(Reading time: 10 - 19 minutes)

“தென் . .”

“சிலர் நோய் தீர்க்க . . .பலர் நோய் தீர”

ஆகாஷ் பதில் சொல்லாமல் அவனையே உற்று நோக்கினான்.

“சிலர் மூலிகை மருத்துவம் படிக்கிறாங்க . . பலர் அவங்க நோய் குணமாக வராங்க”

“ஹாஸ்பிடல் இருக்கா என்ன?” என சுற்றும் முற்றும் பார்த்தான்.

“இல்ல . .”

பல கேள்விகள் ஆகாஷ் மனதில் போட்டா போட்டி போட

அதற்குள் மாணவன் நேரமாகிவிட்டதை உணர்ந்து “சரி நான் வரேன்” என சென்றும்விட்டான். நாலு முழவேட்டி மேலே துண்டு என்ற சிம்பிள் காஸ்ட்யூமில் காலில் செருப்பு கூட இல்லாமல் துரிதமாக நடந்து சுவாமிஜி கூட்டத்தை அடைந்தான்.

ஆகாஷ் ஆசிரமத்தின் தலைமை சுவாமிஜி என்று சாரு மூலம் அறிந்திருந்தான். ஆனால் அந்த மனிதர்தான் இவர். அவரை இத்தனை எளிதில் கண்டு பேசிவிட முடியும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.

ஆசிரமத்தின் உள்ளே எல்லாம் சாதாரணமாக இருப்பதாகவே தோன்றியது. தெளிந்த நீரோடை போல் இருந்தது காட்சி. இங்கு உள்ளவர்கள் நல்லவர்களா? இல்லை நல்லவர்களாக நடிப்பவர்களா? யார் எதிரி . . இல்லை எதிரியே இல்லையா? குழப்பமாக இருந்தது ஆகாஷிறக்கு. ஆனாலும் ஒருவித நெருடலும் இருந்தது.

சாருவும் அவள் தந்தையும் சுவாதியுடன் சிறு குடில் போல் இருந்த இடத்திற்கு வந்து அமர்ந்தனர். சுவாதியை அடையாளம் கண்டு கொண்டான். அங்கே நின்று நேரத்தை கழிப்பது வீண் என சுவாமிஜியை தொடர்ந்தான்.

சுவாமிஜி சீடர்களுடன் சதுரகிரி மலையின் அடிவாரத்தில் கானகம் போன்ற இடத்திற்க்குச் சென்றார். அங்கு குறிப்பிட்ட செடி அருகில் சென்றவர் “ இங்க இருக்கிறது எல்லாமே பொக்கிஷம். இதெல்லாம் சாதாரண செடி கொடி இல்ல. மூலிகை எடுக்க உரிய நேரம் காலம் நாள் இருக்கு . . மூலிகையை சுற்றி உள்ள இடத்தை கோமியம் அல்லது மஞ்சள் நீரால முதல்ல சுத்தம் செய்யணும். ” என அவர் பேச தொடங்கியதும். மாணவர்கள் கையை கட்டி பவ்யமாக கவனித்தனர். ஒரு சில மாணவர்கள் புதியவர்கள் என்பதை ஆகாஷ் புரிந்துக் கொண்டான்.

சீடன் ஒருவன் வைத்திருந்த தட்டில்  தேங்காய், பழம், ஊதுபத்தி வெற்றிலை பாக்கு, சூடம், சாம்பிராணி இவைகள் இருந்தது.

சுவாமிஜி ஒரு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பின் விக்னம் நீக்கும் வினாயகரை மனமாற துதித்தார்.

“எந்த காரியத்திற்காக மூலிகை எடுக்கிறோமோ அதற்குறிய திசை பார்த்து அமர்ந்து கன்னி நூல் [மஞ்சள் நிற நூல்] காப்புகட்டி தேங்காய் உடைத்து சாம்பிராணி தூபம் தீபம் காட்டி . . . நைவேத்யம்  வைத்து மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாஸய நாஸய சித்தர் சாபம் நாஸய நாஸய, தேவ முனி அசுர முனி சாபம் நாஸய நாஸய ஹூம் பட் ஸ்வாஹா- என 108 உரு சொல்லியும், மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் சிங்வங்சிவயநம சங்வங் சரஹணபவ - என்று ஒரு முறை சொல்லி பின் இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்களும், நகங்கள் பத்தும் படாமலும் இலையை எடுக்கணும்..” எனச் சொல்லி முடித்தார்.

பின்பு சொன்னவற்றை செய்துக் காட்ட தொடங்கினார். அதற்குள் ஆகாஷ் செல்போன் சிணுங்க அதில் சாரு பெயர் மின்னியது.

“ம்ம் சொல்லுடா” என்றான்

“எங்க இருக்க ஆகாஷ்?”

“இங்க பக்கம்தான் . . நீங்க ரெண்டு பேரும் ஸ்ரீவில்லிபுத்துர் கிளம்புங்க” சுவாமிஜியை செயல்களில் கவனம் செலுத்தியபடி பேசினான்.

“நீயும் வந்துடு . . போயிடலாம்” என்றாள்

“இல்ல எனக்கு வேல இருக்கு நீங்க கிளம்புங்க”

“இனிமே நமக்கு ஒரு வேலையும் இல்ல இங்க” விரக்தியாக பேசினாள்.

“ஏன் டல்லா பேசுற சாரு? என்ன சொன்னாங்க சுவாதி?”

“என்ன சொல்லுவா . . நீ கல்யாணம் பண்ணிகோ . . அம்மா அப்பா பத்திரம் . . நான் இங்கயே இருக்க போறேன்  . . அதே பல்லவிதான்”

“அந்த சுவாமிஜிகிட்டயே விஷயத்த சொல்லி அவரையே சுவாதிக்கு அட்வைஸ் பண்ண சொல்லலாமே. அவர ஈசியா பாத்து பேச முடியுதே”

“சுவாமிஜி சுவாதிகிட்ட நிறைய தடவ சொல்லிட்டாரு . .ஆனா இவதான் கேக்க மாட்டேங்கறா”

“சரி நீங்க ரெண்டு பேரும் போங்க நான் பின்னாடியே வரேன்” என போனை கட் செய்தான் ஒரு முடிவோடு.

காஷ் ஹோட்டலை அடைய மாலை நெருங்கிவிட்டது. சாரு  சென்னை கிளம்ப பேக்கிங் செய்துக் கொண்டிருந்தாள். அவள் அப்பா வெளியே சென்றிருந்தார்.

ஆகாஷ் வந்தமர்ந்து தண்ணீரை குடித்தான். “ஆசிரமத்த பத்தி உன் ஒபினியன் என்ன?” சாருவை கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.