(Reading time: 36 - 72 minutes)

மூன்று நாட்களாக சுவாதியை பார்க்காமல் வெறுமையாக உணர்ந்தான் அர்ஜூன்.அம்மாவிடமாவது பேசலாம் என்று கோவில் மலை மீது ஏறினான்.அங்குதான் டவர் கிடைக்கும் என்று.

பெண்கள் அனைவரும் கோவிலுக்கு வருவதை பார்த்து என்ன விசேஷம் என்று அங்கு வந்த பாட்டியிடம் கேட்டான் அர்ஜூன்.

அந்த பாட்டியோ அவனை பார்த்து கிண்டலாக சிரித்து அர்ஜூனன்னு பேரு வச்சதால பொண்ணுங்க மட்டும்தான் உங்க கண்ணுக்குபடுவாங்களா டாக்டர் சார்.இன்னைக்கு ஊரில் பெரிய தலைகளுக்கு எல்லாம் முதல் மரியாதை செய்வாங்க அதற்குதான் இந்த கூட்டம் என்று சொல்லி சிரித்தார்.

அர்ஜூன் கடுப்பாகி அந்த பாட்டியை பார்த்து முறைக்க இந்த காலத்து புள்ளைங்களுக்கு உண்மைய சொன்னா எதுக்குதான் இப்படி கோபம் வருதோ என்று புலம்பிவிட்டு போனார்.

அர்ஜூனின் கோபம் இப்போது இந்த பெயரை வைத்த தன் அம்மாவின் மேல் திரும்பியது.வேகமாக அம்மாவின் நம்பரை டையல் செய்தவன் கோவில் சத்ததில் கேட்காது என்று ஸ்பீக்கரை ஆன் செய்து பேச ஆரம்பித்தான்.

கோவிலுக்கு வந்த சுவாதி அர்ஜூனிடம் பேச வேண்டும் என்று அவன் அருகில் நின்றதால் அவர்களின் பேச்சு அவள் காதிலும் விழுந்தது.

அம்மா........என்று அர்ஜூன் கத்தவும் அந்த பக்கம் சுந்தரி

டேய் மெதுவாடா எனக்கு நன்றாக காது கேட்கும் எதற்கு இப்படி கத்துகிறாய் என்று கேட்டார்.

கத்துகிறேனா உங்களை......எனக்கு ஏன் நீங்கள் அர்ஜூன் என்று பெயர் வைத்தீர்கள் என்று கேட்டான்.

சுந்தரி அந்த பக்கம் சிரிக்கும் சத்தம் கேட்டது

ஏன்டா....இதை கேட்க தான் உன் வேலை எல்லாம் விட்டுவிட்டு வந்து எனக்கு போன் செய்து இந்த கத்து கத்தினாயா என்று கிண்டல் செய்ய.

அர்ஜூனோ சிரிக்குறீங்களா என் பொலப்பே இங்கு சிரிப்பா சிரிக்குது இதில் நீங்கள் வேறு என்னை கடுப்படிக்காதீர்கள் என்று கத்தினான்.

சுந்தரி சரி சரி எனாச்சு ஏன் உனக்கு திடீரென்று இப்படி ஒரு கேள்வி என்று கேட்க சற்று நேரத்திற்கு முன்பு அவனுக்கும் அந்த பாட்டிக்கும் நடந்த உரையாடலை கூறி பாருங்கள் நீங்கள் இந்த பேர் வைத்ததால்தான் அந்த பாட்டியெல்லாம் என்னை கிண்டல் பண்ணுகிறார்கள் என்று புகார் வாசித்தான்.

சுந்தரியோ சரி விடுடா அர்ஜூனன் எவ்வளவு பெரிய வில் வித்தன் தெரியுமா?பெரிய வீரன் எனக்கு மகாபாரதத்தில் பிடித்த கேரக்டர் அதனால்தான் உனக்கு இந்த பேர் இனிமேல் எல்லாம் மாத்த முடியாது.அதுமட்டும் இல்லை உன் மகன் பெயர் கூட யோசித்துவிட்டேன்.

அர்ஜூனின் மகன் அபிமன்யு என்று பெயர் நன்றாக இருக்கிறதா என்று மேலும் அவனை சீண்ட தாயின் சீண்டலை புரிந்து கொண்ட அர்ஜூன்

ஏன் மா?ஏன்? உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி நான் என் மகனுக்கு மாடர்னாக தான் பெயர் வைப்பேன்.உங்கள் இஷ்டபடி உங்க மகனுக்கு பெயர் வச்சீங்க இல்ல,நான் எதாவது கேட்டனா.அது மாதிரி என் இஷ்டபடிதான் என் மகனுக்கு பெயர் வைப்பேன் என்று கண்ணில் கனவுடன் கூறிய அர்ஜூனை பார்த்த சுவாதி அவன் வசீகரத்தில் ஒரு நிமிடம் தடுமாறிதான் போனாள்.

அர்ஜூன் கனவில் சுவாதியும் அவளை போன்று குண்டு கன்னத்துடன் ஒரு மகனை தூக்கி வைத்திருப்பதை போல் நினைத்து பார்த்தான்.சட்டென தலையை உழுக்கி என்ன நினைவு எங்கெங்கோ செல்கிறது.

என் வாழ்வில் திருமணம் என்பது நடக்குமா?அப்படி நடந்தால் என் காதல் பொய்யா என்று மண்டையை போட்டு பிச்சு கொள்ளாத குறையாக யோசித்தான்.அதற்குள்

ஹலோ....ஹலோ..... என்று பலமுறை கத்திவிட்டார் சுந்தரி.

தாயின் குரலில் கவனம் கலைந்தவன் சொல்லுங்க அம்மா என்று குழம்பிய மன நிலையில் பேச ஆரம்பித்தான்.

என்னடா குரலில் சுதி இறங்கிவிட்டது. சுந்தரி

சுவாதி நினைப்பில் இருந்த அர்ஜூன்.சுதியின் நினைவு வந்ததால்தான் பிரச்சனையே என்று சொல்ல கேட்டு கொண்டிருந்த இரு பெண்களும் திகைத்தனர்.

சுவாதியோ என்னை பிரச்சனை என்று சொல்கிறாரே என்று திகைக்க,சுந்தரி என்ன டா சொல்கிறாய் என்ன சுதி என்று புரியாமல் திகைப்புடன் கேட்டார்.

தாயிடம் உளறிய தன் மட தனத்தை நொந்து கொண்ட அர்ஜூன் அது ஒண்ணும் இல்லமா,இங்கு சிக்னல் ப்ராப்ளம் சரியாக கேட்கவில்லை.நான் பிறகு கூப்பிடுகிறேன் என்று கூறி சமாளித்து போனை கட் பண்ணியவனிடம் இருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது.

அப்பாடா.........சமாளிச்சாச்சு என்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.