(Reading time: 37 - 74 minutes)

மாலதி குறுகுறுவென அவளை பார்க்க கண்டுபிடித்துவிட்டாளோ என்று பயந்து சுவாதி பார்பதற்க்குள் வாசலில் ரம்யாவின் குரல் கேட்க உன் இன்னோரு பாடிகாட் வந்துவிட்டாள் போ என்று கூற அவள் இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டும் வழக்கமாக நான் எங்காவது கூப்பிட்டாள் என்ன பொண்ணு நீ தைரியமாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் பண்ணி என் காதை ஒரு வழி செய்துவிட்டு அம்மாவிடம் எதற்காவது பர்மிசன் வாங்கி தர வேண்டும் என்ற டீலுடன்தான் வருவாய்.

இன்று வாரண்டியராக கேட்கிறாயே ஏதாவது வேலையாக வேண்டுமா என்று கிண்டலாக கேட்க.அவளை பார்த்து முறைத்த சுதி அக்கா பயப்படுவாளே என்று அக்கறையாக கேட்டேன் பார் என்னை சொல்ல வேண்டும் என்று முறுக்கி கொண்டவளை பார்த்தவள்.

சரி சரி சொல்லுமா அம்மாவிடம் எதற்கு பர்மிஷன் கேட்க வேண்டும் என்று கேட்க.

சுவாதி மாலதியை குறும்பாக பார்த்து அது ஒன்னும் இல்ல குட்டிமா எங்க காலேஜ்ல பத்து நாள் டூர் டோடல் தமிழ்நாடு போறாங்க நான் போக வேண்டாம் என்று தான் பார்த்தேன் பிரண்ட்ஸ் எல்லாம் கம்ப்பல் பண்றாங்க.

கடைசி வருஷம் நீ வந்தாதான் நல்ல இருக்கும் என்று.இன்று தான் பெயர் கொடுக்க கடைசி நாள் நைட் சொல்லலாம் என்று பார்த்தேன் நீ தலை வழி என்று சீக்கிரம் படுத்துவிட்டாய்.காலையில் சொல்லிக்கலாம் என்று பார்த்தால் நீ கிளம்பிவிட்டாய் என்றாள்.

சற்று நேரம் யோசித்த மாலதி.

ஓ கே சுதி நீ டூர் போக ஓகே சொல்லிடு நா அம்மாகிட்ட ஈவ்னிங் வந்து பேசறேன் என்றாள்.

சுவாதியை குறும்பாக பார்த்து இன்று நான் காலேஜ் வரமாட்டேன் யாருக்கிட்டயும் வம்புக்கு போக கூடாது என்று கூற.அவளை முறைத்த சுதி

யானை வழுக்கி விழுந்தால் எறும்பு கூட கிண்டல் பண்ணுமாம் அது போல் இருக்கிறது நீ என்னை கிண்டல் செய்வது இருந்தாலும் காலேஜ் போகவும் உனக்கும் கொஞ்சம் பேச வருகிறதே என்று மாலதியை சுவாதி கிண்டல் அடிக்க.

அவளை முறைத்த மாலதி என்னமோ இதற்கு முன் நான் பேசாமல் இருந்தது போலவும் காலேஜ் போன பிறகு பேச ஆரம்பித்தது போலவும் நீ சொல்கிறாய் என்று மாலதி வருந்த.

ம்............உடனே பீல் பண்ண ஆரம்பித்துவிட்டாயா உன்னை நான் கிண்டல் செய்யாமல் வேறு யார் கிண்டல் செய்வார்கள். இதற்கு போய் பீல் செய்யலாமா.உன் பிரண்டு ஒருத்தி வந்தாளே அவள் வந்த சத்தம் தான் கேட்டது அதற்கு பிறகு என்ன ஆனாள். வா போய் பார்க்கலாம் என்று கூறி வெளியில் வந்தவர்கள் பார்த்த காட்சியில் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தார்கள்.

அவர்கள் சிரிப்பதை பார்த்த ரம்யா எதற்காக டி சிரிக்கறீங்க வருகிற அவசரத்தில் வீட்டில் சாப்பிடாமல் வந்துவிட்டேன்.அதன் அம்மா டீயும் இரண்டு பிஸ்கட்டும் கொடுத்தார்கள் வேண்டாம் என்று சொன்னால் அம்மா மனசு கஷ்டபடுமே என்று நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என்று சொன்னவளை பார்த்த சுவாதி

குட்டிமா நல்லா யோசிச்சுக்கோ நீ இந்த சாப்பாட்டு ராமிகூட தான் போக போகிறாயா?பத்து நிமிஷம் வெயிட் பண்ணு நானே கிளம்பி வருகிறேன்.

அம்மா கொண்டு வந்து வைத்த ஒரு பாக்கெட் பிஸ்கட்டில் மீதி இருப்பது இந்த இரண்டுதான்.உன் முடிவை மாற்றி கொள்ளுங்கள் கோபால் மாற்றி கொள்ளுங்கள் என்று சரோஜா தேவி போல் பேசியவளை முதுகில் அடித்த மாலதி அதை நான் பார்த்து கொள்கிறேன்.நீ போய் கிளம்பும் வழியை பார் என்றாள் அதட்டலாக.

ம்... உண்மையை சொன்னால் ஏற்று கொள்ளமாட்டயே நாம் இவ்வளவு பேசறமே உன் தோழி ஏதாவது பேசுகிறாளா பார்.அந்த இரண்டு பிஸ்கட் காலியான பிறகு குதிப்பாள்.வா மாலு லேட்டாகிவிட்டது எப்போதுதான் நீ சீக்கிரம் கிளம்புவாயோ என்று இவளை திருத்தவே முடியாது என்று பேசி கொண்டு இருந்தார்கள்.

ரம்யா டீ குடித்து முடித்தை பார்த்த சுவாதி ஸ்டார்ட் மியூசிக் என்று மாலதிக்கு மட்டும் கேட்கும்படி கூற பின்னே வந்ததில் இருந்து அவளை கிண்டல் செய்து கொண்டு இருப்பது இவளுக்கு தெரிந்தது மாலதியை தனியாக வர சொல்லிவிட்டு சென்று விடுவாளே அந்த பயம்தான்.

மாலதியை பார்த்த ரம்யா ஏன்டீ இப்படி லேட்டாக கிளம்புகிறாய்.நேற்று எத்தனை முறை சொன்னேன் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று சுவாதி கூறியதை அச்சு பிறழாமல் கூறிய தோழியை பார்த்த மாலதிக்கு சிரிப்பை அடக்க முடியாமல் சிரிப்பு வர.

ரம்யா அவளை வினோதமாக பார்த்து நான் உன்னை திட்டி கொண்டு இருக்கிறேன்.நீ என்னவென்றால் சிரிக்கிறாய் லூசா டி நீ வா போகலாம் என்று கூற.அவர்களை தடுத்த சுவாதி,

இங்க பாரு ரம்யா உன்ன நம்பிதான் குட்டிமாவை அனுப்பறேன்.அங்க போனவுடன் நீ பாட்டுக்கு இவளை தனியாக விட்டு விட்டு சாப்பாட்டு ரூம் நோக்கி சென்றாய் என்ற தகவல் வந்தது அடுத்த ஒரு வாரத்துக்கு நீ கொண்டுவரும் டிபன் பாக்ஸ் காணாமல் போய்விடும் ஜாக்கிரதை.

கும்பலாக இருந்தால் அங்கு இவளை தனியாகவிடாதே.கை கழுவ போகும் போதும் நீ கூடவே போ.நம்ம மாலு சொல்லமாட்டாள் என்று அஜாக்கரதையாக இருக்காதே நான் வைத்திருக்கும் ஸ்பை உங்களை பார்த்து எனக்கு நியூஸ் அனுப்பி கொண்டே இருப்பார்கள் என்று மிரட்ட.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.