(Reading time: 7 - 14 minutes)

எனக்கு கிளியோப்பாட்ரா ஆண்டனி நினைவுக்கு வந்தது, அலெக்ஸாண்டரியா மேல் போர் தொடுக்க வரும் ஆக்டோவிக்ஸிடம் சிக்கிக்கொள்ள கூடாது அதேநேரம் தன்னுடைய இறப்பு அதிக வலியுடையதாக இருக்க கூடாது என்று நினைத்த கிளியோப்பாட்ரா தன் அடிமைகளுக்கு தினமும் ஒரு டெஸ்ட் வைத்தாளாம். ஒவ்வொரு விதமான விஷத்தை பருகக் கொடுத்து எதில் வலி இல்லாமல் உடனே மரணம் நிகழ்க்கிறது என்பதை பரிசோதித்து இருக்கிறாள். முதலில் இதை விளாயாட்டு என்று எடுத்துக் கொண்ட ஆண்டனி காதலியின் செய்கையில் சந்தேகம் கொண்டு தன்னையும் அவள் கொன்றுவிடுவாளோ என்று தோன்ற முதல் நாள் அவள் அளித்த ஒயினை பருக மறுத்து அவளேயே குடித்துவிட்டு தரச்சொல்லியிருக்கிறார்.

ஆண்டனியின் செய்கைக்கான காரணத்தை உடனே கண்டுகொண்ட கிளியோப்பாட்ரா மறுநாள் இரவு இரண்டு மலர் மாலைகளை தனக்கும் ஆண்டனிக்கும் அணிவித்து விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள். ஆண்டனி அணிந்த மாலையில் விஷப்புகை தடவப்பட்டு இருந்தது. ஒயினை அருந்தும் போது தன் மாலையிலிருந்து இரண்டு இதழ்களை எடுத்து ஒயினிற்குள் போட்டு இப்படி குடித்தால் நல்ல நறுமணம் இருக்கிறது என்று சொல்ல, ஆண்டனியும் அதேபோல எடுத்து கோப்பையில் இதழ்களைச் சேர்க்கவும், அது விஷம் தடவப்பட்டது என்று தடுத்தாளாம் கிளியோபாட்ரா ஆனால் நீயாக இருந்தால் குடிச்சிட்டு சாவட்டும் என்று விட்டு இருப்பாய்தானே ?!

பரத் குறும்புத்தனமாக பார்வையோடு கேட்கவும், அதே குறும்போடு,

உங்களைக் கொல்ல எதுக்கு விஷம்.....?!

உன் கண்களே போதும் உத்ரா என்னைக் கொல்வதற்கு...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பரத் விழிகளில் வழிந்திட்ட அந்த உணர்வை உத்ராவின் விழிகள் தீண்டுமுன், ஆர்ப்பரிப்பாய் உள்ளே நுழைந்தாள் பத்மினி...! தோழியைக் கட்டிக்கொண்டாள்

ரொம்ப திரில்லிங்கா இருந்தது உத்ரா இந்த அனுபவம்

நகர்ந்துவிட்ட சில நிமிடங்கள் தோழியர் இருவருக்கும் மெல்ல இணக்கத்தை கொண்டு வந்ததா அல்லது உத்ராவின் சிறு மாறுபட்ட மனோபாவத்தாலோ என்னவோ உத்ராவும் பத்மினியைத் தழுவிக்கொண்டாள். அடுத்தி சில மணிநேரங்கள் அவர்களின் பணியினைப் பற்றிய பேச்சிலேயேக் கழிந்தது. 

அடுத்தநாள் நாம ராஸ் தீவிற்குச் செல்ல வேண்டும் அதனால, இப்போ சீக்கிரம் போய்த் தூங்கலாம்.

எல்லாரும் தத்தம் அறைகளுக்கு செல்ல உத்ரா பரத்திடம் இரவு வணக்கத்தை சொல்லிவிட்டு சென்றதை பத்மினி ஆச்சரியத்தோடும் பிரியன் ஆத்திரத்தோடும் பார்த்தான்.

தொடரும்...

Episode # 10

Episode # 12

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.