தீரமிகுந்தன் சார்.ப்ளீஸ் கிவ் யுவர் விசிட் டூ இந்தியா ஒன்லி ஏ சிம்பிள் இண்டர்வியூ வித் மிஸ்டர் தீரமிகுந்தன், என்று கூவியபடி அவனை நெருங்க முன்னேறினான்.

தீரனுக்கு விடைகொடுத்த மினிஸ்டர் ரங்கராஜன் கேள்விக்காக தன்னைநோக்கி வரும் நிருபர்களிடம் பேச நெருங்கிகொண்டிருகும்போது ஒருநிருபர் தீரமிகுந்தனை அடையாளம் கண்டு தன்னிடம் இண்டர்வியூ எடுக்கமறந்து அவனை நோக்கி ஓடுவதை கண்டு கொண்டு நிற்கையில் நிருபர்களிடையே சலசலப்பு உண்டானது. உலக டாப் டென் பத்திரிகை நிறுவனத்தில் ஒரு அங்கமான த டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் மினிஸ்டருடன் வந்த தொழில் அதிபரின் பெயரை கூறி கூப்பிட்டபடி அவரிடம் பேட்டி எடுக்க விரைவதை கண்டு மற்ற நிருபர்கள், யார் அந்த தீரமிகுந்தன் என்று ஒருவருக்கொருவர் பேசி அவர்களும் தீரமிகுந்தனை அடையாளம் கண்டதும் மினிஸ்டரை மறந்து தீரனிடம் விரைந்தனர். செக்யூரிட்டி கார்ட்ஸ் உடன் செல்கின்ற தீரன் அங்கு தொடங்கிய சிறு சலசலப்பிலேயே நிலைமையை புரிந்துகொண்டவன் தன் முகத்தை மறைக்கும் விதமாக கண்ணாடி மற்றும் தொப்பியை அணிந்தபடி வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டான்.

அப்பொழுது கருப்புநிற சீருடையுடன் திமுதிமுவென்று வந்த பத்து பிரைவேட் பாதுகாவலர்கள், நிருபர்கள் தீரனை அணுகமுடியாதவாறு தடுத்து நிறுத்தினர்.

இரவு தனது லக்ஸ்சூரியஸ் பிளாட்டின் இரவு உணவிற்குப்பின் அமர்ந்திருந்தவன் யோசனையில் ஆழ்ந்திருந்தான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.