(Reading time: 8 - 16 minutes)

தாலிகட்டிய பொண்டாட்டிக்கு முன்னாடி புருஷனும், புருஷனுக்கு முன்னாடி விருப்பப்படற ஆணோட பேச முடியுமா பெத்த பிள்ளைங்க யாரோ ஒருத்தங்களோட கொஞ்சரதை தப்புன்னு தெரிந்தும் சட்டம் அனுமதிக்குதுன்னு ஒப்புக்க முடியுமா ? நாம 21ம் நூற்றாண்டிலே வாழறோம், அதுக்காக முறைதவறி வாழணுமா ? இவ்வளவு பேசறீங்களே நீங்க விரும்பற உங்களை கல்யாணம் செய்துக்கப்போற பொண்ணு இன்னொருத்தரோட இருந்தா உங்களால தாங்கிக்க முடியுமா ?! சட்டங்கிறது யாரையும் பாதிக்கவும் கூடாது அதேநேரத்திலே பாதுகாப்பாகவும் இருக்கும். யாரும் வரமாட்டாங்கிற தைரியத்திலேதானே ஸார் கதவைத் தாளிட்டுட்டு வீட்டுக்குள்ளே இருக்கிறோம். அவ யாருக்கு பொண்டாட்டியா இருந்தா என்ன எனக்குப் பிடிச்சிருக்குன்னு அத்துமீறி வீட்டுக்குள்ள நுழைய வக்கணையான சட்டம் போட்டு இருக்காங்க இதை என்னால ஒப்புக்க முடியாது அப்படி வாழ்வதுதான் வாழ்க்கைன்னா நான் பழைய பஞ்சாங்கமாவே இருந்துட்டுப் போறேன். இந்த மாதிரி மட்டமான பேச்சுகளை இத்தோடு நிறுத்திக்கோங்க. நான் போறேன்

உத்ரா போட்டை விட்டு இறக்கத் தயாரான கூட்டத்தினரோடு போய் நின்றுகொள்ள, அங்கிருந்த பத்மினி பரத்தைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள். 

உத்ராவின் பேச்சும் சிந்தனையும், அவளின் பண்பாடும் என ஒவ்வொன்றாய் பரத்தைக் கவர்ந்து கொண்டு இருந்ததை அவனால் உணர முடிந்தது அவள் மேல் தன்னையும் அறியாமல் படர்ந்து கொண்டிருக்கும் நேசத்தை இந்த டிரிப் முடிவதற்குள் சொல்லிவிட வேண்டும் அங்கிருந்த கூட்டத்தினரோடு அவனும் தன்னை இணைத்துக் கொண்டான். 

ராஸ்தீவு இயற்கையின் கைப் பொம்மையைப் போல தன்னை ஆக்கிக்கொண்டது, அற்புதமான அந்த அமானுஷ்ய அழகு பயம், ரசனை, ஆச்சரியம் என்று பல்வேறு வகையான எண்ணங்களைக் கொடுத்தது. வண்ண மான்களும், முயல்களும் வந்திறங்கியவர்களை கண்டு பயந்து தங்கள் அணிவகுப்பைக் கலைத்து கொண்டு பறந்துவிட பழைய தேவாலயத்தின் அருகில் சற்றே புணரமைக்கப்பட்ட விடுதியில் தங்கும் பணியை மேற்கொண்டார்கள் மற்றவர்கள். உத்ராவின் கண்கள் பரத்தைத் தேடின. அவன் எங்கிலும் தட்டுப்படவில்லை, ப்ரியனும் பத்மினியும் மற்றவர்களை ஒருங்கிணைத்து கொண்டிருக்க உத்ரா ப்ரியனிடம் சென்றாள். 

அடுத்ததாத செயற்கை பவளத்திட்டுக்கள் அமைக்கும் பணி துவங்கிவிடவேண்டியதுதானே ! 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆமாம் மேடம் ஏற்கனவே இங்கே இருக்கும் பழங்குடியினர் சிலர் மூலம் தேவையான இடத்தில் முன்னேற்பாடுகளை எல்லாம் செய்தாகிவிட்டது. மதிய உணவிற்குப் பிறகு நம்ம வேலையை ஆரம்பிக்கவேண்டியதுதான். இரண்டு நாட்கள் இங்கே அடித்தளத்தை அமைத்துவிட்டு ஒரு சின்ன சைட் சீயிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஏன் இந்தமாதிரி பயணங்கள் வேலையை கெடுக்குமே ?!

நாமென்ன வயல்வேளைக்கா வந்திருக்கும் நாள்தோறும் உழுவதும், களையெடுப்பதும் என்றிருக்க, சிமெண்ட் தட்டுகள் அமைத்து அதன் ஆழம் பவளத் திட்டுகளை வளர எடுக்கும் நேரம் என்று எல்லாவற்றிக்கும் ஏற்றாற்போலத்தான் இந்த மாற்று ஏற்பாடு, மனதிற்கும் சற்று இதமாய் இருக்கும். தவிரவும் இம்மாதிரி இடங்களை மறுபடியும் வந்து நம்மால் பார்க்க இயலாது, அப்படியே வந்தாலும் லயிப்பு இருக்காது என்று விளக்கம் கொடுத்த பரத் முழு நீச்சல் உடையில் இருந்தான். ராஸ் கடற்கரையில் நீந்துவது கொஞ்சம் ஆபத்துதான் என்றாலும் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் ஆக வேண்டியதைப் பாருங்கள் மதிய விருந்தில் கலந்துகொள்கிறேன்.

மேற்கொண்டு யாரிடம் பேச்சு கொடுக்காமல் ஒரு சின்ன தலையசைப்புடன் வெகு லாவகமாக நீரை நோக்கி சென்றான். 

இதென்ன...? என்பதைப்போன்ற இருபெண்களின் பார்வைக்கு சிரிப்பினை மட்டும் பதிலாய் தந்துவிட்டு அவர்களை அழைத்துச் சென்றான் ப்ரியன். ராஸ்தீவு கடற்கரையில் நீந்துவது கொஞ்சம் ஆபத்து என்ற வார்த்தை மட்டும் உத்ராவின் காதில் மீண்டும் ஒலித்தது. தன்னையும் அறியாமல் கடலை திரும்பிப்பார்த்தாள் உத்ரா.

தொடரும்...

Episode # 11

Episode # 13

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.