(Reading time: 15 - 30 minutes)

காரில் அவனை ஏற்றுவதற்கு முன் அவன் தலையில் விழுந்த பலமான அடியில் ஏற்கனவே ஒருநிமிடம் அவனுக்கு இருட்டிகொண்டு வந்திருந்தது இப்பொழுது அதே இடத்திலேயே மேலும் இரண்டு அடிவிழுந்ததும் அவன் நினைவுத்தப்பியது.

திரும்ப அவனுக்கு நினைவு திரும்பும் நேரம் கைகள் பின்புறம் கட்டப்பட்டநிலையில் தரையில் படுத்திருந்தவனுக்கு கொஞ்சம் கொஞ்சமே நினைவு திரும்பி கொண்டிருந்தபோது அவனுடைய காதில்,

என்னடா இப்படி கிடக்குறான் செத்துகித்து போய்ட்டானோ! என்ற குரலும் அதனை தொடர்ந்து இல்ல தலைவரே மயக்கமாத்தான் இருக்கான் என்ற பேச்சு சத்தம் மிதுனனின் காதில் விழுந்தது.

யாரை தலைவரேனு சொல்றாங்க...? என்னை இவன்தான் ஆட்களைவிட்டு கடத்தி வரவச்சுருக்கான் யார் அது.....? என்று அடையாளம் காண்பதற்கு தனது இமைகளை சிரமப்பட்டு லேசாக திறந்து பார்த்தவன் கண்களின் விழுந்தது மினிஸ்டர் ரங்கராஜனின் உருவம் .

கையில் மொபைலைவைத்து யாருக்கோ டயல் செய்துகொண்டிருந்த ரங்கராஜன்  காதிற்கு போனைகொடுத்து  தம்பி தீரமிகுந்தன் காலேஜ் பங்சனுக்கு கிளம்பிடீங்களா?  பன்னிரெண்டு மணிக்கு அங்க வந்துருவேணு சொல்லியிருந்தேன்ல, ஆனா நான் வர லேட்டாகும் . நான் கிளம்பிட்டேன்னு சொன்னபிறகு நீங்க வாங்க என்றான்.

அதன்பின் அந்தபக்கம் பேசியவன் என்னசொன்னானோ தெரியவில்லை. ஆனால் அதற்கு பதிலாக  ரங்கராஜன், தம்பி  நம்ம சி.என்.ஜி க்கு நிலத்தை கையகப்படுத்த போறதை  அந்த காலேஜ் பையன் மிதுனன் தடுக்குறதுக்கு கூட்டத்தை திரட்ட  பிட்நோட்டிஸ் பசங்களுக்கு இஸ்யூ செய்துட்டு இருகிரான்ற  விஷயம் தெரியவந்துச்சா அதனால அவன நம்ம பசங்கள வச்சு தூக்கிட்டு வர சொல்லிட்டேன் .

என் முன்னாடிதான் அவன் கிடக்குறான் கொஞ்சம் கவனிச்சிட்டு நான் கிளம்பிவர நேரம் ஆகிடும், உங்ககிட்ட என் வேலையின் முதல் படியாக சி.என்.ஜிக்கு எதிராக முதல் ஸ்டெப்பை தடுத்து நிறுத்தறதுக்கான வேலையை நான் ஆரம்பிச்சுட்டேன் என்று சொல்றதுக்காகத்தான் இப்போ போன் பண்ணுறேன். நான் காரியத்தில் இறங்கிட்டேனு புருஞ்சுருப்பீங்க என்றான்.

அதற்கு அந்த பக்கம் எதுவோ அந்த தீரன் சொன்னான். அது  என்ன என்று தெரியவில்லை என்றாலும் அதற்கு பதிலாக ரங்கராஜன் கூறிய, அதனால் தம்பி நீங்க எனக்கு கொடுக்கறதா சொன்ன தொகையில அட்வான்சா ஒரு மூணுசியை இப்போ கொடுத்துட்டீங்கன்னா நல்லது என்று அவன் கூறியதும். அதுக்கு அந்தபக்கமிருந்த தீரமிகுந்தன் சொன்னபதிலில்

முகம் முழுவதுவும் புன்னையுடன் சரிங்க தம்பி.... ரொம்ப சந்தோசம் அப்போ நான் கிளம்பும்போது உங்களுக்கு போன் பண்றேன் என்று கூறிவிட்டு கைபேசியை துண்டித்தவரின் பார்வை தன்னை முழித்து பார்துகொண்டிருந்த மிதுனனின் மீதுவிழுந்தது.

மிதுனன் காதில் விழுந்த ரெங்கராஜனின் வார்த்தைகளில் இருந்தே தன்னை எதற்க்காக கடத்தியிருகிரார்கள் என்பதை புரிந்துகொண்டான்.

டேய் பய கண்முளிச்சுட்டாண்டா நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு இழுத்துட்டு வாங்கடா என்று கூறியவர் மிதுனனை பார்த்து என்ன பெரிய பருப்புன்னு உனக்கு நினைபோ! காலேஜுக்கு போனமா டிகிரிய வாங்குனோமா, இன்டர்வியூவ அட்டன் பண்ணி வேலைக்கு போனோமானு இருக்காம பெரிய புரட்சி செய்றேன்னு கிளம்பின செத்துருவ.

நீ இப்போ குடுக்குற ட்ரீட்மென்டுல அடங்குற. அப்படியில்லாட்டி நக்சலைட் என்று முத்திரை குத்தி தீவிரவாதியா உன்னை சித்தரிச்சு வாழ்க்கையே இல்லாமல் ஆக்கிடுவோம்.  ஒழுங்கா கேக்குறதுக்கு பதிலை சொல்லிடனும் சரியா..? என்று கூறியவரை முறைத்துபார்தான் மிதுனன்.

அடிங்... என்ன முறைப்பு என்ற ரங்கராஜன் அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு  அறைகொடுத்தவன் இழுத்துட்டுவாங்கடா என்று கெஸ்ட் ஹவுஸ் நோக்கி நடந்தார்.

மிதுனனை இழுத்துட்டு வந்து சேரில் கட்டிபோட்டு எங்க மீட்டிங் போடுறதா உத்தேசித்திருந்தீங்க யார் யாரெல்லாம் உன் கூட கூட்டு என்று கேட்டு அவனை டார்ச்சர் செய்தனர் .

ஆனால் மிதுனன் அவர்களின் டார்ச்சர் அத்தனையையும் தாங்கிபடி எதுவுமே பேசாமல் ரங்கராஜனை முறைத்தபடி அமர்ந்திருந்தான்.

அவனின் அழுத்தம் கண்ட ரங்கராஜனின் மனதில் அவன் லேசுப்பட்டவனில்லை என்ற எண்ணம் உருவானது.(சாதாரமக்களைவிட போராட்டகாரர்களின் மன உறுதி அதிகமானது. போராட்டகார்ர்களின் மனஉறுதி அவர்களின் உடல் காயங்களால் தொய்ந்துவிடாது அந்த காயங்களின் வலி அவர்களின் மனதை மேலும் புடம்போட்ட தங்கமாய் ஜொலிக்க வைக்கும்.)

அவருக்கு தான் கல்லூரி செல்லவேண்டி நேரம் ஆகிவிட்டதால் வந்து அவனை கவனித்துகொள்வோம் என்ற எண்ணத்தில் எழுந்த ரங்கராஜன். தனது பி.ஏ விடம் இந்த மிதுனன் நாம் நினைக்கிறமாதிரி சாதாரணமானவனா தெரியல! சாதாரணமான ஆளா இருந்தா இப்போ வாங்குன அடியில பாதிகூட தாங்க மாட்டான். நாம இவன குறைச்சு எடைபோட்டுட்டோம். நீ என்னசெய்ற இவன் பேக்ரவுன்ட் என்ன? யார்கூட எல்லாம் இவனுக்கு தொடர்பு இருக்கு என்று விசாரித்து இன்னைக்கு சாயந்தரம் எனக்கு ரிப்போர்ட் கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணு என்று கூறியவர் வெளியேறிவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.