(Reading time: 18 - 36 minutes)

தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 14 - ஸ்ரீ

Vizhi vazhi uyir kalanthavale

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்

உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்

நீ இல்லை என்றால் என் ஆவேன்

நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

 

நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்

கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்

 

நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்

முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்

 

என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு

என்னை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே …”

சீதாவை எனக்கு இரண்டு மாசம் முன்னாடி தான் தெரியும் நம்ம ஹோம்ல அருணா தெரியும் தான அவளோட ஸ்கூல்ல தான் படிச்சா..வேலூர் பக்கத்துல ஒரு சின்ன கிராமம் அவளோடது.

விவசாய குடும்பம் தான் ஆனா ரொம்ப நல்லா படிப்பா..இங்க ஹாஸ்ட்டல தங்கி தான் +12 வர படிச்சிருக்கா..

அவளோட எய்ம் மெடிசின் தான் சோ கவுன்சிலிங் போய் கவர்மெண்ட் கோட்டால கஷ்டப்பட்டு இந்த காலேஜ்ல சீட் வாங்கிருக்காங்க.

இப்போ செகண்ட் இயர் படிச்சுட்டு இருக்கா..உனக்கே தெரியும் கவர்மெண்ட் காலேஜ் விட ப்ரைவேட்ல வசதியான பசங்க நிறையவே படிப்பாங்க.

அவங்க பழக்கவழக்கம் லைஃப் ஸ்டைல் எல்லாம் ரொம்பவே வித்தியாசமா இருக்கும்.அது மட்டுமில்லாம என்ன தான் ரக்கிங் எல்லாம் இல்லைனு வெளில சொன்னாலும் உள்ளுக்குள்ள அது நடந்துட்டுதான் இருக்கும்.

முதல் வருஷம் ரொம்பவே கஷ்டப்பட்டுருக்கா.வீட்லயும் சொல்ல முடியாம யார்கிட்ட கம்ப்ளைண்ட் பண்றதுனு புரியாம ரொம்பவே..அப்பறம் இரண்டாவது வருஷத்துல ஒரு நாள் தான் அருணாவை தற்செயலா பாத்துருக்கா..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பொதுவான பேச்சுகளுக்கு அப்பறம் அவ காலேஜ் பத்தி அருணா விசாரிச்சுருக்கா சட்டுனு அழ ஆரம்பிச்சுட்டாளாம்.என்னனு விசாரிச்சதுல அவ சொன்னதை கேட்டு அருணாக்கு என்ன பண்றதுனு ஒண்ணும் புரியாம இருந்தப்போ என் நியாபகம் வந்துருக்கு அவளை சமானதப்படுத்தி அனுப்பி வச்சுட்டு ஹோம்ல இருந்து எனக்கு கால் பண்ணா.

“அண்ணா நா அருணா பேசுறேன் ஹோம்ல இருந்து..”

“சொல்லும்மா என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்க எதுவும் பிரச்சனையில்லையே..”

“இல்லனா எனக்கு ஒண்ணுமில்ல என் பிரெண்ட்க்கு தான்…”

“என்னாச்சு தயங்காம சொல்லு..”

“இல்லண்ணா போன்ல வேண்டாம்..நாளைக்கு நீங்க ஹோம்க்கு வரீங்களா நா அவளை வர சொல்லிருக்கேன்.”

“ம்ம் சரி வரேன் மா..”

அடுத்த நாள் காலையிலேயே கிளம்பியவன் முதலில் ஹோமிற்கு சென்றான்.வாசலிலிருந்த புல்வெளியிலேயே அருணா இன்னொரு பெண்ணோடு காத்திருந்தாள்.

“அருணா மா என்னாச்சு நேத்து உன் குரலே சரியில்ல..”

“அண்ணா இவ என் ப்ரெண்ட் சீதா..மெடிசின் செகண்ட் இயர் படிக்கிறா..”

“வணக்கம் ணா..சாரி சார்..”

“அண்ணானே சொல்லு மா..நீயும் எனக்கு அருணா மாதிரி தான்..சரி என்ன விஷயம் சொல்லு..ஸ்டடீஸ்க்கு எதுவும் ஹெல்ப் வேணுமா?”

“அதெல்லாம் இல்ல ணா..இது வேற விஷயம்..”,என்றவள் வெகுவாய் தயங்க திவ்யாந்த் அவளை பேசுமாறு ஊக்கினான்.

“அண்ணா நா படிக்குறது ப்ரைவேட் காலேஜ் ஆனா கவர்மெண்ட் கோட்டா தான்.அதுவும் என் பேட்ஜ்ல நானும் இன்னும் ரெண்டு பசங்களும் தான்.

மோஸ்ட்லி அங்க இருக்குற ஸ்டண்ட்ஸ் எல்லாமே வசதியான வீட்டு பசங்க தான்..சோ எங்களை எல்லாம் கொஞ்சம் மோசமாதான் ட்ரீட் பண்ணுவாங்க ணா..காலேஜ்,ஹாஸ்ட்டல் எல்லா இடத்துலயும் ரேகிங்..”

“ம்ம் புரியுது மா..அது எல்லா இடத்துலயுமே நடக்குற ஒரு விஷயம் தான்.எத்தனை ரூல்ஸ் போட்டாலும் இது நடந்துட்டேதான் இருக்கு..”

“உண்மை தான் அண்ணா..நானும் அப்படி நினைச்சு தான் ரொம்பவே பொறுத்துகிட்டேன்.இதனால படிப்புக்கு எந்த பிரச்சனையும் வராம இருக்கணும்னு கவனமா இருந்தேன்.ஆனா..”

“ஆனா?”

“இப்போ இருக்குற பிரச்சனை அது இல்லனா..எப்படி சொல்றதுனு கூட தெரில உடம்பெல்லாம் கூசுது..ஒருநாள் எங்க ஹாஸ்ட்டல் வார்டன் என்னை கூப்பிட்டு விட்டாங்க நானும் போனேன்.

நல்லாதான் பேச ஆரம்பிச்சாங்க திடீர்னு என்னனென்னவோ சொன்னாங்க.நீ ரொம்ப கஷ்டபடுற பேமிலினு எனக்கு தெரியும்.எவ்ளோ கஷ்டப்பட்டு பீஸ் கட்டுறனும் தெரியும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.