(Reading time: 8 - 15 minutes)

 "ஈஸ்வரி அப்டி பேசிட்டானு தப்பா நினைக்காதீங்க. அவ சுபாவமே அப்படி தான். மனசுல பட்டதை அப்டியே பேசிடுவா. மனசுல வச்சிக்க மாட்ட. சின்ன வயசுலே ரொம்ப கஷ்ட பட்டுட்டா அது தான் அவள பக்குவ படுத்தி இருக்கு, எதையும் முகத்துக்கு நேர பேசிடுவா. எங்க ஒரே பொண்ணு கோமதிய சென்னைல கல்யாணம் பண்ணி குடுத்துக்கு அப்புறம் வீடே வெறிச்சோடி இருக்கும். அப்போல்லாம்  ஈஸ்வரி  தான் எங்களுக்கு துணையா இருந்தா. ரொம்ப நல்ல பொண்ணு..." என்று அவர் கூறிக்கொண்டு இருக்கும் போதே உள்ளே இருந்து வந்த பாட்டி கண்ணசைக்க தன் பேச்சை நிறுத்திய குருமூர்த்தி அவர்களை பார்த்து, "சாப்பிடலாம் வாங்க",   என்றார்.

"அதுலாம்  வேண்டாம்  ஐயா, நாங்க சாப்பிட்டோம்", என்றான் அன்பு வேகமாக.

"எங்களுக்கு ஒரு சிரமமும் இல்ல வாங்க சாப்புடுங்க...", என்று அவர்களை உள்ளே அமர வைத்து உணவு பரிமாறி கொண்டுஇருந்தார் கஸ்தூரி பாட்டி.

அதே நேரம் வெளியே இருந்து உள்ளே வந்த குருமூர்த்தி தாத்தா,

"ஈஸ்வரி கிட்ட வீடு விஷயமா நா பேசிட்டேன். நீங்க சாப்பிட்டு முடிச்சதும் நாம போயி வீட்ட பாக்கலாம்", என்றார்.

இதை கேட்டு சந்தோஷமடைந்த இருவரும் விரைவாக உணவருந்தி விட்டு வீடு பாக்க தயாரானார்கள்.

நால்வரும் ஈஸ்வரியின் வீட்டிற்கு சென்றனர். அவர்களை வரவேற்ற ஈஸ்வரி, அன்புவையும் தமிழையும் பார்த்து நா பேசுனது ஏதும் மனசுல வச்சிக்காதீங்க, அப்பா குருமூர்த்தியை) சொன்னாங்க உங்கள பத்தி, வாங்க போய் வீட்ட பாக்கலாம்", என்று அழைத்து கொண்டு போனார்.

 முதல் மாடியில் உள்ள அந்த வீட்டை அடைந்ததும்,

"தமிழ்... நீ போய் பாரு முதல்ல", என்று அவளை முன்னே அனுப்பிவிட்டு அன்பு பின் தொடர்ந்தான். அதன் பின் மற்ற மூவரும் வந்தனர்.

வீட்டினுள் நூழைந்ததும் ஹால், அங்கு இருந்து வல பக்கம் சமையல் அறை, சமையலறை பக்கத்தில் சின்ன பூஜை அறையும், இடப்பக்கம் போனால் படுக்கை அறை அதனுள்ளே அட்டாச் பாத்ரூமும் இருந்தது. இரண்டு பேருக்கு தாராளமாக போதும் என்ற அளவிலே வீடு இருந்தது. ஒரு ஒரு அறையாக சென்று பார்த்து கொண்டு இருந்த தமிழிடம் சென்ற அன்பு, "வீடு பிடிச்சி இருக்கா?", என்றான்.

அவன் பக்கம் திரும்பியவள் புன்னகையுடன், "ரொம்ப பிடிச்சி இருக்கு மாமா", என்றாள்.

அவளின் இந்த புன்னகையே அவனுக்கு போதுமானதாக இருக்க அதற்கும் மேல் கேள்வி ஏதும் கேட்காமல் மற்றவர்களை தேடி சென்றான்.

ஹாலில் அமர்ந்து உரையாடி கொண்டு இருந்த மூவரிடமும் வந்த அன்பு "வீடு எங்களுக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு மா முன் பணம் எவ்ளோனு சொன்னீங்கன்னா... " என்று கூறி கொண்டு இருக்கும்போதே இடை மரித்த ஈஸ்வரி, "பரவால்ல பா, உனக்கு வேல கிடைச்சதும் பொறுமையா தா பா. பொதுவா அப்பா யாருக்கும் சிபாரிசு செய்ய மாட்டார், அவரே உங்களுக்காக என் கிட்ட வந்து பேசி இருக்காருன்னா கண்டிப்பா அதுக்கு பின்னாடி ஒரு நல்லது இருக்கும் உன்னால முடியும் போது குடு ", என்றார் .

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்தவன், 

"இல்ல மா... இந்தாங்க இதுல பதினஞ்சு ஆயிரம் ரூபா இருக்கு இத நீங்க கண்டிப்பா வாங்கிக்கணும் இல்லனா எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்", என்று கூறியவன் அந்த பணத்தை குருமூர்த்தி தாத்தா கையில் குடுத்தான்.

"எங்களுக்கு நல்லது செஞ்ச உங்க கையால இந்த பணத்தை அவங்க கிட்ட குடுத்தீங்கனா நாங்க ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவோம்", என்றான்.

தமிழும் அதை தான் விரும்பினாள்.

அவர்கள் செயலில் மகிழ்ச்சியுற்றவர், கடவுளை வேண்டி கொண்டு அதை ஈஸ்வரியிடம் குடுத்தார்.

அதை பெற்று கொண்ட ஈஸ்வரி, என்ன உதவி வேணும் நாளும் என்ன கேளுமா என்று தமிழை பார்த்து கூறினார். இளையவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி, "அவங்க கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும் நாம கீழ போலாம் வாங்க பா, வாங்க மா", என்று பெரியவர்களை அழைத்து கொண்டு கீழே சென்றார் ஈஸ்வரி. 

அனைவரும் கீழே சென்றதும், அன்பு சென்று கதவை தாளிட்டு வந்தான்.

"தமிழ்..."

"ம்..."

"நீ போய் குளிச்சி பிரெஷ் ஆகிட்டு வா நாம கடைக்கு போய்ட்டு வரலாம்", என்றான்.

"சரி மாமா", என்று கூறி தலை அசைத்தவள் தன் உடைமைகளை எடுத்து கொண்டு குளியலறைக்கு சென்றாள்.

குளியலறைக்குள் சென்றவள் மனதில் இனம் புரியா பயம் வந்தது. திருமணத்திற்கு பின் மாமானுடன் நான் கழிக்கும் முதல் தனிமையான நேரம், மாமனை எப்படி நேராக பார்ப்பது?, என்று வெட்கத்தோடும், பல ஆயிரம் கேள்விகளோடும் குளித்து முடித்து வெளியே வந்தவள் உடை மாற்றி கொண்டு படுக்கையறை கதவை திறக்க எத்தனிக்க அதே நேரம் அன்பு அக்கதவை திறக்க தடுமாறி கீழே விழ போன தமிழை தாங்கி பிடித்தான். அவள் கேசத்தில் இருந்து சொட்டு சொட்டாக அவனது தோலில் தண்ணீர் சொட்ட தன்னை மறந்து அவளை ரசித்து கொண்டுஇருந்தான்.  

இனி இரவே இல்லை கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை

இனி பிரிவே இல்லை அன்பே உன் உளறலும் எனக்கு இசை    

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1228}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.