(Reading time: 36 - 72 minutes)

சரி கோவிலுக்கு செல்லலாம் என்று திரும்பியவனின் பின்னே நின்று கொண்டிருந்தாள் சுவாதி அவளை அங்கு எதிர் பார்க்காத அர்ஜூன் அவளை ஆச்சரியமாக பார்த்து என்னவென்று கோபமாக கேட்டான்.அவளை தள்ளி நிறுத்தும் முயற்சியுடன்.ஆனால் அந்த முயற்சி அவள் பேசி முடிக்கும் போது கோபமாக மாறுவதை உணராமல்.

தன்னுடன் பேசுவதை கூட அவன் விரும்பவில்லை என்பதை அறிந்து அவளுக்குள் உள்ள ரோசம் தலை தூக்க ஆரம்பித்தது.அவனை நேர் பார்வை பார்த்தவள் நீங்கள் என் அக்கா என்று நினைத்துதான் என்னிடம் மணந்து கொள்வதாக வாக்களித்தீர்கள் அதனால் அது செல்லாது.

நான் உங்கள் சத்தியத்தை உங்களிடமே தந்து விடுகிறேன் என்று சொன்னவளை அர்ஜூன் ஆச்சரியமாக பார்க்க நேற்று நைட் அம்மாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று சொல்ல வந்தேன்.நீங்கள் அப்போது மாலுவின் போட்டோ வைத்து பேசி கொண்டு இருப்பதை பார்த்துவிட்டுதான் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டேன்.

நீங்கள் கவலை பட தேவையில்லை மாலதியிடம் நீங்கள் சொன்ன வார்த்தை அது அவளிடமே சொன்னதாக இருக்கட்டும்.அது மட்டும் இல்லாமல் திருவிழா முடிந்து இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தம் என்று ராம் காலையில் வந்து சொல்லிவிட்டு சென்றான் என்று சுவாதி பேச பேச தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்று புரியாமல் பார்த்தவனின் கண்ணில் பட்டது அவளின் அரக்கு நிற புது பட்டு புடவை.

சந்தேகமே இல்லாமல் அவனுக்கு தெரியும் இது அந்த ராம் எடுத்து கொடுத்திருப்பான் என்று.அவன் எடுத்து கொடுப்பதை இவள் எப்படி கட்டலாம் என்ற எண்ணம் தோன்ற அவளை முறைத்தான்.எதற்கு முறைக்கிறான் என்று முதலில் புரியாமல் பார்த்தவள் அவன் கண்கள் புடவையில் இருப்பதை பார்த்து

அது வந்து......என்று தடுமாறி ராம் இந்த புடவைதான் கட்டி வர வேண்டும் என்று கொண்டு வந்து கொடுத்துவிட்டு போனான் அதான்.சரி நான் கிளம்புகிறேன்.என்னால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது என்று கோவிலுக்குள் சென்றவள் எப்போதும் அவள் அமரும் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டு கோபுரத்தை வெறிக்க ஆரம்பித்தாள்.

அர்ஜூனுக்கு முதலில் தோன்றிய எண்ணம் இவளுக்கு எப்படி அவன் புடவை எடுத்து கொடுக்கலாம் என்பதுதான்.வேகவேகமாக கோவிலைவிட்டு வெளியேறியவன் போய் நின்ற இடம் புடவை கடைதான்.அவள் போட்டிருந்த அரக்கு நிற பிளவுஸ்கு ஏற்றவாறு ஒரு அழகான சேலையை வாங்கியவன் மீண்டும் கோவிலுக்கு வந்தான்.அங்கு சுவாதி கோபுரத்தை வெறித்து கொண்டு இருப்பதை பார்த்து கொண்டே நடந்தவனுக்கு அப்போதுதான் ஒன்று உரைத்தது.

நாம் யார் அவளுக்கு புடவை வாங்கி தர.அவன் வாங்கி தந்த புடவையை அவள் கட்டி இருந்தாள் எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது.உடனே அவளுக்கு வேறு புடவை வாங்கி தர வேண்டும் என்ற எண்ணம் ஏன் எனக்கு தோன்றியது என்று யோசிக்கையில்,ஒரு அயோக்கியன் எடுத்து கொடுத்த புடவையை கட்டியிருக்கிறாளே என்ற கோபம் அவனால் எவ்வளவு துன்பம் அனுபவித்து கடைசியில் அவன் வாங்கி தந்த புடவை கட்டியதால்தான் கோபம்.அவனால் தான் என்மாலதி இறந்தால் என்ற கோபம் என்று தனக்கு தானே ஒன்றுக்கும் உதவாத காரணத்தை கண்டுபிடித்தான்.

இந்த சாரியை எப்படி அவளிடம் கொடுப்பது என்று யோசித்து கண்டு பிடித்த ஐடியாவின்படி அவள் அமர்ந்திருக்கும் இடத்தில் வாங்கி வந்த ஒரு பாட்டில் எண்ணெயை ஊற்றினான்.பிறகு ஒன்றும் தெரியாதவன் போன்று அந்த இடத்தைவிட்டு தள்ளி சென்றான்.

பூஜை ஆரம்பிக்க போகிறது வாடி மா என்ற பக்கத்து வீட்டு மாமியுடன் செல்ல எழுந்தவள் எண்ணெயில் கால் வைத்து வழுக்கி கீழே விழ போனாள்.கீழே அவள் விழமல் பிடித்து கொண்ட மாமி.

அடடா........பார்த்து உட்கார கூடாத மா.......பார் எண்ணெயிலேயே உட்கார்ந்து இருக்கிறாய்.சாரி புல்லா நனஞ்சுடுத்து நீ நடக்கும் இடம் எல்லாம் எண்ணெய் சீலையில் இருந்து சிந்தி கொண்டே இருக்கும் இப்படியே எப்படி சாமி கும்பிடுவாய் என்று கேட்டு கொண்டிருந்தார்.

ஏதேச்சையாக வருவது போல் அங்கு வந்தான் அர்ஜூன்.மாமியை பார்த்து சிரித்துவிட்டு ஒன்றும் அறியாதவன் போல் என்ன மாமி பூஜை ஆரம்பிக்க போகுது அங்கு போகாமல் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டவன்,என் அம்மா கூட அம்மனுக்கு புடவை வாங்கி சாத்த சொன்னார்கள் என்று வாங்கி வந்து விட்டேன் எங்கு கொடுப்பது என்ன செய்வது என்று ஒண்ணும் புரியவில்லை.இந்த அம்மாவிடம் எனக்கு அது எல்லாம் தெரியாது என்றால் கேட்க மாட்டேங்கறாங்க என்று புலம்புவது போல் நடித்தான்.உடனே மாமி யோசித்து அந்த புடவையை வாங்கி பார்க்க சுவாதி போட்டிருந்த பிளவுஸ்கு மேட்சாக இருந்தது.

என்ன மாமி நீங்களே கொடுக்க போகிறீர்களா என்று ஆஸ்கர் நடிகன் ரேஞ்சுக்கு அவன் நடிக்க.அவன் எதிர் பார்த்தது போல மாமி அந்த சேலையை சுவாதி கட்டி கொள்ளட்டும் என்று நடந்த விஷயத்தை கூற அவனும் உடனே ஒத்து கொள்ளாமல் அம்மனுக்கு வாங்கியது ஒன்றும் பிரச்சனை இல்லை என்றால் எனக்கும் ஒன்றும் இல்லை என்று பெரிந்தன்மை போல் கூற,சுவாதிக்கு கோபமாக வந்தது.மாமியை பார்த்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.