(Reading time: 15 - 30 minutes)

அதன் பின் வாங்கிய அடியிலும் காலையில் இருந்து ஒட்டிய வயிறுமாக இருந்ததும்  அதன்பின் சந்தியாவின் நினைவினில் அவனது முகம் பூவாய் மலர்ந்தது.

சந்தியாவின் மூலம் தப்பித்து வெளியேறியவனுக்கு சிறிது தூரம் ஓடியதுமே ஏனோ கண்ணை கட்ட ஆரம்பித்தது. வேகமாக ஓடிவந்ததால் மூச்சு வாங்க ஆரம்பித்ததுடன் தலையில் பெரும் வலி உண்டாகி அதனை தாங்க முடியாமல் கண்கள் இருட்ட ஆரம்பித்தது .

அதனையும் மீறி அவன் கால்கள் முன்னேறி செல்ல லம்பியபடி சில எட்டு வைத்தவனை நான்கு பேர் வளைத்து பிடிக்க முயன்றனர் பொதுவாக மிதுனன்  எப்பொழுதுமே கவனமாகத்தான் இருப்பான். ஆனால் தான் யாழிசை, சந்தியா ஆகிய இரு பெண்களால் தடுமாறி சுற்றி இருந்த ஆபத்தை உணராமல் போனதால் ரங்கராஜனின் ஆட்கள் ஏதிர்பாராமல் தன்னை தாக்கி கடத்தினர்.

இப்பொழுது தனது உடலில் ஏற்பட்ட  திடீர் பலவீனத்தினால் அடுத்த சிலரிடம் எளிதாக மாட்டுவதை உணர்ந்துமே அவனால் ஏனோ தப்பிக்க அவனின் தலையில் ஏற்பட்ட வலி அவனை செயல்பட விடவில்லை.

அந்த நால்வரும் காரில் தன்னை எளிதாக ஏற்றி பயனப்பட ஆரம்பித்தநேரம் தலை வலி அவனுக்கு அகோரமானதால் ஆ என்று கத்தியபடி தலையில் கைவைத்தவனுக்கு அவனின் முடிகளுக்கிடையில் ஏதோ ஒன்று தன தலையில் குத்தி நின்றது கைக்கு புலப்பட்டதும் அதனை உருவி எடுத்தான்.

ஆமாம் அவனின் தலையில் கட்டையால் அடித்தபோது அக்கட்டை முறிந்து அதிலிருந்த ஒரு சிராய் துண்டு அவனின் தலையில் குத்தி நின்றிருந்தது.

அதனை உருவி எடுத்ததால் ரத்தம் குபுகுபு என்று வெளிவர ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து அவன் மயங்கி நினைவிலந்தது வரை இப்பொழுது நினைத்து கொண்டிருந்தான்.

அப்பொழுது தான் தன்னுடைய நிலை உணர்ந்தவன் தனது தலையை தொட்டுப்பார்த்ததில் அதில் பெரிய கட்டு போடப்படிருந்தது.

தனது கையில் குளுகோஸ் ஏறிகொண்டிருந்தது, தான் மருத்துவமனையிலேயா இருக்கிறோம்! என்று நன்கு விளித்து சுத்தி பார்த்தான்

ஆனால் தான் இருப்பது மருத்துவமனையில்லை என்பதனை உணர்ந்தவன். அவன் இருந்த ரூமின் கதவை திறந்து அங்கு உள்ளே வந்த தீரனை யார் என்று தெரியாமல் புருவம் சுளித்த  எழுந்து அமர முயன்றான்.

ஆர் யூ ஓகே மிதுனன் என்று கேட்டான் தீரன். அவன் கேட்டதற்கு பதில் கூறாமல் யார் நீங்க இப்பொழுது எங்கு நான் இருக்கிறேன் என்றான் மிதுனன்.

அவன் தமிழில் பேசவும் தீரனுமே தமிழிலேயே அவனிடம் உரையாட ஆரம்பித்தான். அவனின் தமிழ் உச்சரிப்பிலும் அவனின் பாடிலேங்க்வேஜ் மற்றும் ஸ்டைலில் யோசனையாக அவனை பார்த்த மிதுனன் அவன் வேறு நாட்டுக்காரன் என்பதனை உணர்ந்தாலும் அவனது முகம் அவனுக்கு பரிச்சயமனதுபோல் தோன்றியது .

அப்பொழுது, “நான் தீரமிகுந்தன் உன்னை நான் இங்கு கொண்டுவந்ததுக்கு ரீசன் சொல்வதற்குமுன் உன்னால் என்னுடன் சேட் பண்ற அளவு உனக்கு ஸ்டேமினோ இருக்கா?” என்று கூறிய தீரனின் வார்த்தையில் அமைச்சர் போனில் பேசிய தீரமிகுந்தன் என்ற பேர் அவனுக்கு ஞாபகம் வந்தது.

எனவே ரவுத்திரத்துடன் அந்த நிலைமையிலும் நீ என் மண்ணை என் தாய் பூமியை சூரையாடவந்த ராட்சசன் தானே.... உன் எண்ணத்தை நிறைவேற விடமாட்டேம் என்று கர்ஜித்தான்.

அவனின் தூய தமிழ்  வார்த்தைகளின் அர்த்தத்தை கிரகிக்க முடியாமல் போனாலும் அவன் என்ன சொல்லியிருப்பான் என்பதனை யூகித்தவன்.

கமான் மேன், நீ நினைக்கிற மாதிரி மற்றவர்கள் பார்வையில் நான் சி.என்.ஜி யின் சார்பாக இங்கு வந்திருப்பது இங்குள்ள நேச்சுரல் ரிசோர்சை கன்சியூம் செய்ய வந்திருப்பவன் தான் .

ஆனால் ரியாலிடி அது கிடையாது. நான் ஒரு எகானமிக் ஹிட்மேனாக அனுப்பப்பட்டாலும் திஸ் பிளேஸ் இஸ் மை மதர்லேண்ட். சோ நான் இதை காப்பாத்த என்னுடைய புல் எபோர்டை ஸ்பென் பண்ணிட்டு இருக்கேன்.

பட் என்னுடைய அந்த முயற்ச்சிக்கு நான் கூறுவதை நம்பி எனக்கு ஹெல்ப் பன்னவைக்க நான் செலக்ட் செய்தவள் மிஸ் யாழிசை .

பட் உன்னுடைய ஒரு பிட் நோட்டிசை வைத்து அவள் என்னை  ஹேட் செய்துட்டா . சோ இனி என்னால் என்னுடைய டாட் மிஸ்டர் வானவராயரை யாழிசையின் மூலம் நல்லபடி என் மேல் எண்ணத்தை வரவைத்து இந்த பிளேசில் சி.என்.ஜி வராமல் இருக்க பிளானை செயல்படுத்த முடியாது.

உன்னால் சேக் ஆனா என்னுடைய பிளானை உன்னைகொண்டே சரியாக்க நினைத்துதான் என் இடத்திற்கு உன்னை கொண்டுவந்திருக்கிறேன் மேன் என்றான்.

என்ன சொன்ன வானவராயர் அய்யா உன் அப்பாவா? அப்ப.... நீ ரங்கராஜனிடம் போனில் பேசியதை நான் கேட்டதெல்லாம்?... நீ சொல்வதை நான் எப்படி நம்ப?

என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டான் மிதுனன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.