(Reading time: 16 - 32 minutes)

வீட்டிற்குள் நுழைந்த உடனே அவள் பூஜையறையில் இருந்து சூடன் எடுத்து வந்து அவனை அமரச் சொன்னாள்.

அவன் புரியாமல் அவள் சொன்னதைச் செய்தான். அவள் அவன் தலையைச் சுற்றி வாயில் ஏதோ முணுமுணுத்து அதை வீட்டு வாசலுக்கு எடுத்து வந்து ஏற்றிவிட்டு உள்ளே வந்தாள்.

“என்ன பண்ணே?”

‘கொள்ளிக்கண்ணு. கொள்ளிக்கண்ணு.’

அவன் கேட்டதையே காதில் வாங்கதவளாக முணுமுணுத்துக்கொண்டே வந்தவளைப் புரியாமல் பார்த்தான்.

“இப்ப என்ன பண்ணேன்னு கேட்டேன்?”

“ம். இது கூட உங்களுக்குத் தெரியாதா? திருஷ்டி சுத்திப் போட்டேன்.”

“உனக்குக் கொழுப்பு அதிகமாயிடுச்சுடி. திருஷ்டி சுத்திப் போடற வயசா எனக்கு?”

அவன் ‘டி’ போட்டு அழைத்தது அவளுக்குப் பிடித்திருந்த்து.

“எந்த வயசா இருந்தா என்ன? பார்க்கிறவங்க பார்வை எல்லாம

...
This story is now available on Chillzee KiMo.
...

ுத்தானே தெரியும்.’

“என்னடி பேசாம இருக்கே?”

“ம். உங்களுக்குப் பொண்ணைக் கொடுத்துட்டார்ல. அதனால் பேசுவீங்க.”

“ஏன் எனக்கு என்ன குறைச்சல்?”

“ஒன்னும் குறைச்சல் இல்லை. தூக்கம் வருது.”

“சரியான தூங்குமூஞ்சி.”

சிறிது நேரம் எதுவும் பேசாமல் படுத்திருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.