(Reading time: 16 - 32 minutes)

“எல்லாரும் எல்லாத்தையும் சொல்லிட்டா இருக்காங்க..ஏதோ ஒரு நாள் அங்க இருக்கணும்னு தோணிச்சு அதை ஏன் ரெண்டு பேரும் இவ்ளோ பெரிய பிரச்சனை ஆக்குறீங்க..”,பட்டென பொரிந்து தள்ளினாள்.

சிந்தாம்மா ஒரு நொடி அதிர்ந்துவிட்டார்.என்னவாயிற்று தான் ஒன்றும் அத்தனை தவறாய் பேசியிருக்கவில்லையே..அது மட்டுமில்லாமல் இது வெண்பாவின் இயல்பு இல்லையே இப்படி அவள் எடுத்தெறிந்து பேசி அவர் அறிந்ததேயில்லை.

அவர் பதில் கூறும் முன் அவரை கடந்து தனதறைக்குச் சென்றிருந்தாள்.அங்கு திவா வேலைக்குத் தயாராகிக் கொண்டிருக்க கண்ணாடி வழியே அவளைப் பார்த்தவன் இரண்டே எட்டில் அவளை நெருங்கினான்.

“கண்ணம்மா எப்படிடா இருக்க?இரண்டு நாள் இருந்துட்டு வரேன்னு சொன்னியே?”

“சொன்னேன் இப்போ வரணும்னு தோணிச்சு வந்துட்டேன்..வரலாமா கூடாதா..”

“என்ன கேள்வி இது..இது உன் வீடு..சரி விடு உன் மனசை ஏதோ ஒரு விஷயம் போட்டு அழுத்து அதை என்னனு சொல்லு..”

என நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.அவன் கேட்ட நொடி விழிகளுக்குள் ஆழ்ந்து நோக்கியவளின் பார்வையை எந்த தயக்கமும் இன்றி எதிர் நோக்கினான்.அந்த பார்வையின் நேர்மை கொடுத்த தைரியத்தில் பட்டென கேட்டாள்.

“நேத்து மதியானம் ஒரு மணிக்கு எங்க இருந்தீங்க?”

“ம்ம் லஞ்ச்க்காக ஒரு ஹோட்டலுக்கு போயிருந்தேன்..”

“உங்க காலேஜ் பக்கத்துலயேவா?”

“இல்ல ப்ரெண்ட் ஒருத்தர் வரேன்னு சொன்னதால ஒரு ட்ரைவின் ஹோட்டல்க்கு போய்ருந்தேன்..ஏன் கண்ணம்மா யாரு என்ன சொன்னாங்க?”

அவன் ஹோட்டலில் இருந்ததை ஒத்துக் கொண்டது சற்று நிம்மதியை கொடுத்திருந்தாலும் அடுத்த நொடி அவன் ஆண் நண்பர் என்று கூறியது எரிச்சலை அதிகப்படுத்தியது.

“யாரும் ஒண்ணும் சொல்லல..இல்ல அப்படி சொல்ற அளவு எதாவது இருக்கா எனக்கு தெரியாம?”

இப்படியான கேள்வியை எதிர்பாராதவனாய் ஒரு நொடி தயங்கியவன்,”இல்ல அப்படியெல்லாம் எதுவுமில்ல..ஜஸ்ட் கேட்டேன்..”,எனும்போதே அலைப்பேசி அழைப்பு வந்தது.

அதை கட் செய்தவாறே,”சாரி கண்ணம்மா அவசர வேலை..இன்னைக்கு காலேஜ் கிடையாது ஹாஸ்பிட்டல் தான் போறேன் ஈவ்னிங் சீக்கிரம் வந்துட்றேன்.நீ எதையும் போட்டு குழப்பிக்காத சரியா..பை..”

என்றவன் பதிலுக்கு காத்திராமல் கிளம்பியிருந்தான்.அவன் பேசிய எதுவும் அவள் காதில் விழுந்திருக்கவில்லை.ப்ரைவேட் நம்பர் என்று வந்த அந்த அழைப்பும் அதை அவன் தன் முன் பேசாமல் கட் செய்ததுமே மூளைக்குள் சுற்றி வந்தது.

அதன்பின் அறையை விட்டு வெளியே வராமல் ஏதோ மூலையை வெறித்தவாறே அமர்ந்திருந்தாள்.காலையில் அவள் அப்படி பேசிச் சென்றது வேறு சிந்தாம்மாவிற்கு அவளிடம் பேசுவதற்கு தயக்கத்தை கொடுத்திருந்தது.

இருந்தும் வெகு நேரமாய் ஒன்றும் உண்ணாமல் இருக்கிறாளே என அவள் அறைக்குள் நுழைந்து,”பாப்பா எதாவது சாப்டுறியா?கொண்டு வரவா?”

“கொஞ்ச நேரம் தனியா விட மாட்டீங்களா?கதவை தட்டிட்டு வர மாட்டீங்களா?இல்ல உங்க அருமை புள்ள என்னை வேவு பார்க்க சொன்னாரா?எனக்கு எப்போ தோணுதோ நா சாப்டுப்பேன்..நீங்க ஒண்ணும் அக்கறை பட வேணாம்..கொஞ்ச நேரம் என் கண் முன்னாடி வராதீங்க..ப்ளீஸ்”

திவாவின் மேல் காட்ட வேண்டிய காட்ட முடியாத அத்தனை கோபமும் சிந்தாம்மாவிடம் திரும்பியது.இருந்த மன உளைச்லில் வார்த்தைகள் தடித்து விழுந்தது.சிந்தாம்மாவிற்கு ஒரு நொடி கண்கள் கலங்கிவிட்டிருந்தது.

அதை மறைத்தவராய் அங்கிருந்து நகர்ந்தவர் சமையலறைக்குள் சென்று கண்ணீர் வடித்தார்.சில நொடிகளில் தன் பின் அரவம் கேட்க அங்கு வெண்பா நின்றிருந்தாள்.

“வெளியே போறேன்..எப்போ வருவேன்னு தெரியாது..வரேன்..”,என்றவள் விறுவிறுவென வெளியே சென்றுவிட்டாள்.வழக்கம்போல் நிம்மதியை தேடி கடற்கரையை அடைந்தவள் அத்தனை வெயிலையும் பொருட்படுத்தாமல் அமர்ந்திருக்க அவள் கைப்பேசி அலறி அவள் நினைவுகளை கலைத்தது.

சுலோச்சனா தான் அழைத்திருந்தார்.ஐயோவென்று இருந்தது வெண்பாவிற்கு.இருந்தும் அழைப்பை ஏற்று காதில் வைத்த நொடி மூச்சுவிடாமல் பேச ஆரம்பித்திருந்தார்.

“எங்க இருக்க வெண்பா நீ..என்ன நடக்குதுனு நியூஸை பார்த்தியா இல்லையா..உன் புருஷன் இப்படி ஒரு கேவலமான ஆளா இருப்பாருனு நினைக்கவே இல்ல.அவனுக்கு எல்லாம் என்ன மரியாதை..இப்படி ஒரு அசிங்கத்தை பண்ணிருக்கான்.”

“ம்மா இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின நா மனுஷியாவே இருக்க மாட்டேன்..என்ன பேச்சு பேசுற என்னாச்சு?”

“இன்னும் என்ன ஆகணும்..அந்த காலேஜ் தான் இன்னைக்கு தமிழ்நாடு மொத்தமும் ஹெட்லைன்ஸ்ல போய்ட்டு இருக்கு..பொண்ணுங்களை அந்த காலேஜ் ப்ரொபசர் அண்ட் வார்டனே தப்பான வழிக்கு கூப்டதா ஆதாரத்தோட ப்ரூவ் பண்ணிருகாங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.