Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 14 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 14 - சசிரேகா

Muppozhuthum un ninaive

சிவசங்கரனின் வீடு

விடிந்தது

காலையில் எழுந்ததும் சங்கரன் குளித்து ரெடியாகி திருப்தியாக சாப்பிட்டு தன் குடும்பத்திடம் நல்லவிதமாக பேசி அவர்களிடம் ஆசியை பெற்றுக் கொண்டு தன் ஆட்களை வைத்து கணக்கில் வராத பணம், நகைகள், சொத்துப் பத்திரங்கள் என அனைத்தையும் கொண்டுச் சென்று ஆடிட்டர் வீட்டில் அடுக்கினான்.

சிவா எப்படியும் சீக்கிரம் வருவான் என நினைத்த ஆடிட்டரும், நிர்மலாவையும் தன் இரு பெண்களையும் அவசரமாக ரெடியாக்கி சாப்பிட வைத்து கோயிலுக்கு விரட்டிவிட்டு ஹாலில் தயாராக தான் தயாரித்த லிஸ்ட் பேப்பருடன் காத்திருந்தார்.

சங்கரனது ஆட்கள் கொண்டு வந்து வைத்த சொத்துக்களைப் பார்த்து மலைத்தார். அவனின் ஆட்கள் சென்ற அரை மணி நேரம் கழித்து நடந்தே ஆடிட்டர் மாமா வீட்டுக்கு வந்து சேர்ந்தான் சங்கரன்

”என்ன மருமகனே வேர்த்து விறுவிறுத்து வர்ற” என கேட்க தன்னை பல வருடங்கள் கழித்து மருமகனே என்றாரே என நினைத்து சந்தோஷமாக உள்ளே வந்தான் சிவசங்கரன்.

“நடந்து வந்தேன் மாமா”

“ஏன் உனக்குத்தான் கார் இருக்கே”

“அது என் பேர்ல இல்லை மாமா, அப்பா பேர்ல இருக்கு”

“சந்தோஷம் அப்ப இத்தனை நாளும் நீ வெட்டி பந்தா காட்டிட்டு இருந்தியா”

என சொல்ல அவன் சிரித்துக் கொண்டே சோபாவில் அமர்ந்தான்.

”மாமா இவ்ளோதான் தேறிச்சி, மொத்தம் கொண்டாந்துட்டேன் இனிமே உங்க பொறுப்பு”

“நிஜமாவா சொல்ற இல்லை இன்னும் எங்கயாவது ஒளிச்சி வைச்சிருக்கியா”

“இல்லை மாமா இவ்ளோதான் மாமா”

“சரி பணம் எவ்ளோ இருக்கு, நகை எவ்ளோ இருக்குன்னு கணக்கு போட்டியா இல்லை இனிமேலதான் போடனுமா”

“அதுக்கு அவசியம் இல்லை நேத்தே அப்பா இதுக்கு எல்லாத்துக்கும் கணக்கு போட்டாரு இந்தாங்க பைலு பாருங்க” என சொல்ல அதை வாங்கிய கையோடு தான் தயாரித்த லிஸ்ட் பைலைத் தந்தார்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”இந்தாடா இது ஒரு காப்பி, இன்னொரு காப்பி என்கிட்ட இருக்கு, இதுல இருக்கற சொத்து பணம் உன் பேர்ல இருக்கனும் புரியுதா” என சொல்ல அவனோ பைலை திறந்துப் பார்த்து அதிர்ந்தான்

“மாமா இது ஓட்டலாச்சே அது அம்மா பேர்ல இருக்கே”

“இருக்கட்டுமே என்ன இப்ப? உன் அம்மா உனக்காக தரமாட்டாங்களா என்ன?”

“எதுக்கு மாமா ஓட்டலு”

“இதுக்கு மேல நீ படிச்ச படிப்பால யாரும் உன்னை தேடி வரமாட்டாங்க? சொந்தமா பிசினஸ் செய்றேன்னு பணத்தை அழிக்காத இருக்கற ஓட்டல் நல்லாவே போகுது யாரோ சமைக்கறாங்க, சமையல் ருசிக்காகத்தான் நிறைய பேர் அங்க சாப்பிட வராங்க அதனால நீ அதுக்கு ஓனரா இரு போதும், சமைக்கற வேலை கூட என் பொண்ணுக்கு வராது”

“ஓ நீங்க அப்படி வர்றீங்க சூப்பர் மாமா ஆனா, அம்மா உயில் எழுதிடுச்சே”

“அடேங்கப்பா உன்னால அந்த உயிலை கேன்சல் பண்ண முடியாதாடா, எத்தனை சொத்துக்களை உயில் எழுதியிருந்தாலும் அதை உடைச்சி வாங்கியிருக்க, என்கிட்டயேவா பேசற”

“சரி சரி உயிலை ரத்து பண்றேன் போதுமா”

“சொல்லாத செஞ்சிக் காட்டு” என சொல்ல அவனோ வீட்டுக்குள் சுற்றி முற்றிப் பார்த்துவிட்டு

”மாமா சாந்தி எங்க?”

“எதுக்கு?”

“சும்மா பார்க்கலாம்னு”

“வசுமதி கல்யாணம் ஆனாதான் சாந்திக்கு புரியுதா இல்லையா“

“நான் பெரியப்பா கிட்ட நேத்தே பேசிட்டேன் மாமா, அவர் அக்கவுண்ட்ல செலவுக்கு கூட பணத்தையும் போட்டுட்டேன். அவர் ஆன்டர்சனை பிடிச்சிடுவாரு மாமா”

“அப்ப சரி வசுவுக்கு கல்யாணம் ஆன பின்னாடி மறுபடியும் பொண்ணு கேட்டு வா இப்ப கிளம்பு”

“மாமா”

“என்னடா”

”அதான் நேத்தே எல்லாம் பேசி முடிச்சிட்டோமே அப்புறம் என்ன மாமா?”

“பேசி முடிச்சோமா இல்லையே, உன் மாமாவா, உன் சொந்தமா என்னை நினைச்சி கல்யாணத்துக்கு ஆசைப்படறியே சரி பாவம் என்னென்ன தேவைன்னு சொன்னேன் அவ்ளோதான் என் பொண்ணை உனக்குத் தரேன்னா சொன்னேனா”

“மாமா பேச்சை மாத்தாதீங்க நீங்க சொல்றதை செஞ்சா சாந்தியை எனக்குத் தரேன்னு சொன்னீங்களே”

என சிவா கத்தவும்

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 14 - சசிரேகாமனஸ்ஸாக்ஷிந் 2018-10-28 07:55
:Q: sivasankaranukku santhi mel appadi enna kadhal aval than venumnu thannaiye mathikarare shanthiyum sila times sivakaga pesalame innum shanthikaga siva ennenna seiya pogirar let see nice story
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 14 - சசிரேகாராணி 2018-10-25 23:04
வசுமதி பிரச்சனை தீர்ந்து போச்சி சிவசங்கரனுக்கும் சாந்தி கிடைக்கப்போறாள் சூப்பர் இனி எந்த பிரச்சனையும் இல்லை :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 14 - சசிரேகாvijayalakshmi 2018-10-25 23:01
அடுத்த எபியில கதை முடியுதா :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 14 - சசிரேகாராஜேந்திரன் 2018-10-25 22:59
எல்லாரும் ஒண்ணா சேர்ந்துட்டாங்களே ஆன்டர்சனும் வந்தாச்சி வசுவோட ப்ராப்ளம் முடிஞ்சது இனி என்ன இருக்கு கதையில சீக்கிரம் முடிச்சிடுங்க மேம்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 14 - சசிரேகாmahinagaraj 2018-10-25 14:39
ஹா....ஹா..... ரொம்ப சூப்பர்... :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # Why why whyKiruthikaa 2018-10-25 08:08
Even after repeatedly commenting you are least botherd about it .. you have no social responsibility what the hell do you think you are writing ... I have seen many respect full writers here saki ,Bindu ,Raasu , Annna , Kandi , Mano I can keep making them but you are a disrespect for the society of writers .. please do everyone a favour and stop writing
Reply | Reply with quote | Quote
# RE: Why why whysasi 2018-10-25 12:25
Quoting Kiruthikaa:
Even after repeatedly commenting you are least botherd about it .. you have no social responsibility what the hell do you think you are writing ... I have seen many respect full writers here saki ,Bindu ,Raasu , Annna , Kandi , Mano I can keep making them but you are a disrespect for the society of writers .. please do everyone a favour and stop writing

சாரி கிருத்திகா இந்த கதைக்கு போன 4 வாரங்கள்ல வந்த கமெண்ட்ஸ்களை வைச்சி நானும் நிறைய விசயங்களை மாத்தி எழுதிட்டேனே இந்த முறை நான் யாரையும் தப்பான விதமா காட்டலையே தப்பானதையும் எழுதலையே பார்த்து பார்த்து சரியாதானே எழுதியிருக்கேன் என் மேல உங்களுக்கு வந்த கோபத்துக்கு காரணம் எனக்கு புரியலை தப்பாயிருக்குன்னு கமெண்ட்ஸ்ல சொன்னதெல்லாம் நான் மாத்திட்டேனே :sad:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 14 - சசிரேகாSAJU 2018-10-24 18:00
HA HA SUPERRRRRRRR UD SIS
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top