(Reading time: 15 - 29 minutes)

“கண்ணு இதெல்லாம் விளையாட்டு இல்ல..நீங்க சொன்னதுக்காக இவ்ளோ நேரம் எல்லாத்தையும் பண்ணிட்டேன்.இது வேண்டாம் டா..எனக்காக இந்த ஒரு விஷயம் மட்டும் பண்ணும்மா..புரிஞ்சுக்கோ..”

அதற்கு மேல் அவரை கட்டாயப்படுத்த விரும்பாதவளாய் அவர் அறைக்குச் சென்றபின் கிச்சனுக்குச் சென்றவள் இரு நொடிகள் ஆள் மூச்சுக்களை எடுத்தவளாய் பால் சொம்பை கையில் எடுத்துக் கொண்டு தங்களறைக்குச் சென்றாள்.

தன்னவனுடனான முதல் தனிமை பொழுது அதுவும் கணவன் மனைவியாய்.அவனைப்பற்றியும் அவனது அன்பு பற்றியும் எவ்வளவோ தெரிந்திருந்தும் புதுமணப் பெண்ணுக்கேயுரிய ஒருவித பதட்டம் இல்லாமல் இல்லை வெண்பாவிற்கு.

உள்ளே சென்று கதவை தாழிட்டவள் சில நொடிகள் அப்படியே நின்றிருக்க கப்போர்டில் எதையோ எடுத்துக் கொண்டிருந்தவன் அவள்புறம் திரும்பி,

“என்னாச்சு கண்ணம்மா வா ஏன் அங்கேயே நிக்குற?”

அந்த ஒற்றை அழைப்பு போதுமே அவளுக்கு மனம் வெகுவாய் சமாதானமடைந்திருந்தது.

அவனும் கட்டிலின் அருகில் வர பாலை அங்கிருந்த டேபிளில் வைத்தவள் அவன் பாதம் பணிய குனிந்தாள்.சட்டென அவள் கரம் பற்றி நிறுத்தியவன் அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி நெற்றியில் அழுந்த இதழ் பதித்தான்.

“காட் ப்ளஸ் யூ டா..சந்தோஷமா இரு எப்பவும்..”,என்றுகூறி விடுவித்தான்.

மேலும் அவளை இயல்பாக்க எண்ணியவனாய்,”கண்ணம்மா நீ நம்ம ரூம்க்கு இப்போ தான வர்ற..எல்லாம் ஓ.கே வா எதாவது சேன்ஞ்ச்ஸ் பண்ணணும்னா சொல்லு..அந்த கப்போர்ட் இப்போ தான் ஆர்டர் பண்ணி வர வச்சது உன் திங்க்ஸ் எல்லாம் அதுல வச்சுக்கோ.அண்ட் இனி இது உன் பொறுப்பு என ஒரு பைலை அவளிடம் நீட்டினான்.

கையில் வாங்கியவள் கேள்வியாய் அவனைப் பார்க்க கட்டிலில் அமர்ந்தவாறே அவளையும் தன்னருகில் அமர்த்தி பிரித்து பார்க்குமாறு கூறினான்.

சில பல டாக்குமெண்ட்ஸும் ஒரு சாவியும் இருந்தது.இதெல்லாம்  இப்போ வர என்னோட சேவிங்ஸ்னு நா வச்சுருக்குறது கண்ணம்மா..ஒரு லேண்ட் டாக்குமெண்ட் அண்ட் பாங்க் அக்கவுண்ட் டீடெயில்ஸ் எல்லாம் இருக்கு.

இது நம்ம லாக்கர் கீ பொதுவா வீட்டில நிறைய கஷ் வச்சுக்க மாட்டேன் பட் எனக்கோ சிந்தாம்மாக்கோ மாச செலவுக்கு எது வேணாலும் இதுல இருந்து தான் எடுத்துப்போம்.இனி இதெல்லாம் நீயே பாத்துக்கோ உன்னை பாத்துக்குறது மட்டும் தான் என் வேலை..சரி தான?”

“என்ன திவா இதுக்கெல்லாம் என்ன அவசரம்..அதுட்டுமில்லாம சிந்தாம்மா இருக்கும்போது இந்த பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு?”

“கண்ணம்மா அவங்க இதெல்லாம் பாத்துக்க மட்டாங்க..எவ்வவளவோ சொல்லியும் கேட்கல..இதெல்லாமே என் பொறுப்பில் இருந்தது தான்.போதும்டா ரொம்பவே பொறுப்புகளை சுமந்தாச்சு..இனியாவது எனக்கு சாயுறதுக்கு தோள் தேவை அதுவும் நீ மட்டும்..”

அவனின் பாசத்திற்கான ஏக்கம் அப்பட்டமாய் அவளுக்கு புரிந்தது.வெளியுலகில் எத்தனை கம்பீரமாய் தெரிந்தவன் பச்சை குழந்தையாய் பாசத்திற்கு ஏங்கும் மனதோடு தன்னை உயிராய் நினைப்பதை கண்கூட பார்த்தவளுக்கு அதற்கு மேல் ஒன்றும் பேசத் தோன்றாமல் அவனை அப்படியே தன்னோடு சேர்த்துக் கொண்டாள்.

தாயாய் தன் பிள்ளையை தனக்கே தனக்காய் ஏற்றுக் கொள்ளத் துடிக்கும் பாவம் இருந்தது அதில்.அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தவனுக்கு கண்கள் அதுவாய் கலங்கியது.

தன்னிடமிருந்து அவனை விலக்கியவள் கண்ணீர் துடைத்து முகமெங்கும் தன் காதலை பாசத்தை முத்தங்களாய் பரிசளித்தாள்.

ஒரு கட்டத்தில் பாசம் காதலாய் மாறி காதல் கணவனுக்கான உரிமையாய் மாற மனைவியாய் அவனோடு கலந்திடத் தயாரானாள் வெண்பா.

தாம்பத்தியம் என்பதே அழகு அதிலும் இரு மனங்கள் உரசி ஒருவர் தேவை மற்ற வர் உணர்ந்து தன்னவளுக்காய் எத்தனை உணர்ச்சிப் பெருக்கிலும் நிதானத்தை கைப்பிடித்து அவளின் முகபாவங்களுக்கும் முனகல்களளுக்கும் மதிப்பளிப்பது வெற்றி தோல்வி கர்வம் காமம் கடந்து தன் துணையும் துணையின் உணர்வுமே பிரதானமாய் நின்று நடக்கும் தாம்பத்யம் கவிதையினும் அழகாய் இல்லாமல் போய்விடுமா!

அந்த கவிதையை வெண்பா ஒவ்வொரு நொடியும் உணர்ந்தாள்.காமம் என்ற ஒன்றை அவள் எந்தநிலையிலும் உணரவில்லை.உணர்ச்சி வேகமும் ஹார்மோன் மாற்றங்களும் படுத்தி எடூத்தாலும் அனைத்தையும் கடந்த தன்னவனின் காதல் மட்டுமே பிரதானமாய் தெரிந்தது.

அதன்பின்னும் அவளை தன் கையைணைப்பிலேயே அவன் வைத்திருக்க களைத்து கசங்கியவளுக்கு அது இன்னுமே தேவையாய் இருந்தது.பாதி உறக்கத்தில் விழித்தவள் லேசாய் திரும்ப முயற்ச்சிக்க அந்த சிறு அசைவிற்கே விழித்துக் கொண்டவன்,

“என்னாச்சு கண்ணம்மா..ஆர் யூ ஓ.கே?”

“ம்ம் திவா”,என்றவள் இன்னோமாய் அவனோடு மார் சாய்ந்து கொண்டாள்.

காலையில் சற்றே அயர்வாய் எழுந்து அமர்ந்தவளோடு தானும் எழுந்து கொண்டவன் மென்மையாய் அணைத்து நெற்றியில் இதழ்பதித்து,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.