(Reading time: 16 - 32 minutes)

காலை முதல் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் மனதிற்குள் அழுத்தத்தை கூட்டியிருக்க.. சாலையில் கவனம் பதியாமல் இரண்டு மூன்று முறை கவனத்தை சிதறடித்திருந்தது நிஷாவிற்கு..

எண்ணங்கள் யாவும் கவின் பிரஜின் இருவருடன் கண்ட அந்தச் சிறுவன் என மூவரிடம் நிலைக்கொண்டிருக்க..

தடுமாறிப்போனாள் நிஷா..

செல்வியிடம் நடந்ததனைத்தையும் சொல்லவேண்டும் என்ற எண்ணம் திண்ணமாக மனதில் பதிந்துபோக..

வீட்டிற்கு வண்டியை விரட்டினாள் அவள்..

அவளது எண்ணைகள் போலவே அவளது வண்டியும் பறக்க.. நினைத்ததை விட இருபது நிமிடங்கள் முன்னமே வீட்டை அடைந்திருக்க.. மணியைப் பார்த்தவள் தலையில் அடித்துக்கொண்டு, “போச்சு.. இன்னைக்கு விழ போகுது.. ரொம்ப ஸ்பீடா வண்டி ஓட்டியிருக்கோம்..”, தமக்கையை நினைத்து சிறு பயம் தோன்ற..

“உன் அக்கா திட்டுவதெல்லாம் பெரிய விஷயமா..??”, என்று கேள்வி கேட்க..

“அதானே.. நான் பார்க்காத சண்டையா.. வாங்காதா அடியா..”, மனசாட்சிக்கு பதில் கொடுத்தவள்.. வீட்டுப் போர்ட்டிக்கோவைப் பார்க்க ஒய்யாரமாக நின்றுகொண்டிருந்த தமக்கையின் வண்டியைப் பார்த்து ஐயோ என்று அலறிவிட்டாள்.. கொஞ்சமே கொஞ்சம் சத்தமாக..

இன்னைக்கு செத்த மகளே நீ என்பதாய் இருந்தது அவள் அலறல்..

உள்ளே போகலாமா வேண்டாமா என்று இவள் நின்ற இடத்தில் இருந்தபடியே மனதிற்குள்ளே பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க..

இவள் பின்னே அவசரமாக கீரிச்சிட்டு நின்றது ஒரு டூ வீலர்..

ஏற்கனவே செல்வியை நினைத்து சிறு பயத்தில் நின்றிருந்தவள் தன் பின்னே வந்து நின்ற வண்டியை எதிர்பாராதவளாக தடுமாறி விழப்போக.. இமைகள் தானாக மூடிக்கொள்ள..

இவளை கீழே விழாமல் பிடித்திருந்தது கவினின் கைகள்..

சிரிப்பு சத்தம் கொஞ்சம் சத்தமாகக் கேட்க.. கண்களைத் திறந்தவளுக்கு எதிரில் நின்றிருந்தனர் கவினும் பிரஜினும்..

இருவரையும் அங்கு எதிர்பாராது திகைத்து விழித்தவள், “நீங்க எங்கடா இங்க..?? இப்படி என் வீட்டிற்கு வழி தெரியும்..??”, சந்தேகமாய் இவள் கேட்டிட்ட..

“உன்னை பாலோ பண்ணோம்..”, கோரஸாக வந்து விழுந்தது பதில்..

இருவரையும் இப்பொழுது முறைத்துப் பார்த்தவள்.. எதுவும் பேசாது உள்ளே செல்லத் துவங்க..

“எங்களை வீட்டுக்குள்ள கூப்பிட மாட்டியா..??”, கவின் கேட்டிட்ட..

வந்துதொலைங்க இரண்டு பேரும் என்பதாய் சைகை காட்டிவிட்டு வீட்டுக் காலிங் பெல்லை அடித்துவிட்டு கொஞ்சம் பிந்தங்கியப்டி நிஷா நின்றிட..

சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பிறகு திறக்கப்பட்டது கதவு..

செல்வி கதவை திறப்பாள் என்று நினைத்துக் காத்திருந்த நிஷாவிற்கு சமுவைக் கண்டதும் அத்தனை ஆனந்தம்..

ஓடிப்போய் அவளிடம் ஒட்டிக்கொண்டவள், “அம்மா.. இவங்க இரண்டு பேரும் என் பிரெண்ட்ஸ்..”, என்று கவினையும் பிரசித்தியும் அறிமுகப்படுத்தி வைக்க..

இருவரையும் பார்த்து முறுவலித்தவர்.. அவர்கள் உள்ளே அழைப்பதா வேண்டாம்மா என்ற பட்டிமன்றத்தில் இறங்கியிருந்தார்..

அவரின் தயக்கங்கள் முகத்தில் பிரதிபலித்திட..

“உள்ளே கூப்பிடமாட்டீங்கள்ளா..??”, கேட்டிருந்தான் கவின் ஒரு பொன்முறுவலுடன்..

தயக்கம் போகாது கொஞ்சம் திறனரலுடனேயே அவர் அவர்களை உள்ளே அழைக்க..

நால்வரும் வீட்டிற்குள் நுழைந்திருன்தனர்..

சோபாவில் சாவகாசமாக அமர்ந்திருந்த செல்வி.. நிஷாவுடன் இருவர் வந்திருப்பது கண்டு.. அழகாய் ஒரு புன்னகை மலர..

“பிரஜித்.. கவின்.. ஆம் ஐ ரைட்..??”, என்க..

அவளை ஆச்சர்யமாக பார்த்தவர்கள்.. உங்களுக்கு எங்களைத் தெரியுமா என்பதுபோல் பார்க்க..

“ஐ நோ எவரிதிங் அபவ்ட் யூ..”, என்று அழுத்தமாக கூறியவள்.. இருவரையும் கூர்மையாகப் பார்த்துவைக்க..

அந்தப் பார்வையில் இருந்த ஆராய்ச்சியை இருவராலும் புரிந்துகொள்ள முடியாமல் சற்றே சங்கட்டமாக உணர..

“அக்..கா..”, தமக்கையை தயக்கமாக அழைத்திருந்தாள் நிஷா..

“நிஷா.. உன்னையும் சமூ அம்மாவையும் மெஸ்ஸுக்கு வரச்சொல்லி போன் வந்துச்சு..”, என்றபடியே பெண்கள் இருவரையும் நீங்கள் இப்பொழுது இங்கிருந்து கிளம்பவேண்டும் என்ற செய்தியுடன் பார்க்க..

புரிந்துவிட்டது பெண்களுக்கு.. ஆண்களுடன் இவள் தனியாக ஏதோ பேச நினைக்கிறாள் என்று..

“கவின்.. பிரஜித்.. ஒரு சின்ன வேலை.. மெஸ் வரைக்கும் போயிட்டு வந்துவிடுகிறோம்..”, என்ற நிஷா.. மற்ற இருவரின் கண்களைக் கூட நேர பார்க்காமல் சமுவுடன் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.