(Reading time: 37 - 74 minutes)

அலமேலு சொல்வதும் உண்மைதான்.பென்சில் சீவும் போது கையில் ஏற்பட்ட காயத்தையே தாங்க முடியாமல் இருந்தவளின் நினைவு தாக்க மெதுவாக எழுந்து ஐ.சி.யூ நோக்கி சென்றாள்.

அவள் மனதினுள் நாங்கள் யாருக்கு என்ன பாவம் செய்தோம்.எதற்காக எங்களுக்கு இந்த தண்டனை என்று குமுறி கொண்டே மாலதி இருக்கும் பெட்டின் அருகே வந்தாள்.அவளை பார்த்து எப்போதும் சிரிக்கும் சிரிப்பை சிந்த முடியாமல் காயங்கள் அவளை வதைக்க கண்ணீருடன் சற்று நேரம் எதுவும் பேசாமல் சுதியையே பார்த்து கொண்டிருந்த மாலதி நடந்த விஷயங்கள் அனைத்தையும் மெதுவாக சொன்னவள். அவர்களுக்கு சுவாதி தண்டனை வாங்கி தர வேண்டும் என்ற சத்தியத்தை பெற்று கொண்டு மாலதியின் உயிர் பறவை அவளை விட்டு சென்றது.

இதோ மாலதி இறந்து ஆறு மாதம் ஆகிவிட்டது.லட்சுமி லாரியில் அடிபட்டதால் கோமா ஸ்டேஜில் மூன்று மாதம் இருந்து பிறகு தான் கண் விழித்தார்.அப்போதும் அவரால் முன்னை போல் எழுந்து நடமாட முடியாமல்,அவர் வேலையை கூட செய்யமுடியாமல் இருந்தார்.சுவாதிதான் அவரை பார்த்து கொண்டார்.அந்த சமயம் தான் அவர்கள் ஊருக்கு டாக்டராக வந்தான் அர்ஜூன்.

பஸ்ஸைவிட்டு இறங்கிய அர்ஜூன்.அந்த இடத்தை சுற்றி தன் பார்வையை ஓட்டினான்.

ம்.......பரவாயில்லை கடைகோடியில் இருக்கும் ஊர் எப்படி இருக்குமோ என்று நினைத்தேன் நன்றாகதான் இருக்கிறது என்று நினைத்து கொண்டு நடந்தான்.

நேராக ஹாஸ்பிட்டல் சென்று அவர்களிடம் தங்கும் இடத்தைபற்றி விசாரித்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஹாஸ்பிட்டலை தேடி சென்றான்.அங்கிருக்கும் கம்போன்டரிடம் கேட்டு தங்குவதற்கான இடம் விசாரிக்க சொல்ல,கம்போன்டர் ராஜா சொன்ன விலாசத்திற்கு இருவரும் சென்றனர்.

இருவரும் அந்த தெருவில் நுழையும் போது எதிர்பட்டாள் சுவாதி.அவளிடம் பேச வேண்டும் என்று வேகமாக சென்றான் அர்ஜூன்.அவன் சுவாதியை நெருங்குவதற்கு முன்பு ஒரு கார் அவளை உரசினார் போல் வந்து நின்றது.

அர்ஜூன் காருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றான்.காரைவிட்டு இறங்கிய ராம்

 அசிங்கமான இளிப்புடன் சுவதி கண்ணு எங்க போய்ட்டு வர்ர என்று கேட்க சுவாதியோ அவனை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்து எதுவும் சொல்லாமல் குனிந்து கொண்டாள்.

இதுவே பழைய சுவாதியாக இருந்தால்,நான் எங்கு சென்றால் உனக்கு என்ன டா.... உன் வேலையை பார் என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து சென்றிருப்பாள்.ஆனால் இப்போது இருப்பவள்தான் புது சுவாதி ஆயிற்றே மாலதி இறந்த பிறகு பாதி தைரியத்தை இழந்தாள்.அம்மாவின் நிலையை அறிந்து எதுவும் எதிர்த்து சொல்லமுடியாத கோழையானால்.

தன் தந்தையே தன்னுடைய வாழ்வை அழிக்க எண்ணுகிறார் என்ற உண்மை அறிந்து,துடித்தவளிடம் கொஞ்சம் கூட மனசாட்சி என்பது இல்லாமல் அவளது தந்தை ராமுடனான திருமணத்திற்கு சுவாதி சம்மதிக்கவில்லை என்றால் லட்சுமியை கொன்றுவிடுவதாக மிரட்டியதில் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தவள்.அமைதியாக வேறொரு வேலை செய்து வந்தாள்.அது என்ன வேலை என்று இதுவரை யாரும் அறியாமல் பார்த்து கொண்டாள்.

ராம் மறுபடியும் கேட்கவும் தன்னிலை உணர்ந்து அவன் என்ன பேசுகிறான் என்று கவனிக்க ஆரம்பித்தவளின் காதில் விழுந்த வார்த்தை அவளை நெருப்பில் நிற்பது போல் மாற்றியது.

எதற்கு இப்படி வெயிலில் அழைகிறாய் நம்முடைய கார் எதற்கு இருக்கிறது.நீ வெயிலில் அழைந்தாள் என்னால் தாங்கமுடியவில்லை என்று வசனம் பேசி கொண்டிருந்தான்.

ராம் பேசுவதை கேட்டு கொண்டிருந்த அர்ஜூன் யார் இவன்.இப்படி உளறி கொண்டு இருக்கிறான்.ஒரு வேலை இவளுக்கு தெரிந்தவரோ என்று சுவாதியின் முகம் பார்த்தவன் ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

ஏன் என்றாள் சுவாதி முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் அவனை நிமிர்ந்து பார்த்து,எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தவளின் பார்வையில் விழுந்தான் அர்ஜூன்.

சுவாதி அர்ஜூன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.அர்ஜூனோ அப்பாடா..... ஒரு வழியா நம்மை பார்த்துவிட்டாள் என்று நினைக்க,சுவாதியோ யார் இவன் எதற்கு இப்படி பார்த்து கொண்டிருக்கிறான்.இதற்கு முன் இவனை பார்த்ததில்லையே என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

திடீரென,ஏய் யார் நீ என்ற ராமின் அதட்டலில் இருவரும் தன்னை சுதாரித்து கொண்டனர்.

ராமோ நான் இங்கு பேசி கொண்டு இருக்கிறேன் இவள் யாரை பார்க்கிறாள் என்று பார்த்தவனின் கண்ணில் பட்ட அர்ஜூனை பார்த்து கோபம் கொண்டு அந்த கேள்வியை கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.