(Reading time: 37 - 74 minutes)

சரி எப்படி இருந்தாலும் அந்த இன்னொரு விஷயத்தை என்னிடம் சொல்ல வருவாய்தானே அப்போது பார்த்து கொள்கிறேன் என்று அவளும் அதோடு விட்டுவிட்டாள்.

நாட்கள் அதுபோக்கில் நகர சுதி டூர் செல்லும் நாளும் வந்தது.அம்மாவின் சிலபல அட்வைஸ்களுக்கு பிறகும் மாலதியின் பத்திரம் பத்திரம் என்ற ஜெபத்தை கேட்ட பிறகும் பெங்களுருக்கு பஸ் ஏறினாள்.

சுதி வரும்போது சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று மாலதி ஒரு சில விஷயங்களை செய்துவிட்டு.மற்றொரு சந்தோஷமான விஷயம் என்ன என்று சுதியிடம் சொல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று அவளுக்காக காத்திருந்தாள்.

மாலதியின் கெட்ட நேரம் அப்போதுதான் ஆரம்பித்தது.ஆம் அவள் திருமணத்திற்கு சென்ற இடத்தில் அவளை பார்த்த ராம் என்ற உள்ளூரில் இருக்கும் ஒரு பரம்பரை பணக்காரர் அவளை பெண் கேட்டு வர லட்சுமியும்,மாலதியும் பயந்துதான் போனார்கள்.

ஏன் என்றால் உள்ளூரில் அவனுக்கு இல்லாத செல்வாக்கு இல்லை.அவனுக்கு வயது 35க்கு மேல் இருக்கும். அவனின் முதல் மனைவிக்கு ஆண் குழந்தை இல்லை என்ற காரணம் தான் அவனின் இரண்டாவது திருமணத்துக்கு முக்கிய காரணமாம் இது அவனே சொன்னது.

அவன் சொல்வதை கேட்ட லட்சுமிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ,அவன் சட்டையை பிடித்து வீட்டைவிட்டு வெளியே இழுத்து வந்தவள்.

“வெளியே போடா நாயே உன் ஆசைக்கு தலையாட்ட இங்கு யாரும் உன் அடிமை இல்லை”எவ்வளவு தைரியம் இருந்தால் என்னிடம் வந்து இப்படி சொல்வாய்.என் மகள் அந்த கோவிலில் இருக்கும் தெய்வம் போல கலங்கம் இல்லாதவள் அவளுக்கு உன்னை போன்ற ஒரு தருதலைக்கு கட்டி கொடுப்பேன் என்று எப்படி எதிர் பார்க்கிறாய்.

என் மகளை கைகளில் வைத்து தாங்குபவனுக்குதான் நான் மணமுடித்து கொடுப்பேனே ஒழிய உன்னை போன்ற தெருதெருவாக அழையும் நாய்க்கு கொடுக்கமாட்டேன் என்று கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று அறியாமல் பேசிவிட்டார்.அவர் கோபத்தில் பேசியதற்கான தண்டனையை அவர் மகள் அனுபவிக்க போகிறாள் என்பதை அறியாமல்.

லட்சுமி பேசியதை கேட்டு முகம் கருத்து அவரை தீர்க்கமாக பார்த்த ராம்.நீ இப்போது பேசியதற்க்கு நிச்சயம் வருத்தபட வைப்பேன்.இப்போது அமைதியாக போகிறேன் என்று நினைக்காதே.நீ இப்போது மிதித்தது பாம்பின் வாலை அது நிச்சயம் உன்னை கொத்தாமல் விடாது என்று கூறி அவன் பார்த்த பார்வை லட்சுமியின் முதுகெலும்புவரை சில்லிட செய்தது.அது மட்டும் இல்லாமல் அவன் முகம் சொல்வதை செய்வேன் என்பதை போல் இருக்க.என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்தனர் தாயும் மகளும்.

சுவாதிக்கு தொடர்பு கொண்ட போதும் ரோமிங் மற்றும் சிக்னல் பிராப்ளத்தால் அவளிடமும் எதுவும் சொல்ல முடியாமல் தவித்தனர்.

இந்த சூழ்நிலையில்தான் ராம் தனக்கு சாதகமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான்.குடிக்கு ஏற்கனவே அடிமையாய் இருந்த கோவிந்தனுக்கு பாரின் சரக்கு என்று இலவசமாக கொடுத்து அவனை குடிக்க வைத்து முழு நேரமும் போதையில் இருக்கும் படி பார்த்து கொண்டவன்.அவர் போதையில் இருக்கும் போது வெற்று தாளில் கையெழுத்து வாங்கி வைத்து கொண்டான்.

ராம் பொண்ணு கேட்ட விட்டு சென்று நான்கு நாட்கள் ஆன நிலையில் தங்களது வேலைகளை மட்டும் செய்து கொண்டும் வெளியே வராமல் இருந்த தாயும்,மகளும் தன் வீட்டின் முன்பு ஏதோ சளசளப்பு சத்தம் கேட்டு வெளியே வர அங்கு ராம் தான் அடிபட்ட பாம்பாக சீறீக்கொண்டிருந்தான்.

என்ன சொல்கிறான் என்று கேட்ட லட்சுமிக்கும்,மாலதிக்கும் தலையில் யாரோ இடியை இறக்கியது போல் இருந்தது.

அதாவது கோவிந்தன் தன் மகளை மணமுடித்து தருவதாக சொல்லி அவனிடம் இலட்ச கணக்கில் கடன் வங்கிவிட்டு இப்போது பொண்ணு தர முடியாது என்று லட்சுமி சொல்வதாக சொன்னான்.அவனின் செல்வாக்கால் மூன்று நாட்கள் முன் போட்ட கையெழுத்து ஒரு வருடத்திற்கு முன்பு போட்டது போல் தயார் செய்யபட்டு இருந்தது.

பத்தாதற்க்கு கோவிந்தனும் அவனையே திருமணம் செய்து வைத்தாள் மாலதி பெயரில் இருக்கும் சொத்தை தனக்கு மாற்றி கொள்ளலாம்.ஊரில் இவனுக்கு இல்லாத சொத்தா என்று பலவாறு ஆசைகாட்டி கோவிந்தனையும் கைக்குள் போட்டு கொண்டான்.

லட்சுமி என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க,தான் ஏன் அந்த கல்யாணத்துக்கு போனோம் என்று நொந்து கொண்டாள் மாலதி.ராம் மாலதியின் வீட்டிற்க்கு யாரும் போக முடியாதபடி எந்நேரமும் காவலுக்கு ஆளை வைத்தான்.

மாலதியை பார்க்க போன ரம்யாவை மிரட்டினர்.அதனால் அவளின் பெற்றோர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்று ரம்யா அப்பாவின் தங்கை கிராமத்துக்கு அழைத்து சென்று அவரின் தங்கை மகனுடன் திருமணத்தை முடித்து அவளை அங்கேயே விட்டுவிட்டுதான் வந்தனர்.இருந்தாலும் அவர்களும் மாலதியை நினைத்து கவலைபடதான் செய்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.