(Reading time: 16 - 32 minutes)

நேத்து அந்த பிரின்சிபல் சொன்னதையும் இதையும் சேர்த்தா நினைக்கவே கூசுது..”

“ம்மா..வாயை மூடு..உன் லிமிட்டை ரொம்பவே க்ராஸ் பண்ற..என்ன தைரியத்துல இந்த மாதிரியெல்லாம் பேசிட்டு இருக்க..என்னை பெத்தத தவிர எனக்காக நீ எதுவும் பண்ணல மா அதான் உண்மை..அதனால அம்மானு உரிமை காட்றேன் அது இதுனு தேவையில்லாத உரிமையை நீ எடுத்துக்காத..இதுக்கு மேல பேசினா மரியாதை இல்லாம எதாவது பேசிருவேனோனு பயமா இருக்கு..

தயவுசெஞ்சு போனை வச்சுரு..முடிஞ்சா இன்னைக்கே ஊருக்கும் கிளம்பிடு..என்னை கொஞ்சம் தனியா விடு..எல்லாருமா சேர்ந்து என்னை நோகடிக்காதீங்க..”,போனை வைத்தவள் இருக்கும் இடம் கூட மறந்து அழுது தீர்த்தாள்.

திவா அன்று ஹோட்டலில் போனில் கூறியது வேறு தேவையில்லாமல் நினைவிற்கு வந்தது.”என்ன ஆனாலும் என் பேர் வெளில வரக்கூடாது..”

வேகமாய் கண்ணீரை துடைத்தவள் யூடீயூபில் செய்திகளைப் பார்க்க அந்த கல்லூரி செய்தி தான் ஓடிக் கொண்டிருந்தது.ஏதோ ஒரு பெண்ணை முகத்தை மறைத்தவாறு போலீஸ் வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஆத்திரத்தை மட்டுப் படுத்தியவள் திவாவிற்கு அழைக்க மொபைல் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.அவன் மருத்துவமனைக்கு அழைத்து அவனுக்கு இணைக்கச் சொல்ல அவன் இன்று டியூட்டிக்கே வரவில்லை என்று கூறினர்.

வருத்தம் பயம் அனைத்தையும் தாண்டி ஒருவித ஆத்திரம் புத்தியை ஆட்டிப் படைக்க கோபமாய் வீட்டை அடைந்தவள் தனதறைக்குள் சென்று கதவை அறைந்து சாத்தினாள்.

சிந்தாம்மாவிற்கு அவளை நெருங்கவே பயமாய் இருந்தது.எதற்கு இத்தனை கோபம் என்று அவருக்கு துளியும் புரிபடவில்லை.அவரும் திவ்யாந்திற்கு அழைத்துப் பார்க்க சுவிட்ச் ஆப் என்று தான் வந்தது.

மாலை ஏழு மணியளவில் திவ்யாந்த் வீட்டை அடைய வாசல் கதவு திறந்தே இருந்தது.ஒருவித அமைதி ஆட்கொண்டிருந்தது.கதவை அவன் பூட்டிய சத்தத்தில் சிந்தாம்மா வேகமாய் தனதறையில் இருந்து வந்து எட்டிப் பார்த்தார்.

“தம்பி..நம்ம பாப்பா..”,என்று அவர் முடிப்பதற்குள் ஹாலிற்கு வந்தவள்,

“ஒரு குற்றப்பத்திரிக்கையும் வாசிக்க அவசியம் இல்ல..நானே வந்துட்டேன்..”

“கண்ணம்மா என்ன பேச்சு இது..”,குரல் சற்றே உயர்ந்திருந்தது திவ்யாந்திற்கு.

“நா ஒழுங்கா பேசுறதும் பேசாததும் நீங்க கொடுக்குற பதில்ல தான் இருக்கு..நா உங்ககிட்ட பேசணும்..”

சிந்தாம்மா பிரச்சனையின் தீவிரம் உணர்ந்தவராய் உள்ளே செல்ல எத்தனிக்க திவ்யாந்த் அவரை தடுத்தான்.

“உங்ககிட்ட மறைக்குற அளவு ஒண்ணும் இல்லம்மா நீங்க இங்கேயே இருங்க..”

“ம்ம் ஆமா ஆமா எதையும் மறைக்கவே மாட்டாரு..”

பதிலுக்கு பதில் குதற்கமாகவே பேசியவளை பார்த்து நொந்து கொண்டிருந்தான்.

“என்ன கேக்கணுமோ நேரா கேளு டா..”

“இரண்டு நாள் முன்னாடி நா உங்களுக்கு கால் பண்ணப்போ ஏன் அட்டெண்ட் பண்ணல..”

“அதான் சொன்னனே மீட்டிங்..”

“போதும் திவா..ஒரே பொய்யை அகெயின் அண்ட் அகெயின் சொல்லி உண்மையாக்காதீங்க..மீட்டிங் காலேஜ்ல ஒதுக்குப்புறமா தான் நடக்குமா..அதுவும் ஒரு பொண்ணோட..”

சிந்தாம்மா அப்பட்ட அதிர்ச்சியோடு முழித்து நிற்க திவாவிற்கோ மரணவலி வந்திருந்தது.

“யாரு சொன்னா?”

“யாரும் சொல்லி நா நம்புற அளவு பச்சை குழந்தையில்லை..என் கண்ணால பார்த்ததான் கேக்குறேன்..”

“சந்தேகப்படுறியா கண்ணம்மா..”,குரலில் அப்படியாய் ஒரு உணர்ச்சிக் கலவை..

“நீங்க தான் பட வைக்குறீங்க..உங்க மேல தப்பு இல்லைனா உண்மையை சொல்ல வேண்டியதுதான..பொண்டாட்டிகிட்டேயே மறைக்குற அளவு அப்படியென்ன ரகசியம்?”

“ரகசியம் தான் ஆனா என்னோடது இல்ல.என்னப்பத்தி மறைக்குற அளவு எந்த விஷயமும் உன்கிட்ட கிடையாது.இது அடுத்தவங்களோடது அப்போ அந்த ரகசியத்தை காப்பாத்தி தான் ஆகணும்..”

“ம்ம் உங்களுக்கா பேச கத்துக் கொடுக்கணும்?சரி நேத்து ஹோட்டல்ல யாரை மீட் பண்ண போயிருந்தீங்க?”

“இதுக்கும் பதில் தெரிஞ்சே தான் கேக்குறியா..நேரடியா என்கிட்ட நேத்தே கேட்டுருக்கலாமே..”

“ம்ம் கேட்டுட்டா மட்டும் உண்மையா சொல்லிருப்பீங்க..வழக்கம் போல எதாவது ஒரு பொய் ஹான்..காலையிலே சொன்னீங்களே ப்ரெண்ட் ஒருத்தர் வந்தார்னு”,என அந்த ஒருத்தரில் அழுத்தம் கொடுத்து கூறினாள்.

திவா அப்படியே சோபாவில் அமர்ந்துவிட்டான்.வெண்பாவிற்கோ இரண்டு நாளின் ஏமாற்றங்கள் சுலோச்சனாவின் பேச்சுகள் என அனைத்துமாய் வெறிபிடித்தவளாய் மாற்றி இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.