(Reading time: 10 - 19 minutes)

“சந்தேகபடற மாதிரி ஒண்ணுமில்ல. சுவாமிஜி ரொம்ப நல்லவர்” என்றாள் தன் நீண்ட கூந்தலை ஜடை பின்னியவாறு.

அவன் அவளையே பார்த்துக் கொண்டு “ஜடைல மூணு கால் இருக்குல?”  எனக் கேட்க

“இதென்ன சம்பந்தமில்லாத கேள்வி” என்பதைப் போல் அவள் அவனை முறைத்தாள். அருகில் வந்தவன் ஜடையை தொட்டு “ஆனா ஏன் எப்பவும் மூணும் சேர்ந்தா மாதிரி வெளிய தெரியறது இல்ல . . பாக்க ரெண்டு மட்டுமே இருக்கற மாதிரி இருக்கு?” எனக் கேட்க

அவன் சொல்ல வருவதை புரியாமல் அவனையே கண்க கொட்டாமல் பார்த்தாள். “இந்த ஆசிரமத்துல வெளிய தெரியாம எதோ ஒண்ணு கண்ணுக்கு தெரிஞ்சும் தெரியாத மூணாவது கால் மாதிரி இருக்கு” என்றான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

என்ன சொல்வதென்று தெரியாமல் “மே பி” என சொல்லி வைத்தாள். அவள் எந்த உணர்வையும் வெளிக்காட்டவில்லை. அதற்குள் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ஆகாஷ் சாருவிடமிருந்து விலகி அமர்ந்தான். சாரு அப்பா ஹேமன்த் உள்ளே வந்தார்.

ஆகாஷை பார்த்ததும் “நாங்க கிளம்பறோம் தம்பி . . சுவாதி எதையும் கேக்கற மனநிலையில இல்லை”  என வருத்தமாக சாரு அப்பா சொன்னார்.

“அங்கிள் சுவாதி எப்படியும் வீட்டுக்கு வருவா . . அவளோடதான் நான் வருவேன்”

இருவரும் அவனை குழப்பமாக பார்க்க . . அவனோ கூலாக “நான் ஆசரமத்துல ஒரு வாரம் ஸ்டே பண்ண போறேன்” என்றான்

“நோ . . இது சரி வராது” என பதறினார் சாருவின் அப்பா ஹேமன்த்.

சாருவிடம் எந்த பதிலும் இல்லை . . அவள் எந்த உணர்வையும் வெளிக்காட்டவில்லை. ஆகாஷிற்க்கு அது பெரும் வருத்தமாக இருந்தது. அதுவே நேரம் செல்ல செல்ல கோபமாக மாறியது.

“முதல்ல சுவாதியும் இப்படிதான் சொன்னா ஆனா திரும்ப வரவே இல்ல . . வேண்டா தம்பி எங்க தலை எழுத்து இது நாங்க அனுபவிக்கிறோம் . . உங்களுக்கு அழகான குடும்பம் இருக்கு . . நீங்க போங்க . . உங்களுக்கு எதாவது ஆயிட்டா . . ” என முடிக்க முடியாமல் தவித்தவர் கண்கள் கலங்கிவிட்டது.

ஆகாஷ் அவர் கைகளை பிடித்து “ அங்கிள் என்னை அவ்வளோ சீக்கிரம் யாரும் எதுவும் செஞ்சிட முடியாது . . நீங்க தைரியமா கிளம்புங்க” என்றான். சாருவிடம் பேசவில்லை.

அதற்குள் சாருவின் அம்மா போனில் தொடர்பு கொள்ள . . அவரும் ஆகாஷிடம் இதையே சொல்ல . . ஆகாஷ் மென்மையாக மறுத்து தைரியம் சொன்னான்.

சிறிது நேரத்தில் தந்தையும் மகளும் கிளம்பி சென்றனர். சாரு கிளம்பும் முன் “பை ஆகாஷ்” என்ற வார்த்தைகளை மட்டுமே அவள் உதடுகள் உதிர்த்தன. தலை அசைப்பு மட்டுமே அவன் பதிலாக இருந்தது.

ஆகாஷ் நொடிந்து போய் விட்டான். தனக்கு உரிமையானவர் மீது கோபித்துக் கொள்ளக் கூடாதா? தான் சொன்ன வார்த்தைகள் தவறுதான் அதற்கு எத்தனை மன்னிப்பு கேட்டாயிற்று. இன்னமும் அவள் இப்படி நடந்துக் கொள்வது மனதை வெகுவாக பாதித்தது.

அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றால் முழுவதுமாய் அவளிடமிருந்து விலகிக் கொள்ள தன் மனதை தயார் படுத்திக் கொள்ள தொடங்கினான்.

ஆனால் பெண் மனமோ வேறு ஒரு கணக்கை போட்டது. தன் கணக்கு இம்மியளவும் பிசகக் கூடாது என்ற எண்ணம் தோன்றவே இதழ் புன்முறுவலித்தது.

தொடரும் . .

Episode # 14

Episode # 16

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.