Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

”ஆனந்தி ரொம்ப அமைதியா இருக்கா இவளுக்கு அப்படியே ஆப்போசிட்டா அந்த மீனு இருக்காளே 6 மாசம் எப்படி இங்க இருக்கப் போறேனே முதல்ல நிரஞ்சன்கிட்ட மீனுவைப் பத்தி பேசனும்” என நினைத்த உடனே அவசரமாக நிரஞ்சனைத் தேடி அவன் அறைக்கு செல்ல அங்கு நிரஞ்சனோ உண்ட மயக்கத்தில் படுத்த உடன் உறங்கிக் கொண்டிருந்தான்

”ஏசி இல்லாம எப்படி தூங்கறான் ஓ பாவம் டயர்டா இருக்கான் போல சரி தூங்கட்டும் எழுந்ததும் பேசிக்கலாம்” என நினைத்தபடியே தன் அறைக்கு வந்தவன் அந்த அறையில் இருந்த பாத்ரூமில் உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் படுக்கையில் படுத்தான்.

ஏசி இல்லையென்றாலும் பயணக்களைப்பும் அதோடு மாட்டுவண்டியில் வந்த வேதனையும் உடலை பாடாய்படுத்த படுத்த உடன் ஈஸ்வரனுக்கு கொட்டாவியுடன் உறக்கம் வந்தது. அவனும் மெல்ல உறங்கினான்.

நேரம் போனதே தெரியவில்லை மதியம் சாப்பிட்டு முடித்து படுத்தவன் மாலை முடிந்து இரவாகியும் ஜெட்லாக் காரணத்தால் உறங்கிக் கொண்டிருந்தான் அவனை யாரும் தொந்தரவு செய்யவில்லை அந்த இரவு நேரத்தில் அழகான கனவு ஒன்றைக் கண்டான் ஈஸ்வரன்.

”தாங்கள் சொன்னதை என்னால் நிறைவேற்ற இயலாது என்னை மன்னியுங்கள்” என சொல்லியபடியே தர்னேந்திரன் அவசரமாக கடலை நோக்கி நடந்து கடல் அலையில் தன் காலை பதிந்து நின்றான் எதிரில் அப்போதுதான் உதயமாகும் சூரியனைக்கண்டு கண்கள் மூடி கைகூப்பி வணங்கினான். அவனுக்கு பின்னால் வந்து நின்றாள் பத்மாவதி

அவள் அணிந்திருந்த உடைக்கு மேல் போர்த்தியிருந்த மெல்லிய சல்லடை போன்ற துணி கடல் காற்றில் பறந்து துணியின் முனை மெல்ல அங்கு நின்றிருந்த தர்னேந்திரனின் பாதத்தில் பதிந்தது.

மெல்ல காற்று வீச வீச அந்த துணியும் அவனை தழுவியபடியே பாதத்திலிருந்து மேல் நோக்கி சென்றது. கூப்பிய கைக்குள் அந்த துணி வந்து விழவும் சூரிய பகவானை வேண்டிக் கொண்டிருந்தவன் சட்டென கண்கள் திறந்தான் தன் உடல் மீது முழுவதும் சுற்றி இருந்த துணியை கண்டான்.

அதில் இருந்து வெளி வந்த வாசம் அவனை கிறங்கடிக்க அந்த நேரம் காற்று பலமாக வீச அந்த துணியோ அவனது கையை விட்டு இன்னும் மேல் ஏறி அவனது முகத்தை தழுவி மூடியது.

அவனது தலை முதல் பாதம் வரை பத்மாவதியின் துணி முடியிருக்க அவ்வளவு நெருக்கத்தில் அவன் பின் நின்றிருந்தாள். ஒரு அடி பின்னால் திரும்பினாலும் அவள் மேல் மோதிவிடும் அளவு இடைவெளி இதில் அவளது துணி முகத்தில் பட்டதும் புல்லரித்தது தர்னேந்திரனுக்கு என்னவோ அவனை தழுவிக் கொண்டது அந்த துணியல்ல பத்மாவதியே ஆரத்தழுவிக் கொண்டது போல உள்ளுக்குள் நினைத்து உடல் சிலிர்த்தான் தர்னேந்திரன்.

அவளோ அவனது செயலைக்கண்டு வேண்டுமென்றே

”தர்னேந்திரனுக்கு பத்மாவதியின் மீது வெறுப்பு வர காரணம் என்னவோ” என கேட்க பத்மாவதியின் பேச்சால் திடுக்கிட்டு திரும்பினான். அவ்வளவு நெருக்கத்தில் பத்மாவதி இருந்தாள். அவன் முகத்தில் மூடியிருந்த துணியை விலக்காமலே கண் குளிர எதிரில் நின்றவளை பார்த்தான்.

அவளோ சிரித்தபடியே அவன் மீதிருந்த தனது துணியை மெல்ல மெல்ல தன் பக்கம் இழுக்க இழுக்க துணி விலகி அவளை ஏறெட்டுப் பார்த்தான். அவள் முகத்தில் சூரிய ஒளி பட்டு அவள் முகம் பிரகாசித்தாள். என்ன வனப்பு அழகிய வடிவான அங்கங்கள் கவர்ச்சியான கண்கள் கன்னத்து சிவப்பே அவனது பித்தனாக்கியது இதழோ அமுது அவளது கூந்தலோ கருமேகத்தின் சகோதரியாகி காற்றில் அலைபாய்ந்தது அவளது கழுத்து முதல் பாதம் வரை நிறுத்தி நிதானமாக பார்த்து ஒவ்வொன்றுக்கும் உள்ளுக்குள் வர்னித்துக் கொண்டு இவள் போல் அழகி நான் கண்டதும் இல்லை இனி பிறந்தாலும் நான் காண மாட்டேன் என சபதமே ஏற்றுக் கொண்டான் தர்னேந்திரன்.

அவ்வளவு நெருக்கத்தில் பேரழகி பத்மாவதியின் அருகாமையில் பேச்சு மூச்சின்றி நின்றவனை விட்டு சற்று தள்ளி நின்றாள் அவள் விலகுவது கூட பெரும் வலியாக உணர்ந்தான் தர்னேந்திரன். சிரமத்துடனே அவளிடம் தடுமாறி பேசினான்.

”அப்படியல்ல களறி பயிற்சி என்பது ஆடவர்கள் மட்டுமே கற்று செய்யக்கூடிய சண்டை முறையாகும் அது எப்படி தங்களுக்கு நான் பயிற்றுவிப்பது”

”ஏன் பெண் என்றால் இளக்காரமா அவள் இல்லையெனில் தாங்கள் இல்லை என்பதை மறவாதீர்கள்” என சொல்லவும்

”நான் அப்படி சொல்லவில்லை சண்டை முறையை தாங்கள் எதற்காக கற்க வேண்டும்”

“ஏன் கற்க கூடாது”

“தங்களுக்கு அதற்கான அவசியம் என்ன வந்தது”

”வந்ததால் தானே தங்களை தேடி வந்தேன்”

”என்னை விட மாதவன் இந்த பயிற்சியில் சிறந்தவன் அதிலும் தங்களது உறவினன் அவனிடம் சொன்னால் தங்களுக்கு கற்றுத் தருவானே” என கேட்க பத்மாவதியோ இதழை விரித்து சிறிய சிரிப்பை உதிர்த்துவிட்டு

Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகாsaaru 2018-12-14 06:11
Nice update...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகாAdharvJo 2018-12-13 13:18
:eek: ivaru ena kanavu kandute irukaru sasi ma'am :D Anyway kadhai kula varum kadhai thrilling+suspense filled aga irukku but ippadi bits and pieces aga varadhala sariya relate pana mudiyalai main story oda idhu thaan highlight aga irukku madam ji :clap: :clap: super drive!
Iswar and Meena naduvil varum fight nala thaan pogudhu :dance: sema nose cut vanguraru...Baby bro meena unga thangachi not anandhi oda thangachi mind it mind it :D :lol: vazhidhu konjam thodachikonga…..adutha indha scene sinnappa ena panuporarun therindhu kola waiting. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகாmahinagaraj 2018-12-13 11:15
அட்டகாசமா இருக்கு மேம்....👏👏 :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top