(Reading time: 37 - 74 minutes)

அர்ஜூனும் இவனிடம் எது கேட்டாலும் பதில் வராது இங்குதானே இருக்கிறோம் பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

அடுத்த நாள் சென்று லட்சுமியை முழுவதுமாக டெஸ்ட் செய்ததில் அவர் ஏதோ ஒரு காரணத்துக்காக அவரது உயிரை காத்து வைத்திருப்பது போல்தான் அர்ஜூனுக்கு தோன்றியது.

ஆக்ஸிடன்டில் அதிக பதிப்படைந்தவரை சாதாரண ட்ரிட்மண்ட் கொடுத்து அவரது உயிரை தற்போது போகாமல் மட்டுமே காத்துள்ளனர்.இதே நிலையில் இவ்வளவு நாட்கள் இருந்ததால் அவர்கள் மேலும் வீக்காகதான் ஆகியிருக்காறார்கள்.இன்னும் மிஞ்சி போனால் ஆறு மாதம் என்ற விவரத்தை சொன்ன போது கேட்டு கொண்டிருந்த சுவாதியின் இதழ்களில் விரக்தி புன்னகை ஒன்று மட்டுமே வெளிப்பட்டது.

தாய்காக அவள் கத்தவில்லை கதறவில்லை அர்ஜூனுக்கு ஆச்சரியமாக இருந்தது.எதுவும் பேசாமல் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினான்.

அன்று இரவு ராம் குடித்துவிட்டு வந்து சுவாதியின் வீட்டின் முன்பு நின்று கொண்டு கண்டபடி கத்தி கொண்டு இருந்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஏய் நான் உன்னை விலக்கி வாங்கிவிட்டேன்.நீ எனக்கு தான். இதை யாராலும் மாற்ற முடியாது இதை அந்த மாலதி தடுத்தாலும் சரி.அவளுக்கு ஒரு முடிவு கட்டி விட்டேன்.இங்க பார் கேரள நம்பூதிரி மந்திரித்து கொடுத்த தாயத்து என்று கத்தி கொண்டு இருந்தான்.சத்தம் கேட்டு வெளியே வந்த அர்ஜூனுக்கு ஆச்சரியம். என்னவென்றால் அவனுடைய இத்தனை கத்தலுக்கும் பதில் இல்லாதது போல சுவாதியின் வீட்டு கதவு மட்டும் இல்லாமல் அந்த தெருவில் அனைவர் வீடும் மூடி இருந்தது.

தன் வீட்டின் உள்ளே வந்து படுத்த அர்ஜூனுக்கு ஒரே குழப்பமாகவும் யார் அந்த மாலதி என்று யோசித்து கொண்டே தூங்கி போனான்.இதோ ஆகிவிட்டது அர்ஜூன் அந்த ஊருக்கு வந்து இரண்டு மாதம் ஓடி விட்டது.இடையில் பலமுறை சுவாதியிடம் பேச முயற்சி செய்து தோல்வி அடைந்தாலும் அவன் முயற்சியை நிறுத்தவில்லை. அவளுடன் பேச வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு அதிகமானதே தவிர குறையவில்லை.

சுவாதிக்கும் அர்ஜூனின் மேல் நல்ல எண்ணம் வர துவங்கி இருந்தது.அதற்கு காரணம் அர்ஜூன் பலமுறை ராமின் அறுவையில் இருந்து காப்பாற்றியதே.

நல்ல எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக சுவாதியினுள் காதலாக மாறிய சமயம் இடி போல் இறங்கியது சுவாதியின் அப்பா சொன்ன செய்தி.ஆம் சுவாதிக்கும் ராமுக்கும் சீக்கிரம் திருமணம் செய்ய வேண்டும் என்று அவர் சொன்னதுதான் அந்த இடி.

கை கூடா காதல் என்னுள் ஏன் வந்தது என்று ஊமையாக அவளால் அழ மட்டுமே முடிந்தது.பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாக இந்த காதலை வெளியில் யாருக்கும் தெரியாமல் தனக்குள்ளே புதைத்து கொள்வது என்ற முடிவு எடுத்து கொண்டாள்.

இப்படியே நாட்கணக்கில் அல்லாமல் மாத கணக்கில் தன்னுள் மொட்டுவிட்ட காதலை தனக்குள்ளே மறைத்துவிட்டதாகதான் நினைத்தாள்.அவளுடையவன் வந்து அவளிடமே சவால் விடும் வரை.

அவர்கள் ஊரில் திருவிழா ஆரம்பித்தது.அன்று அனைவரும் அம்மனுக்கு பூ எடுத்து சென்று அம்மனுக்கு கொடுப்பர்.சுவாதியும் தான் கொண்டு சென்ற பூவை அம்மனுக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்த மர நிழலில் அமர்ந்து கோபுரத்தை பார்த்து அழுது கொண்டிருந்தாள்.

அர்ஜூனும் கோவிலுக்கு வந்த இடத்தில் சுவாதியை பார்த்து அவளிடம் பேசும் ஆவலில் அவள் அருகில் செல்ல,சுவாதி அர்ஜூன் வருவதை பார்த்து எழுந்து செல்ல முற்பட்டாள்.அவளின் செயலை எதிர் பார்த்து வந்தது போல் வேகமாக அவளை நெருங்கிய அர்ஜூன் அவளின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டு

உட்கார்,நான் உன்னுடன் பேச வேண்டும் என்று சொன்னான்.

சுவாதியோ யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் முதலில் கையை விடுங்கள் என்று சீறினாள்.

நான் கையை விட்டாள் நீ ஓடி விடுவாய் எத்தனை முறை இப்படி செய்திருக்கிறாய்.நான் சொல்வதை கவனமாக கேட்டு கொள் யார் வேண்டுமென்றாலும் என்னவேண்டுமானாலும் பேசி கொள்ளட்டும் இந்த அம்மன் சந்நிதியில் வைத்து சொல்கிறேன் நன்றாக கேட்டு கொள் உனக்கு தாலிகட்டி உன் நெற்றியில் பொட்டு வைக்கும் உரிமை எனக்கு மட்டும் தான் உள்ளது.நான் தான் உன் கணவன்.உனக்கும் என்னை பிடிக்கும் என்று எனக்கு தெரியும்.நீ யாருக்காக பயப்படுகிறாய் என்றும் தெரியும். இதுதான் என் முடிவு என்று சொன்னவன் இதை சொல்லதான் வந்தேன் பாய்........ என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.       

தொடரும்...

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1236}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.