(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 36 - தேவி

Kaathalana nesamo

ஷ்யாம் சொன்ன வார்த்தையை நம்ப முடியாமல் பார்த்து இருந்தாள் மித்ரா. காலையில் கோபப்பட்டது கூட அவளுக்குப் பெரிதாகப் படவில்லை. அது அவனின் வழக்கம் இல்லை என்றாலும்  கூட அலுவலகம் கிளம்பும் நேரம் ஏதோ டென்ஷனில் திட்டி விட்டான் என்று தான் எண்ணியிருந்தாள்.

காலைப் பிரச்சினையே சுமித்ராவிற்கு இவள் ஆதரவாகப் பேசியதை வைத்துதானே. அவளையே சமாதனம் செய்து விட்டான். இப்போது அவனுக்குத் தன் மேல் கோபம் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் கூட அவளுக்கு இல்லை.

சற்று நேரம் அசையாமல் இருந்தவள், முதல் கட்ட அதிர்ச்சி மறைந்து, ஷ்யாமிடம் பேச வர, ஷ்யாமோ ஆபீசில் இருந்து வந்தபின், அப்போது தான் நேராக தங்கள் அறைக்கு வந்துருக்கவே, டையையும், கோட்டையும் ஒவ்வொரு பக்கம் கழற்றி வீசி இருந்தான்.

அவன் செல் போன், பர்ஸ் எல்லாம் சோபாவின் மேல் போட்டு இருந்தான். அவன் எங்கே எனப் பார்க்க, ரெஸ்ட் ரூமில் இருந்து தண்ணீர் சத்தம் வரவே, அவனின் பொருட்களை அந்தந்த இடத்தில் எடுத்து வைத்தாள். அவன் வருவதற்காகக் காத்து இருந்தாள். சற்று ரெஸ்ட்லெஸ் ஆக பீல் செய்யவே, தன் வின்னியை நோக்கிச் சென்றாள்.

பாத்ரூமில் இருந்த ஷ்யாமிற்கு இன்னும் கோபம் தீர்ந்த பாடில்லை. கடந்த ஒரு வாரமாக அவன் இருக்கும் மனநிலைக்கு, இன்றைய அவன் அப்பா ராமின் பேச்சு எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றியது போலாகவே , இருந்த கோபத்தை எல்லாம் மித்ராவிடம் காமித்து விட்டான்.

ஆனால் அவள் திகைத்து நிற்கவும், தன்னையே திட்டிக் கொண்டவனாக, நேராக பாத்ரூமிற்குள் சென்று விட்டான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இப்போதும் முழுதாகக் கோபம் குறையாத நிலையில் வெளியே வந்தவன், அவளை பெட்ரூமினுள் காணமல் வெளியில் தேட, மித்ரா வின்னியை வைத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தவனுக்கு, அதைப் பிடித்துத் தூக்கி எறியும் வேகம் வந்தது. அப்படிச் செய்தால் மித்ரா இன்னுமே அரண்டு விடுவாள் என்று எண்ணி, தன் படுக்கைக்குச் சென்று படுத்து விட்டான்.

வின்னியைக் கையில் வைத்துக் கொண்டு யோசனையில் அமர்ந்து இருந்த மித்ரா, அவன் சத்தமே கேட்கவில்லையே என்று எண்ணி தங்கள் அறைக்குள் வர, அவன் கட்டிலில் படுத்து இருப்பதைப் பார்த்து திகைத்தாள்.

அவனை எழுப்பி ஏன் அத்தான் அப்படி சொன்னீங்க? என்று கேட்கவேண்டும் என்ற எண்ணம் எழ, அவன் அருகில் வேகமாகச் சென்றுப் பார்த்தாள்.

அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருப்பதை , அவனின் உடல் அசைவுகள் வெளிப்படுத்தவே , அதைக் கலைக்க மனமில்லாமல், தன் இடத்திற்கு வந்து படுத்தாள்.

எப்போதும் படுத்த உடன் தூங்கிவிடும் பழக்கம் உள்ள மித்ராவிற்கு, அன்றைக்கு உறக்கம் வருவேனா என்று சதி செய்தது.

வெகுநேரம் புரண்டு புரண்டு படுத்துவிட்டுப் பின்பே உறங்க ஆரம்பித்தாள் மித்ரா.

அவள் உறங்கிய அடுத்தக் கணம் விழித்த ஷ்யாம், அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“ஏன் மித்து இப்படிப் பண்ணின? என்னை விட அவன் உனக்கு முக்கியமாப் போயிட்டானா? அவன்கிட்டே மட்டுமில்லாமல், இப்போ எல்லோர்கிட்டேயும் பதில் சொல்ற அளவிற்கு என்னை விட்டுட்டியே. உன்கிட்ட நான் இத எதிர்ப்பார்க்கலை. “ என்று கூறியவன், அவளின் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தான்.

“சாரி டா மா. உன்னை ரொம்ப திட்டிடேன்ல. ஹ்ம்ம். கூடிய சீக்கிரம் அதை சரிப் படுத்திகிட்டு உன்கிட்ட பேசறேன்” என்று அவள் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டான்.

காலையில் மித்ரா எழுந்து கொள்ளும் போது, வழக்கம் போலே ஷ்யாம் இல்லாதிருக்க ஜாகிங் சென்று இருப்பான் என்று எண்ணினாள்.

தன் வேலையை முடித்துக் கொண்டு கீழே வரும்போது மைதிலி, ராம் இருவர் மட்டுமே இருக்க, யோசனையோடு அவர்கள் அருகில் சென்றாள்.

“குட் மார்னிங் அத்தை, மாமா” என்றாள்.

அவர்களும் பதிலுக்கு விஷ் செய்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்,

முதல் நாள் ராம் ஷ்யாமிடம் தனியாகப் பேசிய போதும், அதை மைதிலியிடம் சொல்லி விட்டு இருந்தான். ஷ்யாம் ராமிடம் பேசி விட்டுப் போகும்போதே கோபமாகச் செல்வதை உணர்ந்து இருக்கவே, மித்ராவிடம் மேலும் கோபத்தைக் காட்டி விட்டானோ என்று இருவரும் கவலைப் பட்டார்கள்.

ஆனால் மித்ரா வழக்கம் போல இருக்கவும், காலையிலேயே வேலை இருக்கிறது என்று கிளம்பிய ஷ்யாமின் முகத்திலும் எதையும் அறிய முடியாமல் போகவே, சரி பிரச்சினை எதுவும் இல்லை போல் என்று நினைத்துக் கொண்டார்கள்.

“அத்தை, சுமி எங்கே காணோம்?”

“அவள் தான் இந்த ஒரு வாரம் சீக்கிரம் போகணும்  என்று புலம்பினாளே? அதனால் கிளம்பி விட்டாள்”

“ஒஹ். டிரைவர் வந்துட்டாரா அதற்குள்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.