(Reading time: 36 - 72 minutes)

சுவாதியின் காதல் கொண்ட மனம் அவனிடம் அனைத்தையும் சொல்ல தூண்டினாலும் ஏதோ ஒன்று அவளை சொல்ல விடாமல் தடுத்தது.அதனால் அவள் எதுவும் சொல்லாமல் நான் என்ன தவறு செய்தேன்?என்ற ரீதியில் அர்ஜூனை முறைத்து கொண்டு நின்றாள்.கேட்பதற்கு பதில் சொல்லாமல் திமிராக நின்று கொண்டிருந்த சுவாதியை பார்த்த அர்ஜூன் மேலும் கோபமாகி

நீ இப்படி கேட்டால் சொல்லமாட்டாய் வா உன் அம்மாவிடமே அனைத்தையும் சொல்கிறேன்,அப்போது அவர்களிடம் நீ பதில் சொல்லிதானே ஆக வேண்டும் வா என்று இழுத்தான்.

சுவாதி அம்மா என்ற வார்த்தையில் உடைந்து அழுதவள். வேண்டாங்க வேண்டாம் இப்ப உங்களுக்கு என்ன தெரிய வேண்டும் நான் ஏன் இப்படி செய்தேன் என்றுதானே நானே சொல்கிறேன் என்றவள்.

தன் வாழ்வின் அழகான பக்கத்தையும் அந்த ராமால் அலங்கோலமான தன் அக்காவின் வாழ்வையும்,தன் அம்மாவிற்கு நேர்ந்த கொடுமையையும் சொல்லி இருதியாக மாலதி அவளிடம் வாங்கிய சத்தியத்தைபற்றி சொன்னாள்.எங்கும் போகாதவள் தோழியின் திருமணத்திற்கு சென்று இப்படி ஒரு சிக்கலில் மாட்டுவாள் என்று நாங்கள் யாருமே நினைக்கலங்க என்று இத்தனை நாள் சோகத்தையும் தனக்குள் வைத்து குமுறி கொண்டு இருந்தவள் இன்று கேட்க ஒரு ஆள் கிடைக்கவும் அனைத்தையும் அவனிடம் கொட்டி தீர்த்து அவன் மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.  

அந்த ராமை பழி வாங்க நான் தேர்ந்தெடுத்த வழிதான் இந்த பேய் நாடகம்.வேண்டுமென்றே இரவு நேரங்களில் யாராவது வருகிறார்களா என்ற பார்த்து பேய் போல் சிரித்து அவர்களை பயமுறுத்தினேன் முதலில் நம்பாத மக்கள் நாட்கள் செல்ல செல்ல நம்ப ஆரம்பித்தனர்.

அப்படிதான் ராமையும் பயமுறுத்தி அவனுக்கு நிம்மதி இல்லாமல் செய்ய வேண்டும் என்று இப்படி செய்தேன் என்று கூறியவளை கூர்மையாக பார்த்த அர்ஜூன் நீங்கள் இருவரும் டிவின்ஸா என்று கேட்டு அவள்தானா பெயர் தெரியாமல் என் நினைவில் நின்றவள் தானா என்பதை உறுதி செய்து கொள்ள மாலதியன் தோழியின் பெயர் திருமண தேதி, மண்டபம் என்று அனைத்து விவரங்களையும் கேட்டவன் சுக்கு நூறாக உடைந்தான்.

தன் மார்பில் சாய்ந்து அழுதவளை நிமிர வைத்தவன் நீ இப்போது வீட்டிற்கு போ இதற்கான தீர்வை நாளை பேசலாம் என்று அனுப்பி வைத்தான்.அவள் சென்றவுடன் தலையை பிடித்து கொண்டு சிறிது நேரம் அமர்ந்தவன் வேகவேகமாக மாடி படிகளில் ஏறி தன்னுடைய போட்டோவிற்கு பின்னால் இருக்கும் மாலதியின் போட்டோவை பார்த்து கண்ணீர் சிந்தினான்.

 உன் தங்கை சொன்ன அதே திருமணத்தில் தான் நானும் உன்னை பார்த்தேன்.அங்குதான் நான் இந்த போட்டோவை உனக்கு தெரியாமல் எடுத்தேன்.

நீயே என் நினைவு முழுவதும் இருந்தாய் உன்னை மறுபடியும் எப்போது பார்போம் என்று நான் தவித்து கொண்டு இருந்தேன்.இந்த ஊருக்கு வந்து சுவதியை பார்த்து நீ என்று நினைத்து அவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்கு வேறு கொடுத்துவிட்டேனே உன்னை காதலித்துவிட்டு என்னால் எப்படி இன்னோரு பெண்ணை மணக்க முடியும்.என்னால் எதுவும் செய்ய முடியாமல் கொடுத்த வாக்கை காப்பற்ற முடியாதவனாக்கி விட்டாயே என்று போட்டோவை பார்த்து புலம்பியவன் அறியவில்லை அவன் பேசிய அனைத்தையும் சுவாதி கேட்டுவிட்டாள் என்று.

ஆம் அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்று சொல்ல வந்தவள் அர்ஜூனின் புலம்பல் அனைத்தையும் கேட்டு கண்ணில் கண்ணீருடன் அங்கிருந்து சென்றிருந்தாள்.

மறு நாள் யாருக்கும் காத்திராமல் எப்போதும் போல் விடிந்தது.இருவரை தவிர இரவு முழுவதும் தான் மாலதிக்கு துரோகம் இழைத்துவிட்டதாக நினைத்து அர்ஜூனும்,தன் அக்கா காதலித்தவனையா தானும் காதலித்தோம் என்ற குற்ற உணர்ச்சியில் சுவாதியும் வெகு நேரம் அழுதுவிட்டு காலை லேட்டாக எழுந்தனர் ஆளுக்கொரு முடிவுடன்.

சுவாதியிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று அர்ஜூனும்,அஜூ என்று சொல்ல வந்து இனி எப்போதும் அவனை அவ்வாறு கூப்பிடும் உரிமை தனக்கு இல்லை.எல்லோருக்கும் போல் எனக்கும் இனி டாக்டர்தான்.டாக்டரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று சுவாதியும் முடிவெடுத்தனர்.

அதன்படி அர்ஜூனும் ராஜாவுடன் பேசி கொண்டே சுவாதி வீட்டிற்கு சென்று லட்சுமியை செக் செய்துவிட்டு எதுவும் பேசாமல் வந்துவிடுவான்.முதலில் என்றால் அவளிடம் பேசுவதற்காகவே எதாவது கேட்டு கொண்டே இருப்பான்.

சுடு தண்ணீர் வேண்டும்,காட்டன் துணி வேண்டும் என்று.ஆனால் இப்போது அவனின் அமைதி ஓரளவு சுவாதி எதிர் பார்த்திருந்ததால் அவளும் அவன் செக் செய்து போகும் வரை வெளியில் வரவில்லை.விலகி இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அர்ஜூனுக்கு அது கடினமானதாகவே இருந்தது.

சுவாதியை பொறுத்த வரை அர்ஜூன் மாலதியின் கணவன் என்று தன் மனதில் பதியவைக்க முயற்சிகள் மேற்கொண்டு அதில் ஓரளவு வெற்றியும் பெற்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.