Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 07 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

சட்டென அவனது குரல் மாறி முகம் கோபமாக இருப்பதைக் கண்டு வியந்த மீனாவோ அவன் முன் வந்து நின்றாள்

”என்னாச்சி”

”அவங்க உன்னோட அம்மாதானே”

“ஆமாம்”

“அவங்களைப் பாரு ரொம்ப கஷ்டப்படறாங்,க எதுக்காக இவ்ளோ வேலைகளை அவங்களை செய்ய வைச்ச, உனக்கு பாவமா இல்லையா உங்கம்மாவோட இருந்து உதவி செய்யாம ஊர் சுத்திட்டு வர்ற” என கத்த

”இல்லை நிரஞ்சன் அத்தான்தான் வம்படியா வெளிய போகலாம்னு கூப்பிட்டாரு, அம்மாதான் அனுப்பிவிட்டாங்க”

“போதும் ஏன் இந்த வீட்ல சர்வன்ட்ஸ் இல்லை எல்லா வேலையும் உங்கம்மாதான் செய்யனுமா”

“அம்மாவோட நானும் கூட சேர்ந்து செய்வேன் ஆனா, அத்தான் கூப்பிட்டதால வெளியே போக வேண்டியதா போச்சி”

“நான் கேட்டதுக்கு பதில் இது இல்லை, இந்த வீட்ல ஏன் சர்வன்ட்ஸ் இல்லை, இந்த வேலைகளை செய்ய ஆளுங்களை போடாம உன் அம்மாவை நீ ஏன் கஷ்டப்படுத்தற” என அவன் கத்த அந்த கத்தல் முற்றத்தில் இருந்தவர்களுக்கு கேட்கவே நிரஞ்சனோ

”ஆ இந்த அண்ணாவோட முடியலை, கிடைக்கற கேப்ல எல்லாம் கத்தி ஊரை கூட்டறாரே, இவரை சமாதானம் பண்ணியே 6 மாசம் வேகமாக ஓடிடும் போல, இப்ப என்ன பிரச்சனை நடக்குது யாரோட சண்டை போடறார்னு தெரியலையே” என புலம்ப அதைக் கேட்ட குமரவேலும் வள்ளியும் அவசரமாக சமையல் அறை நோக்கி செல்ல நிரஞ்சனும் அங்கு அமைதியாக கலவரமாக நின்றிருந்த ஆனந்தியிடம்

”ஆனந்தி இங்க என்ன செய்ற, நீயும் வா அண்ணாவை சமாதானம் செய்யலாம் வா” என அழைக்க அவளோ

”நான் சொன்னா அவர் கேட்டுக்குவாரா” என தயக்கமாக கேட்க

”முயற்சி செய் அண்ணாவை லவ் பண்ணா பத்தாது, அவர்கூட பேசவும் செய்யனும்”

“லவ்வா” என வியப்பாக கேட்டவளை அதிசயமாகப் பார்த்தான்

”ஓ அப்ப நீ என் அண்ணாவை லவ் பண்ணலையா” என கேட்க அவளோ என்ன பதில் சொல்வதென தெரியாமல் தவித்தேப் போனாள். அவளின் தடுமாற்றத்தைக் கண்டுச் சிரித்தவன்

”ரொம்ப சந்தோஷம் வாம்மா போலாம்” என சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு சமையல் அறைக்குச் சென்றான்

அங்கு குமரவேலோ ஈஸ்வரன் கேட்ட அனைத்து கேள்விக்கும் பதில் சொல்லி முடித்தார்

”லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா, அதுக்காக இப்படியா உங்க தங்கச்சியை கொடுமைப்படுத்துவீங்க” என ஈஸ்வரன் கேட்கவும் குமரவேல் பயந்தார்

“இல்லைங்க மாப்பிள்ளை நான் எந்த கொடுமையையும் செய்யலை” என அவர் சொல்ல மேகலா அவ்வளவு நேரம் நடக்கும் அனைத்தையும் பார்த்து ஈஸ்வரனை பேசி தடுத்து பார்த்தும் பலனில்லாமல் அமைதியாக ஒதுங்கி நின்றார், அந்நேரம் அங்கு வந்த வள்ளியோ

”மாப்பிள்ளை அவள் ஒண்ணும் இங்க கஷ்டப்படலை, இது அவள் வீடுதானே அவளுக்கு நல்லா சமைக்க வரும், நீங்க வந்திருக்கீங்கள்ல அதான் ருசியா சமைக்கிறேன்னு சொன்னா, நான் வேணாம் நானே செய்றேன்னுதான் சொன்னேன், அவள்தான் கேட்கலை என்னாலயும் இவ்ளோ ருசியா சமைக்க முடியாது, ஏதோ நானும் கூட சேர்ந்து சமைப்பேன், அவளே பிரியப்பட்டு கேட்டதால சமைக்கச் சொன்னேன் மாப்பிள்ளை, மத்தபடி அவங்களை யாரும் இங்க கொடுமைப்படுத்தலை மாப்பிள்ளை” என சொல்லவும் மீனாவோ

”ஆஹா அத்தை இதை உங்ககிட்டயிருந்து நான் எதிர்பார்க்கவேயில்லை, எவ்ளோ அற்புதமா பேசறீங்களே அத்தை, எனக்கு தெரிஞ்சி எங்கம்மாவுக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் இந்த வீட்ல சமையல் அம்மாதான் செஞ்சாங்க, கல்யாணம் ஆகி அப்பா இறந்தப்பின்னாடி திரும்ப இங்க வந்ததும் அம்மாவுக்கே சமையல்கட்டை நீங்க தானமா கொடுத்துட்டீங்க, இன்னிக்கு வரைக்கும் அம்மாதான் முழுநாளும் சமையல் செய்றாங்க, நீங்க சமைச்சி நான் ஒரு நாளும் சாப்பிட்டதேயில்லையே அத்தை, ஏன் மாமா நீங்க அத்தையோட சமையலை சாப்பிட்டிருக்கீங்களா” என மீனா குமரவேலைப் பார்த்து நக்கலாகக் கேட்க வள்ளியோ

”ஏய் மீனா வாயை மூடு, உன் அம்மா இல்லாதப்ப இந்த வீட்ல எல்லாரும் எப்படி சாப்பிட்டாங்களாமா”

“அதானே நான் கேள்விப்பட்டவரைக்கும் இங்க சமையல்காரி இருந்தாள்னும், அவள்தான் சமைச்சி போட்டாள்னும், நானும் அம்மாவும் வந்தபின்னாடி அந்த சமையல்காரியை அனுப்பிட்டு நிரந்தரமா என் அம்மாவை சமையல்காரியா ஆக்கினதா கேள்விபட்டேன்” என உண்மையைச் சொல்ல வள்ளியோ என்ன பதில் சொல்வதென தெரியாமல் பற்களை கோபத்தில் நறநறவென கடித்துவிட்டு

”மாப்பிள்ளை நீங்க வாங்க, இந்த புகையில நீங்க நிக்க வேணாம் வாங்க மாப்பிள்ளை, இனிமேல நானும் சமையல் செய்றேன், ஆனந்தியும் பிரமாதமா சமைப்பாள் மாப்பிள்ளை, அவள் கையால நீங்க சாப்பிட்டா இந்த உலத்தையே மறந்துடுவீங்க” என சொல்லவும் ஆனந்திக்கு திக்கென்றது. அவள் தன் தாயையே பரிதாபமாகப் பார்த்தாள். அவளது பார்வையை வைத்தே ஈஸ்வரன் புரிந்துக் கொண்டான்

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 07 - சசிரேகாsaaru 2018-12-28 06:36
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 07 - சசிரேகாmadhumathi9 2018-12-27 15:38
:clap: (y) really nice epi.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 07 - சசிரேகாmahinagaraj 2018-12-27 09:26
என்ன ஒரு அழகான காவியம் போல கதை போகுது மேம்.. சூப்பர்.... :clap: :clap: :GL:
ரொம்ப பிடிச்சுயிருக்கு... :yes: :lol:
ஈஸ் கேடி... மீனாவும் வேணும், ஆனந்தியும் வேணும்.. என்ன தான் நினைக்கராங்க.. :Q:
பத்மாவதி மீனா இல்லைனா.. ஆனந்தியா.. இல்ல வேறயாராவதா.. :Q:
மீனா செம.. கதை சூப்பரா போகுது மேம்.. :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 07 - சசிரேகாAdharvJo 2018-12-26 18:34
Ish mind la Ena odudhu?? Meen's and Mr ishwar Oda sandai eppo perusa muttika pogudho theriyalai 😍😍 confirm indha scene sinappa than kanavula vara Dharan 😝 nice guy! Oldies ellam.ore kuttai-il vizhandha mataigal facepalm ippadi Oru antique thoughts first indha aunty-k vidudhalai kudunga sasi ma'am bheem.boy vida over ullaipaliya irukanga 😫 ish baby bro mele vachi irukkum love and care simply superb :hatsoff: poor anandhi ninga avanga feelings vachi aduringalo 😝😁 as always suspense filled and interesting update sasi ma'am 👍👏👏👏 look forward to read next update. Indha dreams entha order la varudhu :Q: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top