(Reading time: 13 - 25 minutes)

அவங்களை இந்த மேடையில் கௌரவப்படுத்துறது எங்களுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு.நா தான் எல்லாருக்கும் பரிசை கொடுக்கலாம்னு நினைச்சேன்.பட் இன்னைக்கு ரொம்பவே முக்கியமான சீஃவ் கெஸ்ட் ஒருத்தங்க வந்துருகாங்க சோ அவங்களே எல்லாருக்குமான பரிசுகளை வழங்கனும்னு ஆசைப் படுறேன்.டாக்டர் திவ்யாந்த் ப்ளீஸ் கம் ஆன் டூ த ஸ்டேஜ்..”

அப்பட்டமான அதிர்ச்சியோடு மனதில் ஆனந்தம் பொங்க அவனையே அவள் பார்த்திருக்க முகத்தில் மலர்ந்த புன்னகையோடு துள்ளலாய் மேடை ஏறியவனை ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளருகில் வந்தவன் சட்டென கண்ணடித்துச் சிரிக்க முகம் தாமரையாய் மலர்ந்து போனது வெண்பாவிற்கு.

ஆசிரியையிடமிருந்து பரிசை வாங்கியவன் அவளுக்கு கொடுத்து பின் கை குலுக்குவதற்காய் சிநேகப் புன்னகையோடு கைநீட்ட தயக்கத்தை மறைத்தவளாய் கைகுலுக்கி புன்னகைத்தாள்.

அவனின் அழகிய புன்னகை மாறாமல் கீழேயிறங்கி தன் இருக்கைக்குச் செல்ல ஒப்பனை அறைக்குச் சென்றவளின் அருகில் இரண்டு இளம் ஆசிரியைகளின் பேச்சு அவள் காதில் தெளிவாய் விழுந்து புன்னகையை பெரிதாக்கியது.

“ஹே அந்த டாக்டர் செம ஸ்மார்ட்ல.அதுவும் அந்த ஸ்மைல் ப்பாபா சான்சேயில்ல..”

“ம்ம் நானும் கவனிச்சேன்.அவங்க ஃவைப் கொடுத்து வச்சவங்க..ஏன் டீ நமக்கு மட்டும் இப்படி யாரும் கண்ணுல பட மாட்றாங்க..”

“ம்ம் நம்ம ராசி அப்படி சரி சரி வா அடுத்து நம்ம பெர்பார்மெண்ஸ் தான்.”

அவர்கள் கடந்து சென்றவுடன் தன் ஒப்பனை கலைந்து தன் பயிற்சி நடனத்தை காண்பதற்காக உடைமாற்றி முகத்தில் லேசாய் பவுடர் இட்டு உதட்டிற்கு லேசாய் லிப்  க்ளாஸ் தடவி வெளியே வந்தவளை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் திவா.

தடுமாற்றத்தை மறைத்தவளாய் வந்திருந்த பெற்றோருக்கு வணக்கம் கூறியவாறு மேடையில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தாள்.

அத்தனை நிகழ்ச்சிகளும் முடிந்து பெற்றவர்களிடம் விடைபெற்று தன் உடைமைகளை சரிபார்த்து எடுத்துக் கொண்டவள் வெளியே வரும் போது அரங்கமே காலியாகி இருந்தது ஒன்றிண்டு பேர் தவிர அனைவரும் கிளம்பியிருக்க கேப் புக் செய்தவாறே வாசலையடைந்தவளை திவ்யாந்த்தின் கார் மறித்தது.

அப்பட்டமான அதிர்ச்சியோடு அவனை ஏறிட டிரைவர் இருக்கையில் அமர்ந்தவாறே அவளுக்கான கதவை திறந்துவிட்டான்.

நிச்சயமாய் இதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவள் முகமே அவனுக்கு உணர்த்தியது.சட்டென சமாளித்தவளாய் உள்ளே அமர்ந்தவள் வெளியே இருளை வெறிக்க உதட்டோரச் சிரிப்போடு காரை கிளப்பினான் திவ்யாந்த்த்.

காரில் அமைதியை தவிர எதுவுமிருக்கவில்லை அவனாய் பேசுவுமில்லை.அவள் பேச வேண்டும் என நினைக்ககூட இல்லை.இருப்பினும் ஒருவரின் அருகாமையை மற்றவர் அதிகமாய் நாடினர் என்று தான் கூற வேண்டும்.எங்கெங்கோ அலைந்து திரிந்து நம் இடத்தை அடைந்துவிட்ட ஒரு நிம்மதி.அது மட்டுமே அந்த நேரத்திற்கு போதுமானதாய் இருந்தது இருவருக்கும்.

அவள் வீட்டு வாசலில் வந்து கார் நிற்க சத்தம் கேட்டு சிந்தாமணி அம்மா வெளியே வந்தார்.இருவரையும் ஒரு சேர பார்த்தவருக்கு மனதில் அப்படியாய் ஒரு சந்தோஷம்.ஒன்றும் பேசாமல் வாசலிலேயே நின்று அவர்களை கண்ணுக்குள் நிறைத்துக் கொண்டார்.

காரைவிட்டு இறங்கியவள் ஒன்றும் பேசாமல் கண்ணாடி வழியே அவனைப் பார்க்க ஒரு நிமிடம் முழுதாய் அவளை நோக்கியவன்,”நிம்மதியான உறக்கமும் அழகான கனவுகளும் உனதாகட்டும்..டேக் கேர் ககண்ணம்மா...”,என்றவன் காரைக் கிளப்பிச் சென்றுவிட அசையவும் தோன்றாமல் அவன் சென்ற திசையை பார்த்தவாறே நின்றிருந்தாள் வெண்பா.

“பாப்பா பேசாம தம்பி வீட்டுக்கு போய்டலாமா?”,என்ற சிந்தாமணியின் கேள்வியில் உயிர் பெற்றவளாய் புன்னகையோடு உள்ளே சென்றுவிட்டாள்.

அறைக்கதவை தாழிட்டவளுக்கு நினைவு தன் கடந்த காலத்தை சுற்றி வந்தது.

திவாவிடம் கூறியவாறே அந்த வீட்டிற்கு குடி வந்து ஹோமிற்கு நடன ஆசிரியையாய் பொறுப்பேற்று பதினைந்து தினங்கள் ஆகிவிட்டிருந்தது.அன்றைய மழை தினத்திற்கு பிறகு திவ்யாந்தையும் சந்திக்கவில்லை.வீடு மாறிவிட்டதாய் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பியிருந்தாள்.ஆனால் அதற்கும் பதில்லாலமல் போனது.

அதன்பின் அவளும் அவனை தொடர்புகொள்ள முயற்சி செய்யவில்லை.இப்படியான நிலையில் அன்று சென்னையின் திடீர் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.ஹோமிற்கு வகுப்பெடுக்க வந்திருந்தவள் அது முடிந்ததும் மழை நிற்பதற்காக அங்கேயே காத்திருக்க திவ்யாந்தின் கார் உள்ளே நுழைந்தது.

காரைவிட்டு இறங்கியவன் மழைக்காக வேகமாய் ஓடிவந்து அந்த வராண்டாவில் நின்று தலையை சரிசெய்தான்.

தற்செயலாய் வெளியே வந்தவள் அவனை அங்கு எதிர்பாராமல் விழிவிரித்தாள்.

“என்ன டாக்டர் சார் காலேஜ் கோயிங் மாறி ஆய்டீங்க..பட் நைஸ்”,என்றவாறு கைகட்டி நிற்க,ரௌண்ட் நெக் டீஷர்டும் ஜீன்ஸுமாய் வந்திருந்தவன் அழகாய் சிரித்தவாறு அவளருகில் வந்தான்.

“ஹே வெண்பா எப்படியிருக்கீங்க..க்ளாஸ் எல்லாம் எப்படிபோகுது..வீடு வசதியா இருக்கா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.