(Reading time: 36 - 72 minutes)

மாமி பாவம் சார் சாமிக்கு வாங்கி வந்ததை நீங்கள் கேட்கவும் சங்கடபடுகிறார்.இதை அவரிடமே கொடுத்துவிடுங்கள் என்று கூறியவள்.மாமியிடம் இருந்த சேலையை வாங்கி அர்ஜூனிடம் தந்து நீங்கள் போங்க டாக்டர் சார் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று சொல்லிவிட்டாள்.

மீண்டும் மாமியின் பக்கம் திரும்பிய சுதி மாமி நான் அந்த கோவில் கணக்கு பார்க்கும் அறையில் இருக்கிறேன்.நீங்கள் வீட்டிற்கு சென்று வேறு புடவை எடுத்து வாருங்கள் என்றுவிட்டு அந்த அறையை நோக்கி சென்றாள்.

சரி மா,பாவம் அந்த புள்ளைக்கும் எதற்கு மன சங்கடம் என்று கூறி நான் போய்விட்டு வருகிறேன்.அது வரை பத்திரமாக இரு என்று கோவிலைவிட்டு வெளியேறினார். 

கணக்கு பார்க்கும் அறையில் மாமிக்காக காத்து கொண்டிருந்தவள் உட்கார கூட முடியாது.கீழே எல்லாம் எண்ணெய் ஆகிவிடும் நடந்து கொண்டே இருக்க வேண்டியதுதான் என்று நடந்தவள்.வழுக்கிய தரையை பார்த்தாள் அவளுடைய சீலையில் இருந்து எண்ணெய் சொட்டி அறை முழுவதும் எண்ணெயாக இருந்தது.

ச்சே.....இந்த சேரி வேறு என்று எண்ணெய் சொட்டிக்கொண்டிருந்த சேலையை கழட்டி இனி எதற்கும் இது உதவ போவதில்லை.எப்படி அங்கு அவ்வளவு எண்ணெய் வந்தது.எந்த கடன் காரன் கொட்டினானோ என்று கடுப்புடன் நினைத்து சேலையை சுருட்டி ஓரமாக தூக்கி போட்டாள். இன்று நேரமே சரி இல்லை என்று நொந்து கொண்டவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதற்குள் கொண்டு வந்து விட்டீர்களா மாமி என்று நிமிர்ந்தவள் சத்தியமாக அர்ஜூனை அங்கு எதிர் பார்க்கவில்லை.

அர்ஜூனோ ஏன் இந்த சேலை கட்ட மாட்டாலாமா என்ற கோபத்துடன் மாமி கோவிலைவிட்டு வெளியேறியதும் சுவாதி இருந்த அறையை திறந்து உள்ளே சென்றவன் தடுமாறிதான் போனான்.அரக்கு நிற பிளவுஸில் அவளது சிவந்த நிறம் மேலும் கூடி தெரிய அவளின் அழகு அவனை பித்தம் கொள்ள செய்தது.

மேலிருந்து கீழாக தன் பார்வையை ஓடவிட்டவனின் கண்களில் தப்பவில்லை அவளது இடது மார்பின் மேல் பக்கம் இருந்த மச்சமும் இடையில் இருக்கும் மச்சமும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தவனை பார்த்த சுவாதிக்கு ஏகத்துக்கும் கோபம் எகிற தன் கைகளால் மேல் பகுதியை மூடி திரும்பி நின்று கொண்டு பொறிய துவங்கினாள்.

என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் முதலில் வெளியே போங்கள் யாராவது வந்து நம்மை இப்படி பார்த்தாள் என்ன நினைப்பார்கள் என்று சீற அவளின் சத்தத்தில் இருக்கும் இடம் உணர்ந்து இவனும் திரும்பி கொண்டு

சாசாசாரி சாரி.......இஇந்த சேல்யையே கெட்டி கொள் என்று சௌல்லதான் வந்தேன் என்று உளறியவன் ச்ச்ச.......என்று தன் தலையில் அடித்து கொண்டு வெளியே செல்ல திரும்பியவனின் காதில் சுவாதியின் கோபமான நீங்கள் யார் எனக்கு புடவை வாங்கி தர என்ற குரல் தடுத்தது.

உங்கள் புடவை இங்கு யாருக்கும் தேவையில்லை அதனால் போகும் போது உங்கள் புடவையை எடுத்து கொண்டே போங்கள் என்று சொன்னவளை இப்போது நேராக பார்த்தவன் சொந்தம் இருந்தால் தான் புடவை வாங்கி தர வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவுவதாகதான் நான் நினைக்கிறேன் என் மனதில் வேறு எந்த எண்ணமும் இல்லை.

நான் புடவை கட்டுவது இல்லை அதனால் இது என் புடவை இல்லை.உங்கள் மனதில் எந்த எண்ணமும் இல்லை என்றால் இதை கட்டி கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்றவனின் மனதில் ஆயிரம் குழப்பம்.

இவளை பார்க்கும் போது எனக்குள் ஏன் இப்படி ஒரு மாற்றம் ஏற்படுகிறது.இதுவரை எந்த பெண்ணையும் நிமிர்ந்து பார்காத நான் வதுவை பார்க்கும் போது மட்டும் தடுமாறுகிறேனே ஏன்?அவளை பார்க்கும் போது யாரோ ஒரு பெண்ணாக என்னால் பார்க்க முடியவில்லையே ஏன்?அவள் என் உரிமை எனக்கானவள் என்ற எண்ணம் தோன்றுகிறதே ஏன்?அப்போ நான் காதலித்தது வதுவைதானா,மாலதியை இல்லையா?ஒரே குழப்பமாக இருக்கிறதே என்று மண்டையை போட்டு உடைத்து கொண்டவன் முதலில் மாலதி சாவிற்கான தன்டணையை அவனுக்கு வாங்கி தருவோம்.அதுவரை எதைபற்றியும் யோசிக்க கூடாது என்ற முடிவெடுத்தான்.

அடுத்த நாள் எப்போதும் போல் லட்சுமியை செக் செய்ய சென்றவன்.சுவாதி வீடு கும்பலாக இருப்பதை பார்த்து என்னவென்று விசாரிக்க சுவாதி அம்மாவிற்கு ரொம்ப முடியாமல் இருக்கிறதாம் அதனால் இன்றே நிச்சயமும்.ஒரு வாரத்தில் திருமணம் என்று ராம் வீட்டில் இருந்து வந்து பேசி சென்றனர் என்று ஒரு வயதான பாட்டி சொல்லிவிட்டு அந்த பொண்ணு என்ன பாவம் செஞ்சதோ இப்படி ஒரு அப்பனுக்கு மகளா பிறக்க,எந்த அப்பனாவது சொந்த மகளை ஒரு பாளங்கிணற்றில் தள்ளுவனா... எல்லாம் விதி என்று புலம்பிவிட்டு சென்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.