(Reading time: 11 - 21 minutes)

வன் கேட்டதற்கு இருவரும் அமைதியாக பார்த்துக் கொள்ளவும், அவர்களின் பதிலுக்கு அவன் ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருந்தான்.

“அது வந்து அமுதன், சாரி தப்ப நினைச்சுக்காதீங்க, நைட் வெளிய போறதுக்கு எங்க வீட்ல அம்மா ஒத்துக்க மாட்டாங்க, அதனால நாங்க உங்கக் கூட வரல” என்று அருள் கூறவும், இலக்கியாவும் அதற்கு தலையாட்டினாள்.

அவர்களிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இந்த காலக்கட்டத்தில் இப்படி அவர்கள் மறுக்கக கூடும் என்று முதலில் அவனால் நினைத்து பார்க்கவே முடியவில்லை. இருபது நாட்கள் ஒருவரையொருவர் பார்த்திருக்கிறோம், என்னோடு வருவதெற்கென்ன என்று தான் அவனது மனம் நினைத்தது.

“மொழி நீங்க ஒன்னும் என் கூட தனியா வர வேண்டாம், என்னோட ப்ரண்ட்டும் என் கூட வரா, கூட அவளோட ப்ரண்டும் வருவாங்க, அதனால ஒன்னும் பிரச்சனையில்லை, ஒரு டீசண்ட் ஹோட்டல் போயிட்டு, ஜஸ்ட் டின்னர் சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பிடுவோம், சீக்கிரமே நீங்க வீட்டுக்கு போயிடலாம், உங்க ப்ரண்ட்ஸ் கூட இப்படி வெளியே போயிருக்க மாட்டீங்களா, அப்படித்தான் இதுவும்” எனவும்,

“அய்யோ அமுதன் உங்களுக்கு தெரியாது, எங்க ப்ரண்ட்ஸா இருந்தாலும் கூட ஆறு மணிக்கு மேல நாங்க அவங்கக் கூட வெளியே போக மாட்டோம், எங்க வீட்டிலும் இதை விரும்பமாட்டாங்க..

இதுவே எங்க வீட்ல எங்க கசின்ஸ் கூட ராத்திரி எவ்வளவு நேரம் வெளியே இருந்தாலும் அதைப்பத்தி எங்க வீட்ல கேக்க மாட்டாங்க, நாங்களும் அப்படித்தான் எஞ்சாய் செஞ்சுப்போம், அதை விட்டுட்டு வீட்ல யாருக்கும் பிடிக்காததை நாங்க எப்போதும் செய்ய மாட்டோம், அதனால எங்களை தப்பா நினைச்சுக்காதீங்க” என்றாள் தீர்மானமாக,

“அப்போ என்னை நீ தப்பா நினைக்கிறீயா மொழி, உங்களை வெளியில் கூட்டிட்டு போய் உங்கக்கிட்ட தப்பா நடந்துப்பேன்னு நினைக்கிறீங்களா?” என்று கொஞ்சம் கோபமாகவே கேட்கவும்,

“அப்படியெல்லாம் இல்ல அமுதன், நீங்கன்னு இல்ல, ஸ்கூல், காலேஜ்ல ரொம்ப பெஸ்ட் ப்ரண்ட்ஸ்க்கே நாங்க இந்த பதில் தான் சொல்லியிருக்கோம், இப்போ பைனல் இயர்ங்கிறதால காலேஜ்ல நடந்த ஃபேர்வெல் பார்ட்டி, செண்ட் ஆப் பார்ட்டில்லாம் கூட எனக்காக என்னோட ப்ரண்ட்ஸ் டைம் மாத்தி வச்சிருக்காங்க, அதனால ப்ளீஸ் எங்களை வற்புறுத்தாதீங்க..” என்றவள், தன் கைப்பையை எடுப்பதற்காக தன் இருக்கைக்கு செல்லவும்,

“என்ன இலக்கியா நீயாச்சும் உன்னோட ப்ரண்ட்க்கிட்ட சொல்லக் கூடாதா?” என்றுக் கேட்டான். ஏனெனில் இத்தனை நேரம் அருள் மட்டும் தானே அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அதனால் இலக்கியாவிற்கு ஒருவேளை இதில் சம்மதம் இருக்குமா என்று நினைத்து தான் அப்படிக் கேட்டான்.

“சார்லஸ் அவ அப்படித்தான், நான் சொன்னால்லாம் கேட்க மாட்டா, அவ பிறந்த கொஞ்ச நாளிலேயே அவ அப்பா இறந்துட்டாரு, அவங்க அம்மா ரெண்டுப் பொண்ணுங்களையும் கூட்டிக்கிட்டு தன்னுடைய அண்ணன் வீட்டுக்கே வந்துட்டாங்க,

என்னத்தான் அண்ணனோட அடைக்கலம் இருந்தாலும், அப்பா இல்லாத பொண்ணுங்களை நல்லா வளர்க்கலன்னு யாரும் சொல்லிடக் கூடாதுங்கிறதுல கலை அத்தை எப்போதும் கவனமா இருப்பாங்க,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அம்மாவோட ஃபீலிங்ஸை புரிஞ்சிக்கிட்ட அருளும் அவங்க பேச்சை மீறி எப்போதும் நடந்துக்க மாட்டா, அதனால தான் இப்படி, அவளை புரிஞ்சுக்கோங்க சார்லஸ்..” என்று சொல்லவும்,

“அப்போ நீ மட்டுமாவது வர்றீயா.. கண்டிப்பா தனியா இல்ல, முன்ன சொன்னது போல என்னோட ப்ரண்டும் வரா..” என்றான். அவன் சொன்னது சுடரையும், அவளுடன் வரவிருக்கும் மகியையும் தான், அவர்களோடு அருளையும் இலக்கியாவையும் அழைத்து செல்ல நினைத்திருந்தான். இப்போது அருள் வரவில்லையென்றதும், இலக்கியாவை மட்டும் அழைத்தான். இருந்தும் அருள் வரவில்லை என்று சொன்னது மனதிற்கு கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அந்த வருத்தத்தை அவன் சரியாக உணரவில்லை என்று கூட சொல்லலாம்,

அவனுடன் வரப்போவது யாரென்பது தெரியாததால், “அய்யோ சார்லஸ், அருளுக்காவது என்னோட பெரியப்பாவும், அண்ணாவும் சப்போர்ட்டா பேசினா அத்தை அவளை வெளிய அனுப்ப சான்ஸ் இருக்கு, ஆனா எங்கப்பாக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது, அவர் ஊர்ல தானே இருக்கார்னு நான் அவருக்கு தெரியாம வந்தா கூட, பின்னாடி அவருக்கு இது தெரிய வந்துச்சு, இண்டர்ன்ஷிப்பை விடுங்க, நீ காலேஜ்க்கே போக வேண்டாம்னு வீட்ல உக்கார வச்சிடுவார்..” என்று பயத்தோடு கூறினாள்.

அதற்குள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு அருள் வரவும், “ஓகே நீங்க வரலன்னா பரவாயில்லை அருள், ஆனா உங்களோட அறிமுகம் இந்த ஆஃபிஸோட நின்னு போகாம தொடரணும்னு நினைக்கிறேன், அதனால அப்பப்போ இந்த மெசேஜ், சாட்டிங்லாம் செஞ்சா நீங்க ரெண்டுப்பேரும் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே” என்றுக் கேட்டதும்,  அதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

“ஓகே நெக்ஸ்ட் டைம் நான் இந்தியா வரப்போ, கண்டிப்பா உங்களை பார்க்கணும், உங்களை வெளிய அழைச்சிட்டு போகணும், ஆனா டே டைம்ல, ஓகே டேக் கேர் கேர்ள்ஸ்..” என்றவன் அவர்களிடம் விடைப் பெற்றான்.

இருவரும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது,

“ஹே மச்சி நாம வர முடியாதுன்னு சொன்னதுல சார்லஸ் கொஞ்சம் அப்சட் ஆனா மாதிரி தோனுது, நம்ம இண்டர்ன்ஷிப் சிறப்பா அமைய அவரும் ஒரு காரணம், அதுக்காகவாவது கூட போயிருக்கலாம், அதுக்குப்பிறகு கூட அத்தையையும் என்னோட அப்பாவையும் சமாளிச்சிருக்கலாம்..” என்று இலக்கியா கூறவும்,

“20 நாட்கள் மட்டுமே பழகின ஒருத்தர்க்காக நாம ஏன் வழக்கத்தை மாத்திக்கணும், நான் முன்ன சொன்னது தான், நாம இண்டர்ன்ஷிப்க்காக வந்தோம், அது முடிஞ்சாச்சு, இனி அவர் யாரோ, நாம யாரோ புரிஞ்சுதா..” என்று அருள் பதிலுறைத்தாள்.

“அப்போ காண்டாக்ட்ல இருக்கலாம்னு சார்லஸ் சொன்னதுக்கு ஓகே சொன்னீயே” என்று இலக்கியா தன் சந்தேகத்தைக் கேட்க,

“ஒரேடியா அவரை ஹர்ட் பண்றது போல எல்லாத்துக்கும் மறுப்பு சொல்ல முடியுமா? அவர் ஹாய்னு ஒரு மெசேஜ் பண்ணா பதிலுக்கு ஹாய் சொல்றதுல தப்பில்ல, அதை தாண்டி டீப்பா இந்த நட்பு தொடருதுல எனக்கு விருப்பமில்ல, ஒருவேளை சாட் பண்ணி பார்த்துட்டு அவரே கூட அதை புரிஞ்சிக்கிட்டு விலகிடலாம், என்னைக்கேட்டா நீயும் அப்படியே நடந்துக்க.. அது தான் நல்லது..” என்று அருள் தெளிவாக கூறவும், இலக்கியாவிம் சரி என்று அதை ஒத்துக் கொண்டாள்.

உறவு வளரும்...

Episode # 30

Episode # 32

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.