(Reading time: 13 - 25 minutes)

“அட அட என்ன அக்கறை.. எல்லாம் நேர்ல பார்த்தா தான் மெசேஜ் பண்ணா ஒரு ரிப்ளை இல்ல”,என்றவள் உதடு சுழிக்க ஒரு நொடி அந்த இதழசைவை ரசித்தவன் சட்டென பார்வையை மாற்றியபடி அங்கிருந்த பென்ஞ்சில் அமர்ந்தான்.

“ரியலி சாரி வெண்பா..அக்சுவலா ஒரு மெடிகல் கான்ப்ரன்ஸ்காக ப்ரான்ஸ் போய்ட்டேன்.மூணுநாள் ட்ரிப்னால இந்தியா நம்பர் எடுத்துக்கல பாத்தா லாஸ்ட் மினிட்ல 10 டேஸ் எக்ஸ்டெண்ட் ஆய்டுச்சு..மார்னிங் தான் வந்தேன் இன்னும் மொபைல் ஆன் கூட பண்ணல.மோஸ்ட்லி ஹாஸ்பிட்டல் தவிர எனக்கு யாரும் கால் பண்ண மாட்டாங்க.ஆல்சோ அவுட் ஆப் கன்ட்ரினா கேக்கவே வேணாம்.

என் மொபைல் வெறும் டிவைஸா மட்டும்தான் இருக்கும் என் கையில..”,என்று மென்னகைக்க வாய் பிளந்தவளாய் வந்து அவனருகில் சற்று இடைவெளிவிட்டு அமர்ந்தாள்.

“வாவ் டாக்டரே நீங்க இவ்ளோ பெரிய ஆள்னு தெரியாம போச்சே..செம பிஸி பீனு சொல்லுங்க.அதுக்கு நடுவுல இங்க ஹோமையும் கவனிச்சுக்குறது நிச்சயம் ரொம்ப பெரிய விஷயம்..ரியலி க்ரேட்..”

“கமான்..நாம வாழ்க்கைல எத்தனை உயரத்துக்கு போனாலும் எத்தனை பிஸி ஆனாலும் தாய் வீட்டை மறக்க முடியுமா..என் வீடு இதுதான் அப்போ இதை நா பாத்துக்காம எப்படி?”

“ம்ம் கரெக்ட் தான் திவா..”,என்றவள் அமைதியாய் சிரித்தாள்.

“எப்பவும் இவ்ளோ நேரமா க்ளாஸ் எடுக்குறீங்க?”

“இல்ல திவா க்ளாஸ் முடிஞ்சு ரொம்ப நேரம் ஆகுது.இந்த மழை நிக்குற மாதிரியே தெரில அதான் வெயிடிங்..மழையில் நனைய எனக்கு பிடிக்கும் ஆனா என் ஹெல்த்க்கு பிடிக்கவே பிடிக்காது உடனே பீவர் தான்.அதனால தான் ரிஸ்க் எடுக்காம வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.”

“ஹே என்ன ஒரு கோ இன்சிடன்ஸ் இல்ல..லாஸ்ட் டைமும் மழைல தான் நாம மீட் பண்ணோம்.இப்வும் மழை சூப்பர் இல்ல.”

“ம்ம்”,என்றவனின் பார்வை அவனறியாமல் அவளையும் அவள் பேச்சையும் ரசிக்க ஆரம்பித்திருந்தது.

“எவ்ளோ லென்த்தா பேசினேன் ம்ம் னு ஒத்தை வார்த்தைல முடிச்சுடீங்களே..உங்ககிட்ட பேசி எனக்கு வயிறு காலி ஆனதுதான் மிச்சம்.”,என சலித்துக் கொண்டாள்.

“ஹா ஹா உங்க அளவுக்கு இவ்ளோ ஸ்பீடா எல்லாம் பேச வாய்ப்பே கிடையாது.வேணா உங்க பசியை போக்க ஒரு நல்ல ரெஸ்ட்டாரண்ட் போய் சாப்டலாம் ஓ..கே வா?எனக்கும் நம்ம ஊர் சாப்பாடு சாப்டாம நாக்கு செத்துப் போச்சு..என்ன சொல்றீங்க”

“ம்ம் இதுகூட நல்ல ஐடியா தான் எனக்கும் என் சமையலை சாப்ட்டு சாப்ட்டு செத்து போன என் நாக்கை போன வாரமே எங்க வீட்டு பின்னாடி அடக்கம் பண்ணிட்டேன்.பில் நீங்க பே பண்றீங்கனா எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை..”,

என்றவளுக்கு வழக்கமான புன்னகையை உதிர்த்தவனை பார்த்து தலையில் அடித்தவாறு அவனை பின் தொடர்ந்தாள்.

இருவருமாய் அடையாரின் அந்த பிரபலமான உணவகத்திற்குச் சென்று உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர்.

“நைஸ் அம்பியன்ஸ்.அக்சுவலா நா பெருசா ரெஸ்டாரண்ட்ஸ்னு வந்ததில்ல சென்னைல..எப்போவாவது நார்மலா நல்ல ஹோட்டல்க்கு போய் சாப்டுவேன்.தனியா சாப்டுறது ரொம்ப கொடுமை அண்ட் போர்.சோ இது என் பர்ஸ்ட் எக்ஸ்ப்ரியண்ஸ்..”

“ம்ம் உண்மைதான் வெண்பா பட் எனக்கு அது பழகிடுச்சு.ஸ்கூல ப்ரெண்ட்ஸ் இருந்தாங்க.காலேஜ்ல எல்லாருமே படிப்பு ஸ்டேடஸ்னு பல விஷயங்களை வச்சு தான் தங்களோட நட்பை தேடுவாங்க அதனாலேயே நா கொஞ்சம் ஒதுங்கியே இருப்பேன்.

வேலைக்குனு வந்தப்பறம் நட்பு குடும்பம்னு பெருசா யோசிச்சதில்ல.நா எவ்ளோ கூப்டாலும் சிந்தாம்மா வெளில வரவே மாட்டாங்க.நானும் ஒரு கட்டத்துல கூப்டுறத நிறுத்திட்டேன்.

சோ நா வீட்ல இருக்குற நேரத்தை தவிர மத்த நேரம் எல்லாமே தனியா தான் சாப்பாடு.சோ இந்த மாதிரி ரெஸ்ட்டாரண்ட்ஸ் ப்ளசண்ட் பீல் இருக்குறதால இதைதான் ப்ரிஃபேர் பண்ணுவேன்.”

“ம்ம் திவா உண்மை தான் ஒரு வயசுக்கு மேல நட்புங்கிறது ரொம்பவே விசித்திரமானாதா மாறிடுது.குறிப்பா காலேஜ்க்கு அப்பறமே..”

“ம்ம்..ஆமா எனக்கு வேற ஆப்ஷன் இல்ல தனியா இருக்கேன் நீங்க ஏன் வசதியான வாழ்க்கை பெத்தவங்களை எல்லாம் விட்டுட்டு இங்க இருக்கீங்க..”

“உங்க தாட் புரியுது திவா..நீங்க சொன்ன அந்த ஸ்டேடஸ் அதான் என் வாழ்க்கையையும் மாத்தின விஷயம்.அப்பா அம்மா அக்கா நா இதான் எங்க குடும்பம்.வாழ்க்கை ரொம்பவே அழகானதா தான் போய்ட்டு இருந்தது.என் ஸ்கூல் முடிச்ச டைம்ல அப்பாக்கு ஒரு டென்டர்ல  பெரிய லாபம்..அதுக்கு அப்பறம் வரிசையா தொழில் வெற்றிகள்.பணமும் அதற்கு ஏத்தமாதிரி ஏறிட்டே போக அப்பாவ எல்லாரும் முக்கிய புள்ளியா மதிக்க ஆரம்பிக்க அம்மா அப்பாவோட பழக்கவழக்கங்கள் மாற ஆரம்பிச்சது.

நீங்களே சொல்லுங்க திவா எத்தனை உயரத்துக்கு போனாலும் வாழ்க்கை ஆரம்பிச்ச இடத்தை மறக்க கூடாது தான.அவங்க அதை உணர மறந்துட்டாங்க..அக்கா இருந்த வரை அவளோட ஷேர் பண்ணிப்பேன்.அவளும் கல்யாணம் ஆகி போனப்பறம் அந்த வீடு வெறும் கல்லும் மண்ணுமா தான் தெரிஞ்சுதே தவிர குடும்பமா தெரில.அதனால தான் அவங்க எவ்வளவோ எதிர்த்தும் நா என் வாழ்க்கையை பத்துக்குறேன்னு இங்க வந்துட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.