(Reading time: 16 - 32 minutes)

பிரம்மை பிடித்துப் போயினர் பெற்றோர்கள் இருவரும்..

“எங்க பையன் இப்படியா..??”, சோர்வாக அவன் தந்தை தலையில் கைவைத்தவாறு அமர..

“உங்கள் பையனின் நிலைமைக்கு நீங்களும் ஒரு காரணம்..”, தாரிகை குற்றம் சாட்ட..

பெற்றோர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.. நாங்கள் என்ன செய்தோம் என்று புரியாதவர்களாக..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“உங்கள் மகனின் பேக்கைப் பார்த்தோம்.. ஆயிரக்கணக்கில் காசு.. இந்த வயதில் இவ்வளவு பாக்கெட் மணி தேவைதானா..?? அளவிற்கு மிஞ்சி குழந்தைகளிடம் நாம் எது கொடுத்தாலும் அது கெடுதலில் தான் முடியும்..”, என்று அவர்கள் இருவரையும் காய்ச்சி எடுத்தவள், “உங்கள் மகனை நாங்கள் அரெஸ்ட் எல்லாம் செய்யவில்லை.. ஜஸ்ட் விசாரணை மட்டும் தான்.. சோ நீங்கள் இவனை இப்பொழுது கூட்டிக்கொண்டு செல்லலாம்.. பட் இன் ஒன் கண்டிஷன்..”, என்றாள் நிறுத்தி நிதானமாக..

“சொல்லுங்க மேடம்.. நாங்க என்ன பண்ணனும்..??”, இது வினோத்தின் தாய்..

“உங்கள் மகனுக்கு இந்தப் பழக்கம் எப்படி ஏற்பட்டது..?? எங்கிருந்து இதைக் கற்றுக்கொண்டான்..?? அவனுடைய பள்ளியில் யாரெல்லாம் இதை உபயோகிக்கிறார்கள் என்பதுபோல் சில தகவல்கள்.. இதையெல்லாம் நாங்கள் விசாரித்தோம் தான்.. ஆனால் எங்களிடம் சொல்ல இவன் பயப்படுகிறான்.. அந்த பயத்திற்கு பின்னால் ஏதோ மிரட்டல் உள்ளது.. அதனால் தான் இவனை நாங்கள் போலிஸ் ஸ்டேஷனுக்கோ.. அல்லது வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லவில்லை.. நீங்கள் நாங்கள் கேட்ட தகவல்கள் மட்டும் அவனிடம் விசாரித்துச் சொன்னால் போதும்..”, நீளமாக இவள் பேச பெற்றோர்கள் இருவரும் அதை ஒத்துக்கொள்ள..

பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டான் வினோதன்..

அவன் செல்லும் முன் அவனைத் தடுத்த தாரிகை அவன் தலைமுடியை லேசாக கலைத்துவிட்டு, “நீ இந்தப் பழக்கத்திலிருந்து வெளிவரவேண்டும் என்று நினைக்கிறாய்.. பட் முடியவில்லை.. ரைட்..??”, என்று கேள்வி கேட்க..

தாமாக ஆமென்று தலையசைத்தான் வினோதன்..

“உங்க அம்மாக்கிட்ட ஒருத்தரோட அட்ரெஸ் கொடுத்திருக்கேன்.. போய் பாருங்க.. அவங்க சொல்றதை பாலோப்பண்ணுங்க.. யூ வில் பி பேக்..”, என்றவள் அவனது தலையசைப்பிற்கு பிறகு, “வினோத்.. எதுக்கெடுத்தாலும் பயப்படாதே.. பயந்தா இந்த உலகத்துல தைரியமா இருக்க முடியாது.. தப்பு செஞ்சா ஆமா நான் தப்பு செஞ்சேன்னு ஒத்துக்கோ.. இல்லை நான் தப்பு செய்யல அப்படீன்னு பொய் சொன்னா அந்தப் பொய் உன்னை எந்த எக்ஸ்டென்டுக்கு வேணும்னாலும் கூட்டிப் போகும்.. அது உனக்கு மட்டும் இல்லை உன்னைச் சுற்றி இருக்கும் யாருக்குமே நல்லது இல்லை.. உன்னோட இந்தப் பழக்கமும் தான்.. இது உனக்கு ஒரு போர் பைவ் ஹார்ஸ் போதையைக் கொடுக்குமா..?? அந்த ஒரு சின்ன டெம்பரரியான ஹாப்பினஸ்க்காக எல்லாரையும் ஹர்ட் பண்றது எந்த விதத்தில் நியாயம்..?? சொல்லு பார்க்கலாம்..??”

இவனால் பேச முடியவில்லை.. தலை கவிழ்ந்தபடியே நின்றிருந்தான் வினோத்..

“நீ தலைகுனிஞ்சு நிக்கனுங்கறதுக்காகவோ.. கஷ்டப்படறத்துக்காகவோ சொல்லல.. நீ புரிஞ்சுக்கனும் அப்படீங்கறதுக்காக சொல்றேன்.. இட்ஸ் நாட் ஆன் அட்வைஸ்.. நீ செய்யும் செயல்களோட பின்விளைவுகள் இதெல்லாம்.. யோசி.. பொறுமையா யோசி.. அப்புறம் முடிவு பண்ணு.. என்ன செய்யலாம்னு..”

யோசிக்கட்டும் வினோதன்.. நல்ல முடிவாகவே இருக்கட்டும் அவன் முடிவு..

இனி தாரிகையின் விளையாட்டு ஆரம்பம்..

உருவெடுப்பாள்..

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.