Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

”இந்த பார்வையாலே ஆயிரம் வீரர்களை வீழ்த்தலாமே உனக்கு எதற்கு களறி” என தர்னேந்திரன் சொல்ல அதற்கு

”எனது தேவைக்காக களறி வேண்டும், நான் வருகிறேன்” என சொல்லியவள் அங்கிருந்து மெதுவாக வந்த வழியே திரும்பி நடக்கலானான்.

தர்னேந்திரனோ அவள் பின்னால் 10 அடி இடைவெளியில் மெல்ல நடந்தான்.

அவளோ மரங்களின் மத்தியில் மறையவும் தர்னேந்திரனும் அவளைத் தேடி நடக்க அந்நேரம் அவனது தோள்பட்டையில் ஒரு சிறிய குறுவாள் ஒன்று வந்து தாக்கியது.

”ஆஆ” என சிறியதாக அலறியவன் எங்கே சத்தம் கேட்டு பத்மாவதி திரும்பி வந்துவிடுவாளோ என பயந்து அமைதியானான். சுற்றி முற்றி பார்த்தான். குறுவாள் வந்த திசையில் யாரும் இல்லாமல் போகவே வியந்தவன் தோளில் ஏற்பட்ட காயத்தை கவனித்தான். குத்தப்பட்டிருந்த குறுவாளை சிரமப்பட்டு இன்னொரு கையால் எடுத்தவன் அந்த கைபிடியில் பொறிக்கப்பட்ட சின்னத்தைக் கண்டு அதிர்ந்தான்.

”இது இந்த குறுவாள் அது அவனுடையதாயிற்றே ஆ வலிக்கிறதே” என தன் காயத்தை பார்க்கும் முன் அந்த குறுவாளின் முனையைப் பார்த்தான் ஏதோ ரசாயனம் தடவ பட்டிருப்பதாக உணர்ந்து அதை முகர்ந்து பார்த்து அதிர்ந்தான்

”விஷம் தடவ பட்டிருக்கிறதே” என அவன் நினைப்பதற்குள் மெல்ல அவனுக்கு மயக்கம் வர ஆரம்பித்தது. கண்கள் சொருக வெட்டப்பட்ட மரம் சாய்வது போல அவனும் கடற்கரை மணலில் சாய்ந்தான்.

அவனது உடலில் மெல்ல மெல்ல அந்த விஷம் ஏறிக் கொண்டிருந்தது.

அவனோ

”காப்பாற்றுங்கள் யாராவது இருக்கிறீர்களா என்னைக் காப்பாற்றுங்கள்” என ஈனஸ்வரத்தில் முனகினான் தர்னேந்திரன்

”காப்பாற்றுங்கள் என்னை காப்பாற்றுங்கள்” என சத்தமாக முனகினான் ஈஸ்வரன் அந்நேரம் நிரஞ்சன் கேட்ட காபியை கொண்டு சென்றவள் சத்தம் கேட்டு ஈஸ்வரனின் அறைக்குள் நுழைந்தாள் மீனாட்சி. மெத்தையில் படுத்துக் கொண்டு பிதற்றிக் கொண்டிருந்த ஈஸ்வரனைக்கண்ட மீனாவோ அதிர்ந்தாள்

”மிஸ்டர் ஈஸ்வரன் என்னாச்சி உங்களுக்கு” என பதட்டமாக அவனது தோளை உலுக்க அவனோ

”காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என உளற அவளோ பயந்து போய் நிரஞ்சனை தேடிச் சென்றாள்.

நிரஞ்சனது அறையில் அவனோ தனது துணிகளையும் பொருட்களையும் பீரோவில் அடுக்கிக் கொண்டிருந்த நேரம் பதட்டமாக உள்ளே வந்த மீனாவைக்கண்டு

”மீனுக்குட்டி என்னாச்சி ஏன் இப்படி ஓடிவர்ற”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”உங்க அண்ணாவுக்கு என்னவோ ஆயிடுச்சி தூக்கத்தில உளறாரு காப்பாத்துங்கன்னு சொல்றாரு போய் பாருங்க” என சொல்ல நிரஞ்சனோ உடனே புரிந்துக் கொண்டான்

”ஆஹா அண்ணாவுக்கு கனவு வந்துடுச்சி போல இருக்கே” என நினைத்துக் கொண்டே எதிரில் இருந்த மீனாவிடம்

”அது ஒண்ணுமில்லை மீனா அண்ணாவுக்கு கனவு வந்து இருக்கும் அதான் நீ காபியை கொடு நான் போய் அண்ணாவை பார்க்கறேன் நீ போம்மா” என சொல்ல அவளும் காபியை தர அதை வாங்கிக் கொண்டு நேராக ஈஸ்வரனது அறைக்கு சென்றான் நிரஞ்சன் வாசலில் நின்றிருந்த மீனாவைக்கண்ட நிரஞ்சனோ

”நீ போ மீனு” என சொல்ல அவளும் சந்தேகத்துடனே அங்கிருந்து சென்றுவிட நிரஞ்சன் அவசரமாக கதவை சாத்திவிட்டு ஈஸ்வரனிடம் சென்றான். இன்னும் அவன் பிதற்றிக் கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ந்தவன்

”அண்ணா என்னாச்சிண்ணா அண்ணா” என தோளை உலுக்கவே அதிர்ச்சியுடன் கண்கள் விழித்து சடாரென எழுந்த ஈஸ்வரன் நிரஞ்சனைக் கண்டதும் அவனை இழுத்து அணைத்துக் கொண்டான்

”காப்பாத்து நிரஞ்சா என்னை காப்பாத்து”

“அண்ணா என்னாச்சிண்ணா”

“என்னை கத்தியால குத்திட்டாங்க விஷக்கத்தியால குத்திட்டாங்க”

“அண்ணா உளறாதீங்கண்ணா” என சொல்லியபடியே அவனை விலக்கி விட்டு

”எங்க காயத்தை காட்டுங்கண்ணா” என கேட்க அவனும் தனது தோளை காட்ட அங்கு எதுவும் இல்லாமல போகவே

”இங்கதான்” என்றான் பதட்டத்துடன் ஈஸ்வரன்

”அண்ணா உங்களுக்கு கனவு வந்திருக்கு இங்க எந்த காயமும் இல்லை நீங்களே பாருங்க நாம தஞ்சையில இருக்கோம்”

என சொல்ல ஈஸ்வரன் தனது தோளை பார்த்துவிட்டு நொந்த படியே இரு கையாலும் தன் தலையை அழுந்த பிடித்துக் கொண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பலானான்

”நல்லவேளை நீங்க கனவு கண்டு உளறினது மீனா பார்த்தா இதே வேற யாராவது பார்த்திருந்தா அவ்ளோதான் உங்களை தப்பா நினைச்சிருப்பாங்கண்ணா” என சொல்ல இயல்பு நிலைக்கு திரும்பியவன் மீனா என்றதும் அதிர்ந்தான்

”அடச்சே அந்த மீனாவே என்னை கேவலமா நினைக்கறா இதுல இப்ப நான் உளறினதுக்கு என்னை பைத்தியக்காரன்னு நினைச்சிருப்பாளே அவளை யாரு உள்ள வரசொன்னது மேனர்ஸ் இல்லாத பொண்ணு அவளை என்ன செய்றேன் பாரு” என கோபத்தில் கத்த நிரஞ்சனோ மீனாவை காப்பாற்ற எண்ணி

”அண்ணா கதவு மூடிதான் இருந்திச்சி நீ உளறினது வெளிய வரைக்கும் கேட்டதால என்கிட்ட வந்து சொல்லிட்டு இதோ காபி கூட கொடுத்துட்டுப் போனா இந்தாண்ணா காபி குடிங்க எல்லாம் சரியாயிடும்” என சொல்லி காபி தர அதை வாங்கி மெதுவாக பருகி முடித்தான் ஈஸ்வரன்

”சரி இப்ப சொல்ணா என்ன கனவு வந்துச்சி” என நிரஞ்சன் ஆர்வமாக கேட்டதும் ஈஸ்வரனும் பயத்துடனும் பதட்டத்துடனும் தான் கண்ட கனவை விளக்கமாக சொல்லலானான்.             

Episode # 04

Episode # 06

தொடரும்...

Go to Kaanum idamellam neeye story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Sasirekha

Sasirekha

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகாsaaru 2018-12-14 06:11
Nice update...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகாAdharvJo 2018-12-13 13:18
:eek: ivaru ena kanavu kandute irukaru sasi ma'am :D Anyway kadhai kula varum kadhai thrilling+suspense filled aga irukku but ippadi bits and pieces aga varadhala sariya relate pana mudiyalai main story oda idhu thaan highlight aga irukku madam ji :clap: :clap: super drive!
Iswar and Meena naduvil varum fight nala thaan pogudhu :dance: sema nose cut vanguraru...Baby bro meena unga thangachi not anandhi oda thangachi mind it mind it :D :lol: vazhidhu konjam thodachikonga…..adutha indha scene sinnappa ena panuporarun therindhu kola waiting. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகாmahinagaraj 2018-12-13 11:15
அட்டகாசமா இருக்கு மேம்....👏👏 :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


sasi's Avatar
sasi replied the topic: #1 03 May 2019 07:49
நன்றி
ராணி's Avatar
ராணி replied the topic: #2 02 May 2019 19:22
சசிரேகா உங்களின் அம்மா போல எண்ணி எழுதுகிறேன். உங்கள் கதை அருமையாக இருந்தது. உங்களின் எல்லா கதைகளையும் படித்திருக்கிறேன். உங்கள் கதை இயல்பாக உள்ளது. படித்ததும் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு எளிய நடையில் வார்த்தைகள் இருக்கிறது. இதை என் வீட்டில் சொல்லவும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் (10 பேர்) உங்கள் கதைகளை விரும்பி படிக்கிறோம் எந்த இடத்திலும் படிக்கும் வரிகளோ வார்த்தைகளோ எங்களை கூச்சப்பட வைப்பதில்லை எந்தவித அலங்கார வார்த்தைகளும் அதிகப்படியாக இல்லை நடுத்தர குடும்பங்களில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறை பேச்சு வழக்கு வசதி வாய்ப்புகள் வீட்டில் புழங்கும் நடைமுறை பழக்க வழக்கங்கள் எளிய வாழ்க்கை முறை என நீங்கள் எழுதும் கதைகளின் எழுத்து நடை என் குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் இப்படியே தொடர்ந்து எழுத எங்கள் அனைவரின் ஆசிர்வாதங்கள் - ராணியும் என் குடும்பத்தினரும்
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 01 May 2019 19:24
தஞ்சையில் உள்ள மீனுவின் பழைய வீட்டில்

ஈஸ்வரன் தர்னேந்திரன் பத்மாவதி முடிவைப் பற்றிய கதையை கூறி நிப்பாட்டவும் சுவாதி தன் அண்ணனிடம்

”அண்ணா ஈஸ்வரன் சொல்றதைப் பார்த்தா ரத்தினங்கள் பரதன்கிட்ட இருக்கும்னு தோணுது”

“அப்ப பரதன் யாரு” என பிரபு கேட்க உடனே நிரஞ்சனோ

”ஓ உங்களுக்கு தெரியாதா நான் சொல்லவா” என கேட்க மற்றவர்களும் சொல்லு என தலையாட்டவும் அவனும் தனக்கு தெரிந்த பரதன் பற்றிய விவரங்களைக் கூறினான்

*****

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-25
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 24 Apr 2019 19:01
தஞ்சையில் உள்ள மீனாட்சியின் வீட்டில்

2 நாள் ஆராய்ச்சியின் முடிவில் ஈஸ்வரனும் நிரஞ்சனும் பெரிய உண்மையை கண்டுபிடித்தார்கள். அதன் படி ஈஸ்வரன் சொல்ல சொல்ல நிரஞ்சன் ஒரு பெரிய சார்ட்போர்டு ரெடி செய்தான். அதில் பல பல கோடுகளை கிளைகளாக வரைந்து முடித்தான்.

முழுவதும் வரைந்த பின் நிரஞ்சன் ஈஸ்வரனிடம் அதைக் காட்டினான்

”அண்ணா சரியா போச்சா பாருங்க” என அந்த சார்ட் போர்டை நீட்ட ஈஸ்வரனும் அதைப் பார்த்தான். அம்புக்குறிகளும் கோடுகளும் பெயர்கள் என பேமிலி ட்ரீ போல வரைந்திருந்தான். அதன்படி

***********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-24
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 17 Apr 2019 20:19
சென்னை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை

ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பிய ஒரு மினிவேன் சென்னையை நோக்கிச் செல்லும் ஹைவே ரோடில் வேகமாக சென்றுக் கொண்டிருக்க அதில் மயங்கிய நிலையில் ஈஸ்வரன் ஒரு சீட்டில் படுத்திருந்தான். அவன் விழுந்துவிடக் கூடாதென கயிறுகளால் அவனை சீட்டோடு கட்டி வைத்திருந்தார்கள் இருவர், அவர்கள் பார்க்கவே நடுத்தர வயது உடையவர்களாக இருந்தார்கள்.

”தூங்கிகிட்டே இருக்கானே எப்பதான் பேசுவான்” என அதில் இருந்த ஒருவர் கோபமாக கத்த அதற்கு மற்றவர்

*********

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-23

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top