(Reading time: 17 - 34 minutes)

எனவே அவளுக்காக யாழிசையும் தங்க ஒத்துக்கொண்டு தங்கள் டீமுடன் ஹச் ஓ டியை பார்த்து நாளை ப்ரோகிரமிற்கு பிராக்டிஸ் காலேஜில் தங்கியிருந்து முடிப்பதற்கு பெர்மிசன் வாங்கினர்.

அவரும் அவர்கள் தங்குவதற்கும் ப்ராக்டீஸ் செய்வதற்கும் பிளேஸ் அரேஜ் செய்து கொடுத்துவிட்டார்.

மிதுனன் நினைத்ததுபோல் பெருவாரியான மாணவர்களை அவனால் திரட்டிட முடியவில்லை. இருந்தபோதிலும் தங்கியிருந்த அவனின் நண்பர்களிடம் நாளை ப்ரோகிராம் ஸ்டார்ட் ஆகும் முன் முடிந்த வரை அவன் தயாரித்து வைத்திருந்த பிட் நோட்டிசை  அவர்களுடைய தோழர்களுடன் பகிர்ந்துவிடும்படி கூறினான் மிதுணன்

அந்த பிட் நோட்டிசின் சாரம்சம் இதோ;

“ஏற்கனவே காவிரி நீருக்காக மக்கள் திரள் போராட்டங்கள், நீதிப் போராட்டங்கள், அரசியல் போராட்டங்கள் என பல்முனை யுத்த களத்தில் நிற்கும் நம் முன், இதுபோன்ற கார்ப்பரேட்டார்கள்  வரவிருக்கும் நிலையில் இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று, விவசாயத்தை விட்டுவிட்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் வாழும்வரை வாழ்ந்துவிட்டு, நமது நிலத்தில் கடைசிவரை அடிமையாய் வாழ்ந்து மடிவது.

மற்றொன்று, நாம் சென்ற பிறகு நமது பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்ற அச்சம் இருக்குமானால், விவசாய நிலத்தில் இருந்து கனிமவளங்களை எடுக்கும்  திட்டத்தை எதிர்த்து இன்றிலிருந்தாவது தீர்க்கமாகப் போராடுவது. ஏற்கனவே விவசாய நிலங்களை நிலத்தரகர்களிடம் விற்றுவிட்டவர்களுக்கும் இதில் பிரச்சினை இருக்கிறது என்பதனையும் மறந்துவிட வேண்டாம்.

இன்னொரு கூடுதல் செய்தியையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். 35 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுமேயானால், 6.25 லட்சம் கோடி மதிப்பிலான கனிமவளங்களை எடுக்க முடியும் எனச் சொல்கிறார்கள்.

ஆனால், இது முழுமைக்கும் தனியார் நிறுவங்களுக்கான சொத்தாக மாறவிருக்கிற தொகை. அல்லது தனி மனிதர்களின் சொத்து. காவிரி பகுதியில் முறையாக விவசாயம் நடந்தால், 35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில்கள் நடக்கும். இது தமிழக மக்களுக்குக் குறிப்பாக காவிரி டெல்டா பகுதி மக்களுக்குள் பகிரப்படும் தொகையாக இருக்கும்.

இதுதான் நம்மை, நம் மண்ணை, நமது அடுத்தடுத்த தலைமுறைகளைக் காக்கும் சொத்தாக அமையும். கோடிக்கணக்கான மக்கள் பகிர்ந்துகொள்ளப்போகும் உணவை, உடையை, நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்றே ஒன்று வளைக்கப் பார்க்கிறது.

மிகப்பெரிய அரச பலத்துடனும் மற்றும் பொருளாதாரத்தில் அசுர நிலையில் நிற்கும் தனியார் நிறுவனத்துடனும் மற்றும் பொருளாதாரத்தில் அசுர நிலையில் நிற்கும் தனியார் நிறுவனத்துடனும் மோதி வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி எழலாம். இங்கே நமது வாழ்வு, நமது இருப்பைவிட நமது சந்ததியினரின் இருப்பை முன்னிறுத்தியே நாம் எதனையும் சிந்திக்க வேண்டியுள்ளது. அவர்களுக்காக சொத்துச் சேர்க்க பல வகையில் நம்மை வதைத்து அவர்களுக்காகவே வாழ்வதாகச் சொல்கிறோம். அவர்கள் வசிக்க நிலம் வேண்டும் அல்லவா! அவர்கள் சுவாசிக்கக் காற்று வேண்டும் அல்லவா! அவர்கள் உண்ண உணவு வேண்டும் அல்லவா!

தமிழீழத் தேசியத் தலைவரின் சிறப்புப் பெற்ற வாசகங்களுள் ஒன்று, “நாம் போராடினால் நாடு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது, போராடாமல் அப்படியே இருந்துவிட்டால் நம் மண்ணும் இனமும் அடிமையாய் வாழ்ந்து மடிவதுதான்”.

நமக்காக யாரும் விண்ணில் இருந்து குதித்துப் போராட வரமாட்டார்கள். நமக்கான போராட்டத்தை நாம்தான் முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே நியூட்ற்றினோ, கூடன்குளம் என நமது மண்ணையும் வளத்தையும் மலடாக்கும் திட்டங்கள் நம்முன் வைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நம் மண்ணை மாசுப்படுத்தும் ‘ஸ்டெர்லைட்’ பல ஆண்டு நீதிப் போராட்டங்களுக்கு இடையேயும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்தான், நம் வளத்தைக் காக்க நாம் அனைவரும் ஒன்று சேர்வது அவசியமாகிறது”.

என்று படிப்பவர்களுக்கு மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இளம் வயதினரை தூண்டும் தூண்டுகோலாகவும் இருந்தது அந்த பிட்நோட்டிஸ்.

ரவு பிராக்டிசிற்கு ஏற்பாடு செய்துகொடுத்த இடத்தில் கூடியிருந்த யாழிசையின் தோழியர் வட்டம் பிராக்டீஸ் என்ற பேரில் அரட்டையில் ஈடுபட்டிருந்தவர்களில் சந்தியா மிதுனனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

மேலும் அவர்களுக்கு காவலாக போடப்பட்டிருந்த நாளைக்கு ப்ரோகிராம் ஏற்பாடுகளுக்காக அங்கே தங்கியிருந்த புதிதாக சேர்ந்த சாந்தி, விமாலா ஆகிய இரண்டு லெக்சரர்களும் அவ்வப்பொழுது அவர்களை வந்து பார்வையிட்டுக்கொண்டே இருந்தனர். இரவு நேரம் ஆதலால் தனியாக அந்த பில்டிங்கை விட்டு செல்ல அவர்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறிவிட்டனர்.

மேலும் இருவரும் அவர்களுக்குள்.... இதெல்லாம் தேவையா? இந்த பிள்ளைகள் இத்தனை நாள் செய்யாத ப்ராக்டீசயா இன்று இரவு செய்துவிட போகிறார்கள்?.

ரிகர்சலில் வேணும் என்றே இதுக லூட்டி அடிச்சது  ஹச் ஓடி தவறுதலா புரிஞ்சுகிட்டு இன்னும் ப்ராக்டீஸ் செய்ங்க என்று சொல்லிட்டு போயிருச்சு .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.